என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "International Mother Language Day"

    • இ.பி.எஸ்.காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்
    • அதிமுக வெற்றிபெற்றால் RSS தான் நாட்டை ஆளும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

    சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் படத்தை இபிஎஸ் பதிவிட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "அதிமுக காவி மயமாகி வருகிறது, பாஜக பிடியில் சென்றுவிட்டது என்பதை பிரதிபலிக்கும் செயல் இது. அதிமுக வெற்றிபெற்றால் RSS தான் நாட்டை ஆளும்" என்று தெரிவித்தார்.

    • திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல.
    • திருவள்ளுவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர்.

    சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைக்கும் வகையில் காவி உடை அணிவித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வுடன் இணைந்தவுடன் அவரின் சிந்தனை காவி மயமாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். திருவள்ளுவர் எந்த ஒரு மதத்திற்கும், சாதிக்கும், அரசியல் கோட்பாட்டிற்கும் கட்டுப்பட்டவர் அல்ல. அவர் மனிதர்களுக்குள் சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியவர். திருவள்ளுவரின் உருவப் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சாயலை ஏற்படுத்துவது தமிழர் பண்பாட்டு மரபுக்கு எதிரான செயல் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.
    • மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன்.

    சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மரபணுவில் உருவாகி, தாய்ப்பாலில் உணவாகி, செவிப்பொறியில் ஒலியாகி உடலுக்குள் உயிராகி நிற்பது என் தாய்மொழி.

    அடிபட்டால் அரற்றவும், உறக்கத்தில் உளறவும், சிரமப் பொழுதுகளில் சிந்தித்திருக்கவும் எனக்குச் சொல்லாகி வருவது தமிழ்.

    அவரவர் தாய்மொழி அவரவர் வாழ்வு. எனக்கென் தாய்மொழி என்றென்றும் என் சுவாசம்.

    மொழியால் உருவானேன். மொழிவதால் வாழ்கின்றேன்.

    தாய்மொழி நாளில் தமிழர்களை வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று உலகத் தாய்மொழிகள் நாள்!
    • நம் தமிழைக் காத்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!

    சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழே நீ வாழ்ந்திடு!

    இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் "தமிழே" என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!

    நம் தமிழைக் காத்து - அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது

    உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை போற்றி பாதுகாத்து, வளர்த்திட நாம் அனைவரும் பாடுபட வேண்டுமென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலகத் தாய்மொழி தினத்தை யொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். #InternationalMotherLanguageDay
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலகத் தாய்மொழி தினத்தை யொட்டி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் தங்கள் தாய்மொழிகளைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில், யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டு தோறும் பிப்ரவரி 21-ம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது.

    திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவும், சீரிளமை குன்றாத மொழியாகவும், வளமையும் தூய்மையும் மிக்க மொழியாகவும், மொழிக்கு மட்டுமல்லாமல் வாழும் நெறிக்கும் இலக்கணம் வகுத்த மொழியாகவும், உலக மொழிகள் அனைத்திலும் தொன்மை மிக்க மொழியாகவும் விளங்குகின்ற நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த இனிய நாளில் போற்றிட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

    தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் வளம் சேர்க்கும் வகையில் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை போற்றிச் சிறப்பிக்கும் வகையில், அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழறிஞர்கள், புலவர்களின் பெயர்களில் பல்வேறு விருதுகளைத் தோற்றுவித்து ஆண்டுதோறும் தமிழறிஞர்களுக்கு வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

    இந்த ஆண்டு முதல், அயோத்திதாசப் பண்டிதர், மறைமலையடிகள் ஆகியோரின் பெயர்களில் புதிய விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், சங்ககாலப் புலவர்களை நினைவு கூரும்விதமாக, தமிழ் கவிஞர் நாளாக கொண்டாடப்படும் ஏப்ரல் 29-ம் தேதி அப்புலவர்களின் நினைவுத் தூண்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவிச் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

    பல்வேறு வகையில் தமிழ் மொழிக்காக பாடுபட்டவர்களுக்கும், பாடுபடுபவர்களுக்கும் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    உலகத் தாய்மொழி நாளான இந்த இனிய நாளில், நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை போற்றி பாதுகாத்து, வளர்த்திட நாம் அனைவரும் பாடுபட வேண்டுமென்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #InternationalMotherLanguageDay

    ×