என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். உள்ளம் மகிழும் செய்தி அதிகாலையிலேயே வந்து சேரும். பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சி உண்டு.

    ரிஷபம்

    மனக்குழப்பம் அகலும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மிதுனம்

    திடீர்ப் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    கடகம்

    சேமிப்பு கரைகின்றதே என்று சிந்திப்பீர்கள். மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே திரும்பி வரலாம். விரயங்கள் அதிகரிக்கும் நாள்.

    சிம்மம்

    வரவு திருப்தி தரும் நாள். செயல்திறன் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். பூமிவாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    கன்னி

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வழக்குகள் சாதகமாகும்.

    துலாம்

    வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தொழில் வளர்ச்சிக்குப் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    விருச்சிகம்

    யோகமான நாள். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துத்தகராறுகள் அகலும்.

    தனுசு

    இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

    மகரம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வியாபார விரோதம் அகலும். கடன்பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும்.

    கும்பம்

    சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். இடம், பூமியால் லாபம் உண்டு.

    மீனம்

    வரவை விடச் செலவு கூடும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்டைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (17.12.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    தி.நகர்: தணிகாசலம் சாலை, ஆற்காடு தெரு, சரவணா தெரு, மெலனி சாலை, நீலகண்ட மேத்தா தெரு, வைத்யராமன் தெரு, ராமசாமி தெரு, தியாகராய சாலை, தீனதயாளன் தெரு, பாசுதேவ் தெரு, வடக்கு போக் சாலை, பனகல் பார்க், பிஞ்சலா சுப்ரமணியம் தெரு, வெங்கடேசன் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, ஜி.என். செட்டி தெரு, சிங்காரவேலு தெரு, சிவப்பிரகாசம் தெரு, ராஜா தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, ராஜாபத்தர் தெரு, ராமன் தெரு, சரோஜினி தெரு, கோபால கிருஷ்ணன் தெரு, விஜயராகவ சாலை, டாக்டர் நாயர் சாலை, நானா தெரு, டேனியல் தெரு, ராஜாச்சார் தெரு, பசுல்லா தெரு, கிரியப்பா சாலை, லோடிகன் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு, உஸ்மான் தெரு, கிரசென்ட் தெரு, சுந்தரம் தெரு, ராஜாம்பாள் தெரு, யோகம்பாள் தெரு, சிங்காரம் தெரு, ஹனுமந்த ராவ் தெரு, ராமராவ் தெரு, சீனிவாச சாலை, ராமச்சந்திரன் சாலை, சாம்பசிவம் தெரு, ராகவய்யா சாலை, பர்கிட் சாலை, தெற்குப் போக் சாலை, சிங்காரவேலன் தெரு, மாசிலாமணி தெரு, வடக்கு கிரசென்ட் தெரு, இந்தி பிரச்சார சபா தெரு

    செங்குன்றம்: சோத்துப்பெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், தேவநேரி, சோழவரம், சிறுணியம், நல்லூர், ஒரக்காடு, புதூர், ஞானேறு, நெற்குன்றம் கும்மனூர், அங்காடு, அருமந்தை.

    பூந்தமல்லி: குயின் விக்டோரியா சாலை, அம்பாள் நகர், சக்கரமங்களா நகர், சரவணா நகர், ஜேம்ஸ் தெரு, சீனிவாச நகர், மல்லியம் நரசிம்மா நகர், பலராமன் நகர், சுந்தர் நகர், சீரடி சாய் நகர், சுமித்ரா நகர், ஏஎஸ்ஆர் சிட்டி எஸ்எஸ்விகே, பக்தவச்சலம் நகர் மற்றும் அவென்யூ மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

    • புதிய மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக மின்வாரியத்திற்கான நிதியை பெறுவதற்கு மத்திய அரசினுடைய நிதி நிறுவனங்கள் நிதியை வழங்க வேண்டும்.
    • படிப்படியாக இந்த பிரச்சனைகள் சரிசெய்யப்படும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொதுமக்கள் மின்சாரத்தை தங்களுடைய வீடுகளிலும், பொது இடங்களிலும் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டும். மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை கடும் நிதி நெருக்கடிக்கு இடையில் தான் செயல்பட்டு வருகின்றன. நிதி நிலைக்கு ஏற்ப மின்வாரியத்தில் சில புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக மின்வாரியத்திற்கான நிதியை பெறுவதற்கு மத்திய அரசினுடைய நிதி நிறுவனங்கள் நிதியை வழங்க வேண்டும்.

    அந்த நிதியை பெறுவதில் தாமதம் இருந்தது. தற்போது அதற்கான நடைமுறைகள் எடுக்கப்பட்டு, பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு, புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டு வருகிறது. அதேபோல் புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக இந்த பிரச்சனைகள் சரிசெய்யப்படும்.

    ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வருகிறபோது, தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடுவதற்கு அது வசதியாக இருக்கும். ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும் என்றார். 

    • கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.
    • பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முடிவை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக நேதன்யாகு கண்டித்திருந்தார்.

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய இருவரும் தந்தை - மகன் என்றும் அவர்கள் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு காரணியாக இருந்தது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றம்சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் நிராகரித்துள்ளார்.

    தேசிய ஊடகங்களுக்கு அல்பனீஸ் அளித்த பேட்டியில், அந்த அங்கீகாரத்திற்கும் போண்டி படுகொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக அவர் நம்புகிறாரா என்று செய்தியாளர் கேட்டபோது, அல்பானீஸ், "இல்லை, நான் அதை சந்தேகிறேன். உலகின் பெரும்பகுதியினர் இரு நாடு தீர்வை மத்திய கிழக்கில் முன்னோக்கிச் செல்லும் வழியாக ஏற்றுக்கொள்கிறார்கள்" என்றும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இது தேசிய ஒற்றுமைக்கான தருணம். நாம் ஒன்றுபட வேண்டும். அசாதாரணமான மற்றும் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.

    இந்த கடினமான நேரத்தில் ஆஸ்திரேலியர்கள் யூத சமூகத்துடன் நிற்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவதே எனது வேலை" என்று கூறினார்.

    பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான ஆஸ்திரேலியாவின் முடிவை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக நேதன்யாகு முன்னதாக கண்டித்திருந்தார். 

    • கிராம சுயராஜ்ஜியமும் ராம ராஜ்ஜியமும் காந்திஜியின் கனவின் இரண்டு தூண்கள்.
    • அவரது கடைசி வார்த்தை 'ராம்'.

    2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சியில் இதற்கான நிதியை பாஜக விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக மாநிலங்கள் குற்றம்சாட்டின.

    இந்நிலையில் 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' என்பதை விரிவுபடுத்தி 'புஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' (Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய பாஜக அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    நேருவை தொடர்நது காந்தி மீது பாஜக வெறுப்பை உமிழ்ந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த பெயர் மாற்றத்தால் என்ன பயன், மேலும் அரசு நிதியை வீணடிக்கும் செயல் என பிரியங்கா காந்தி குறிப்பிட்டார். நாட்டின் மனசாட்சியில் இருந்து காந்தியை அகற்ற துடிக்கும் மோடி மற்றும் பாஜகவின் செயல்திட்டத்தின் ஒரு பகுதி இது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வாதிட்டார்.

    இந்நிலையில் அணமைக் காலங்களாக பிரதமர் மோடி மற்றும் பாஜகவை புகழ்ந்து வரும் திருவனானந்தபுர காங்கிரஸ் எம்.பி சசி தரூர் இந்த பெயர் மாற்றம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பதிவில், "கிராம சுயராஜ்ஜியமும் ராம ராஜ்ஜியமும் காந்திஜியின் கனவின் இரண்டு தூண்கள். அவற்றுக்கிடையே ஒருபோதும் மோதல் இல்லை.

    கிராமப்புற ஏழைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்திலிருந்து மகாத்மாவின் பெயரை நீக்கி அவரது மரபை அவமதிக்காதீர்கள். அவரது கடைசி வார்த்தை 'ராம்'.

    தேவையில்லாமல் ஒரு சர்ச்சையை உருவாக்கி அவரது ஆன்மாவை சேதப்படுத்தாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.  

    • பக்தர்களிடமிருந்து பணம் வசூலித்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
    • கடவுளுக்கு ஓய்வு கொடுக்காமல் சிறப்பு பூஜைகள் செய்வதன் அர்த்தம் என்ன?

    உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் பங்கி பிஹாரிஜி மகாராஜ் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தரிசன நேரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.

    தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இதை விசாரித்தது.

    மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் மற்றும் வழக்கறிஞர் தன்வி துபே ஆகியோர், பங்கி பிஹாரிஜி கோவிலில் தரிசன நேரங்களில் மட்டுமல்ல, பல மத வழிபாட்டு முறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.  மரபின்படி, கடவுளுக்கு ஓய்வு நேரங்கள் உண்டு, ஆனால் அந்த நேரங்களிலும் பக்தர்களிடமிருந்து பணம் வசூலித்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது என்று கூறினர்.

    இதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், கடவுளுக்கு ஓய்வு கொடுக்காமல் சிறப்பு பூஜைகள் செய்வதன் அர்த்தம் என்ன?. பழங்கால விதிகள், நடைமுறைகள் மற்றும் தரிசன நேரங்களைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த வழக்கை விசாரிக்க உயர்மட்ட கோயில் நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    • வகுப்பறையில் ஆசிரியரின் பாடத்தை கவனித்துக்கொண்டிருந்த மாணவனை நோக்கி கத்திய மறைத்து வைத்தபடி நெருங்கினான்.
    • அங்கிருந்து வெளியே ஓடிச்சென்று இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பியுள்ளான்.

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், ராஜ்குருநகரில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் நேற்று காலை 16 வயது மாணவன் சக மாணவனால் குத்திக் கொல்லப்பட்டான்.

    இருவரும் 10 ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், அவர்களுக்கு இடையே கடந்த காலத்தில் ஏற்பட்ட தகராறே கொலைக்குக் காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்

    வகுப்பறையில் ஆசிரியரின் பாடத்தை கவனித்துக்கொண்டிருந்த மாணவனை நோக்கி கத்திய மறைத்து வைத்தபடி நெருங்கிய அந்த மாணவன் திடீரென அவனை குத்தியுள்ளான். இதில் கத்திக்குத்து பட்ட மாணவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். தாக்குதல் நடத்திய மாணவன் அங்கிருந்து வெளியே ஓடிச்சென்று இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பியுள்ளான்.

    கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான், ஆனால் அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • அவர்களை ஒரு பெட்டியின் மீது ஏறி நிற்க வைத்து குதிக்குமாறு தந்தை கட்டளையிட்டு, தானும் அதே போல குதித்துள்ளார்.
    • அதிர்ஷ்டவசமாக மகன்கள் இருவரும் குதிக்காமல் தங்கியதால் உயிர் பிழைத்தனர்.

    பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில்  நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

    அங்குள்ள மிஸ்ரௌலியா கிராமத்தில் மனைவி இறந்த சோகத்தில் இருந்த ஒருவர், தனது மூன்று பெண் குழந்தைகளை தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார்.

    இறந்தவர்40 வயதான அமர்நாத் ராம். அவரது மனைவி ஒரு வருடத்திற்கு முன்பு இறந்த நிலையில், அமர்நாத் ராம் தனது அனுராதா (12), ஷிவானி (7), மற்றும் ராதிகா (6), மகன்களான சிவம் (6) மற்றும் சந்தன் (5) என ஐந்து குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் அமர்நாத் ராம் நேற்று முன் தினம் இரவு, குழந்தைகளின் தாய் பயன்படுத்திய சேலைகளைக் கொண்டே தூக்கு கயிறுகளை உருவாக்கி ஐவரின் கழுத்திலும் இறுக்கி, அவர்களை ஒரு பெட்டியின் மீது ஏறி நிற்க வைத்து குதிக்குமாறு தந்தை கட்டளையிட்டு, தானும் அதே போல குதித்துள்ளார்.

    இதில் அமர்நாத் ராம் மற்றும் அவரது மூன்று மகள்கள் உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக மகன்கள் இருவரும் குதிக்காமல் தங்கியதால் உயிர் பிழைத்தனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர்.

    வீட்டில் சமயலறையில் முட்டை ஓடுகள் கிடைத்துள்ளன.பிள்ளைகளுக்கு முட்டைகளை சமைத்து சாப்பிடச் செய்துவிட்டு இந்த கொடிய முடிவை அமர்நாத் எடுத்துள்ளார்.

    விசாரணை நடைபெற்று வருகிறது. மனைவியின் மறைவுக்குப் பிறகு ஐந்து குழந்தைகளையும் தனியாக வளர்ப்பதில் அவர் சிரமப்பட்டார் என கிராமத்தினர் தெரிவித்தனர்.

    ஒரு தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அழுத்தம் காரணமாக அவர் இம்முடிவை எடுத்ததாக மற்ற சிலர் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து முசாபர்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

    • NIA 8 மாதம் கழித்து தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
    • லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ஆகும்.

    ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காம் பள்ளாத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் குதிரை ஓட்டியை சுட்டுக் கொன்றனர்.

    இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் செய்ததாக குற்றம்சாட்டிய இந்தியா, மே 7 ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவதாக தளங்களை தாக்கி அழித்தது.

    மேலும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 4இல் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

    இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகாமையான NIA 8 மாதம் கழித்து தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    1597 பக்க குற்றப்பத்திரிகை ஜம்மு NIA சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

    அதில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆறு நபர்கள் மீது NIA குற்றம் சாட்டியுள்ளது.

    அந்த அமைப்புகள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ஆகும். இந்த சம்பவத்திற்குப் பின்னால் உள்ள சதியில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

    பயங்கரவாதியாகக் கருதப்படும் சஜித் ஜாட்டைத் தவிர, ஜூலை 29 அன்று ஸ்ரீநகரின் டாச்சிகாமில் இராணுவத்தின் ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    மேலும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பர்வைஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோதர் என்ற இருவரின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஜூன் 22 அன்று கைது செய்யப்பட்டனர்.  

    • அம்ஜத் பதான் என்ற காவல்துறை அதிகாரி வீரமரணடைந்தார்.
    • பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தின் வனப்பகுதியில் பயங்கரவாதிகளுடன் நேற்று நடந்த மோதலில் ஒரு காவல்துறை அதிகாரி வீரமரணம் அடைந்தார்.

    உதம்பூரின் சோஹன் பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் முகாம் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ராணுவத்தினர் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.  அதைத் தொடர்ந்து போலீசார் பயங்கரவாதிகள் இடையே இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் அம்ஜத் பதான் என்ற காவல்துறை அதிகாரி உயிரிழந்தார். 

    துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி காயமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். 

    • 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கியது.
    • மீண்டும் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

    10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கின.

    அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளும் வரும் 23-ந்தேதியுடன் முடிவடைகின்றன.

    இந்நிலையில் மாணவர்களுக்கு டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 4-ந்தேதி வரை 12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    விடுமுறை முடிந்து ஜனவரி 5-ந்தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

    • ஒன்பது குழந்தைகளின் தந்தையான 59 வயதான காஸ்ட், முன்பு இரண்டு முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
    • லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரிக்கு இது முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது.

    தென் அமெரிக்க நாடான சிலியில் வலதுசாரி வேட்பாளர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

    தீவிர வலதுசாரியான கன்சர்வேடிவ் கட்சியின் ஜோஸ் அன்டோனியோ காஸ்டிலோ கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜீனெட் ஜாராவை தோற்கடித்து 58 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

    புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது, வடக்கு எல்லையை மூடுவது, குற்ற விகிதங்களைக் குறைப்பது மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது போன்ற வாக்குறுதிகளுடன் காஸ்ட் பிரச்சாரம் செய்தார்.

    ஒன்பது குழந்தைகளின் தந்தையான 59 வயதான காஸ்ட், முன்பு இரண்டு முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது அவர் வெற்றி பெற்ற நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தென்மேற்கு அமெரிக்காவின் நிலையான நாடுகளில் ஒன்றாக இருந்த சிலி, கோவிட்-க்குப் பிறகு பொருளாதார சரிவை கண்டது.

    அர்ஜென்டினா, பொலிவியா, ஹோண்டுராஸ், எல் சால்வடார் மற்றும் ஈக்வடார் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு லத்தீன் அமெரிக்காவில் வலதுசாரிக்கு இது முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது.   

    ×