என் மலர்
இந்தியா

இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பு: மத்திய சுகாதார அமைச்சகம் அவசர ஆலோசனை
- மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
- அவசர கூட்டத்தில் இருமல் மருந்துகளின் பகுத்தறிவு பயன்பாடு மற்றும் மருந்துகளின் தரம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும்.
புதுடெல்லி:
ஆபத்தான ரசாயனம் கலந்த இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்துகிறது. இன்று மாலை 4 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். காணொலி வாயிலாக இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இந்த அவசர கூட்டத்தில் இருமல் மருந்துகளின் பகுத்தறிவு பயன்பாடு மற்றும் மருந்துகளின் தரம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும்.
Next Story






