என் மலர்
நீங்கள் தேடியது "சர்வதேச தாய்மொழி தினம்"
- ஒரே மொழியை பலவிதங்களில் உச்சரிக்கும் வழக்கமும் உண்டு.
- இந்தியா உலகின் மற்ற நாடுகளை விட தனித்து நிற்கிறது.
தகவல் பரிமாற்றத்தின் அடித்தளம் மொழிகள் தான் எனலாம். ஒவ்வொருவரும் மற்றவர்களின் மொழி மீது மரியாதை கொடுப்பது சிறப்பான முறையில் தகவல் பரிமாற்றம் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். உலகம் முழுக்க ஏராளமான மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், ஒரே மொழியை பலவிதங்களில் உச்சரிக்கும் வழக்கமும் உண்டு.
ஒரு சில கிலோமீட்டர் இடைவெளிக்குள் பல வட்டார வழக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. வட்டார வழக்கு மொழியை கற்பதில் குழப்பத்தை ஏற்படுத்தினாலும், இதுவே உலக பன்முகத்தன்மையின் அழகு. பல்வேறு கலாசாரங்களை கொண்ட நாடு என்ற வகையில், இந்தியா உலகின் மற்ற நாடுகளை விட தனித்து நிற்கிறது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இந்தியாவில் மொத்தம் 780 மொழிகள் பயன்படுத்தப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. உலகளவில் அதிக மொழிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பப்புவா நியூகினியா உள்ளது. இந்த நாட்டில் மொத்தம் 840 மொழிகள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
உலகில் ஏராளமான மொழிகள் பயன்பாட்டில் இருந்தாலும், தாய்மொழி வாயிலாகவே ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்ய துவங்குகிறார். மக்கள் எத்தனை மொழியை தங்களது ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டாலும், தாய்மொழி பற்று இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில், தாய்மொழி சிறப்பை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1952-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி வங்காள மொழியை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். 1999-ம் ஆண்டு சர்வதேச தாய்மொழி தினத்தை யுனெஸ்கோ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றது.
அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சர்வதேச தாய்மொழி தினத்திற்கான தீம்- "பலமொழி கல்வி" ஆகும்.
"பாரம்பரியம் பற்றிய அறிவு மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான வழித்தடங்களாக செயல்படும் தங்களது மொழிகளை பாதுகாப்பதன் மூலம் பன்மொழி மற்றும் பன்முக கலாசார சமூகங்கள் செழித்து வளர முடியும்."
"பல்வேறு மொழிகள் அழிந்து வருவதால் மொழியியல் பன்முகத்தன்மை அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. தற்போது, உலக மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் தங்கள் தாய்மொழியில் கல்வி பெறுவதற்கான வசதிகளை பெற முடிவதில்லை. மேலும், இது குறிப்பிட்ட பகுதிகளில் 90 சதவீதத்தை தாண்டியுள்ளது," என ஐக்கிய நாடுகள் சபையின் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
- கவிஞர் வைரமுத்து தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச தாய்மொழி தினம் உலகம் முழுக்க இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருத்தரும் தங்களின் தாய்மொழியை பேணி பாதுகாப்பது மற்றும் அதன் பெருமையை பரைசாற்றும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் வழங்கியது.
அதன்படி சர்வதேச தாய்மொழி தினத்தன்று தமிழ் திரையுலகின் முன்னணி கவிஞர்களில் ஒருவரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது வாழ்த்து மற்றும் அச்சத்தை பகிர்ந்து கொள்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"இன்று
உலகத் தாய்மொழித் திருநாள்
வாழ்த்து அச்சம் இரண்டையும்
பகிர்ந்து கொள்கிறேன்
தாய் என்ற அடைமொழிகொண்ட
சொற்களெல்லாம் உயர்ந்தவை;
உலகத் தன்மையானவை மற்றும்
உயிரோடும் உடலோடும் கலந்தவை
தாய்நாடு தாய்ப்பால்
தாய்மொழி இவை எடுத்துக்காட்டுகள்
ஆனால்,
உலகமயம் தொழில்நுட்பம்
என்ற பசிகொண்ட பற்கள் இரண்டும்
தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன
உலக தேசிய இனங்கள்
விழிப்போடிருக்கவேண்டிய
வேளை இது
அரசு ஆசிரியர் பெற்றோர்
மாணவர் ஊடகம் என்ற ஐம்பெரும்
கூட்டணிகளால் மட்டுமே
இந்தப் பன்னாட்டுப்
படையெடுப்பைத் தடுக்கமுடியும்
சரித்திரத்தின் பூகோளத்தின்
ஆதிவேர் காக்க
ஓர் இனம்
தாய்மொழி பேணவேண்டும்
எங்கள் தாய்மொழி
எங்கள் அடையாளம்
மற்றும் அதிகாரம்," என்று பதிவிட்டுள்ளார்.
- உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது.
- ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம், 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.
உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. இதன்படியே, நமது பிரதமர் நரேந்திர மோடிகொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம் என்று கூறியுள்ளார்.
- தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல.
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம்.
சென்னை :
சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம்.
தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் பாசிச சூழ்ச்சிக்கும் இதுவே அடிப்படை.
தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது.
இனியும் வீழ்த்தும்.
"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே " - எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம் என்று தெரிவித்துள்ளார்.






