என் மலர்tooltip icon

    செய்திகள்

    • தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம்.
    • விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க செந்தில்பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்த ED சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    அரசு வேலை வாங்கி தர பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் தளர்வுகளை வழங்கியுள்ளது.

    தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ED விசாரணைக்காக அழைக்கும்பேது அதிலிருந்து விலக்கு தேவை என்றால் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அனுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க செந்தில்பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என ED சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி வழக்கிற்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்றால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • கலிதா ஜியாவை இங்கிலாந்தின் லண்டனுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு.
    • ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு நாளை காலை 8 மணிக்கு தரையிறங்கும் இடம் ஒதுக்கீடு.

    வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80). இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே கலிதா ஜியாவை இங்கிலாந்தின் லண்டனுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவர் நாளை ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் லண்டனுக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.

    இதுதொடர்பாக வங்காளதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது," ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு நாளை காலை 8 மணிக்கு தரையிறங்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 9 மணிக்கு புறப்படும் நேரம் ஒதுக்கப் பட்டுள்ளது" என்றார்.

    இந்த விமானம், ஜெர்மனியை தளமாகக் கொண்ட எப்.ஏ.ஐ விமானக் குழுமத்திடமிருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
    • பரபரப்பாக சென்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலில் நடந்த டி20 தொடரையும் அடுத்து நடந்த ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான ஆட்டத்தில் டிரா ஆனது.இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் 3 பேர் காயம் காரணமாக விலகி உள்ளனர். அதன்படி சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாட்னர், வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி, மற்றும் நாதன் ஸ்மித் ஆகியோர் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகி உள்ளனர்.

    ஹென்றி, ஸ்மித் ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்தனர். மிட்செல் சாடனர் முதல் போட்டிக்கு முன்பே காயத்தால் விளையாடாமல் இருந்தார்.

    இவர்கள் விலகியது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    • விமான நிலைய ரன்வேயில் இருந்து வானில் விமானம் பறந்தது.
    • திடீரென கீழே இறங்கி அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி தீப்பிடித்தது.

    அகமதாபாத்:

    அழகான மாலை நேரம். பார்க்கில் வாக்கிங் செல்பவர்கள் தங்களது நண்பர்களுடன் பேசிக் கொண்டும், காதில் இயர்போன் மாட்டிக் கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்.

    அங்குள்ள பெஞ்சில் 65 வயது பெரியவர் சபேசன் உட்கார்ந்து இருந்தார். அங்குள்ளவர்களை சுற்றிலும் நோக்கினார்.

    அப்போது ஒருவர் வந்து அவரிடம், ஐயா என்னை நினைவிருக்கிறதா என கேட்டார்.

    சரியாக ஞாபகம் இல்லையேப்பா என சபேசன் கூறினார்.

    ஐயா, நான் தங்களிடம் படித்த மாணவன். என பெயர் முருகேஷ் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். படித்து வெளியூர் சென்று விட்டேன். தற்போது தான் இந்த ஊருக்கு வந்துள்ளேன் என்றார்.

    ரொம்ப சந்தோஷம்பா, என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டாய்? என கேட்டார்.

    எங்களுக்கு எளிதில் புரியும் விதமாக ஒரு உதாரணம் சொல்லி தானே சார் நீங்க பாடம் நடத்துவீங்க. அதை எப்படி என்னால மறக்க முடியும் என உற்சாகமாக சொன்னார்.

    நல விசாரிப்புகள் முடிந்தபின் ஊர் உலக நடப்புகள் பற்றிய பேச்சு வந்தது.

    அப்போது அந்த ஆசிரியர், சரி உனக்கு எமன் கிட்ட இருந்து தன் புருஷனை மீட்ட சாவித்ரி பத்தி சொல்லி இருக்கேனே, அதுமாதிரி கடந்த ஆண்டு ஒரு ஆள் எமன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கான் தெரியுமா உனக்கு என புதிர் போட்டார்.

    யாருன்னு எனக்கு சரியா தெரியலையே சார், சொல்லுங்க சார் ஞாபகம் வச்சிக்கிறேன் என்றார்.

    ஆசிரியர் கூறிய விஷயம் இதுதான்:

    குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ஜூன் மாதம் 12-ம் தேதி புறப்பட்டுச் சென்றது.


    ரன்வேயில் இருந்து வானில் பறந்த விமானம் திடீரென கீழே இறங்கி, விமான நிலையத்தின் அருகில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது.

    இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உள்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர்.

    விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பிரிட்டனைச் சேர்ந்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்பவரே அந்த அதிசய மனிதர். விமான விபத்தில் இவரது உறவினர் பலியானதால் சோகத்தில் ஆழ்ந்தார்.

    நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி எனக்கூறிய அவர், பிரதமர் மோடி நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறியது ஊக்கம் அளித்தது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.


    இப்படித்தான் அந்த ஆள் எமன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்தான் என கூறி முடித்த சபேசன், சரி, நான் கிளம்பறேன். வீட்டில் தேடுவாங்க. அடிக்கடி வந்துட்டு போப்பா. வேற யாராவது பார்த்தாலும் இங்க வரச்சொல்லு பேசலாம் என வீட்டுக்கு புறப்பட்டார்.

    தனது பள்ளி பருவ ஆசிரியரை சந்தித்த நிறைவுடன் முருகேசும் வீடு திரும்பினார்.

    • விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த எரிபொருள் டேங்கரில் இருந்து கசிந்த எரிபொருளை மக்கள் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
    • மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு குழுமியிருந்தவர்களில் குறைந்தது 231 பேர் உயிரிழந்தனர்.

    2025 இல் உலகில் பல அழிவுகரமான விபத்துகள் அரங்கேறி உள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவற்றை கால வரிசைப்படி இங்கு பார்ப்போம்.

    98 பேர் உடல் கருகி உயிரிழந்த நைஜீரிய எரிபொருள் டேங்கர் விபத்து

    2025 தொடக்கத்தில் ஜனவரி 18 அன்று நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் சுலேஜா அருகே நிகழ்ந்த கோரமான விபத்தில் 98 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த எரிபொருள் டேங்கரில் இருந்து கசிந்த எரிபொருளை மக்கள் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    78 பேர் பலியான துருக்கி ஹோட்டல் விபத்து

    ஜனவரி 21 அன்று துருக்கியில் புகழ்பெற்ற Ski Resort அமைந்துள்ள கார்தால்காயாவில் ஒரு சொகுசு ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 78 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். ஜனவரி மாத நடுப்பகுதியில், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்தது.

    இரவு நேரத்தில் தீப்பிடித்ததால், பலர் தங்கள் அறைகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், ஹோட்டலின் மரக்கட்டமைப்பு மற்றும் குளிர்சாதன அமைப்புகளால் தீ வேகமாக பரவியதில் விபத்தின் சேதம் பன்மடங்கு அதிகரித்தது.

    55 பேர் மரணித்த குவாத்தமாலா பேருந்து விபத்து

    மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு குவாத்தமாலா குடியரசு. இதன் தலைநகரான குவாத்தமாலா சிட்டியில் உள்ள லாஸ் வேகாஸ் ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்றில் கடந்த பிப்ரவரி 10 அன்று அதிகாலையில் லாஸ் வேகாஸ் ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்றில் இருந்து, பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். பேருந்தில் இருந்தவர்களில் பலர் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளர்கள்.

    59 பேர் பலி மரணித்த நைட் கிளப் விபத்து:

    பால்கன் நாடுகளில் ஒன்றான வடக்கு மாசிடோனியாவில் கோச்சானி நகரில் ஒரு பரபரப்பான இரவு விடுதியில் கடந்த மார்ச் 16 ஏற்பட்ட தீ விபத்தில் 59 பேர் உடல் கருகி இறந்தனர். இந்த விபத்தில் 155 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    தீ விபத்து ஏற்பட்டபோது விடுதிக்குள் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவசரகால வெளியேறும் வழிகள் போதுமானதாக இல்லாததும், நெரிசலும் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

    231 பேர் பலி உயிரிழந்த டொமினிகன் நைட் கிளப் விபத்து

    கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் சான்டோ டொமிங்கோ நகரில் பிரபல பாடகர் ரூபி பெரெஸ் பங்கேற்ற இசை நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 8 அன்று இரவு விடுதி ஒன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் அங்கு குழுமியிருந்தவர்களில் குறைந்தது 231 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்தச் சம்பவத்தில் பாடகர் ரூபி பெரெஸும் உயிரிழந்தார். நிகழ்ச்சியின் போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதும், கட்டிடத்தின் தரமற்ற கட்டுமானமும் இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    148 பேர் பலி உயிரிழந்த காங்கோ படகு விபத்து

    ஏப்ரல் 15 அன்று ஆபிரிக்க நாடான காங்கோவின் மண்டாகா நகருக்கு அருகில் உள்ள காங்கோ ஆற்றில் மரப் படகு தீப்பிடித்துக் கவிழ்ந்ததில் குறைந்தது 148 பேர் உயிரிழந்தனர்.

    மோட்டார் மூலம் ஆற்றில் படகு அதிவேகமாக இயக்கப்பட்டதும் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக இல்லாததும் இந்த விபத்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. படகில் இருந்த பலர் நீச்சல் தெரியாததாலும், தீக்காயங்களாலும் உயிரிழந்தனர்.

    70 பேர் பலியான ஈரான் துறைமுக விபத்து

    ஈரானின் முக்கிய வர்த்தக மையமான பந்தர் அப்பாஸில் உள்ள ஷாஹித் துறைமுகத்தில் ஏப்ரல் 26 பெரும் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    துறைமுகத்தில் சேமிக்கப்பட்டிருந்த எரிபொருள் அல்லது இரசாயனப் பொருட்கள் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஈரானின் ஏற்றுமதி இறக்குமதி செயல்பாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    79 பேர் பலியான ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து

    ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பேருந்து, ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு லாரி மீது மோதிய விபத்தில் 79 பேர் பலியாகினர்.

    159 பேர் பலியான ஹாங்காங் அடுக்குமாடி தீ விபத்து

    நவம்பர் 23 அன்று ஹாங்காங்கில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நெருக்கமாக அமைந்திருந்த கட்டடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 159 பேர் கொல்லப்பட்டதுடன், 150-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். அந்த கட்டடங்களில் மூங்கில் உள்ளிட்ட தீப்பற்றக்கூடிய பொருட்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று பின்னர் தெரிய வந்தது. 

    • நாம் அனைவரும் களத்தில் மிகுந்த தீவிரத்துடன் பணியாற்ற வேண்டும்.
    • நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மூலம், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 86 லட்சம் மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை காணொலி வாயிலாக நடத்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் உயரிய நோக்குடன், பசி, உறக்கம், குடும்பம் ஆகியவற்றைத் துறந்து எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்... வாழ்த்துகள்.

    நாம் இவ்வளவு கடினப்பட்டு இருந்தாலும் பாதி கிணறு தான் கடந்துள்ளோம். வெரிபிகேஷன் பணிகள் நிறைவடைந்து, நமது மக்களின் பெயர்கள் விடுபடாமல் வாக்காளர் பட்டியல் வந்தால் தான் முழு கிணற்றையும் கடந்ததாக கருத முடியும்.

    எஸ்.ஐ.ஆர். பணிகள் வாக்குரிமையை பாதுகாக்கும் அடிப்படைப் பணியாக இருந்தால்,

    "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்பது நமது வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பணியாகும்.

    எனவே, நாம் அனைவரும் களத்தில் மிகுந்த தீவிரத்துடன் பணியாற்ற வேண்டும். உங்கள் ஆற்றலுக்கும் உழைப்புக்கும் முன் எவராலும் நிற்க முடியாது.

    எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை அணிகள் செயல்பட்டாலும், தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான். உங்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இதை கூறவில்லை. இது தான் உண்மை.

    நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மூலம், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 86 லட்சம் மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். இதில் பயனாளிகளுடன் சேர்த்து, கழகத்தினரையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    முந்தைய ஆட்சிக்காலங்களில் மழை பெய்தாலே உதவிக்காக காத்திருந்த நிலையும், நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கும் முறையும் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை மக்களுக்கு களத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

    நமது சிறப்பான பணிகளைப் பார்த்து நடுநிலை வாக்காளர்களும் இன்று நமக்கு ஆதரவாக நிற்கின்றனர். மொத்தமாக, பயனாளிகள்-கழகத்தினர்-நடுநிலை வாக்காளர்கள் என சேர்த்தால், இரண்டு கோடியே ஐம்பது லட்சம் வாக்குகளை தாண்டுவது சாத்தியமே.

    கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் நமது கூட்டணி பெற்ற வாக்குகள் 2 கோடியே 9 லட்சம் வாக்குகள் தான். இந்த முறை, அதைவிட கூடுதலாக அதிக வாக்குகளைப் பெறுவது உறுதி.

    இந்த புள்ளிவிவரங்களை முன்வைத்து, உங்கள் களப்பணியின் மீது உள்ள நம்பிக்கையோடு தெளிவாகக் கூறுகிறேன். நாம்தான் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளோம்.

    இத்தனை சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நம் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. சி.பி.ஐ, ஈ.டி, ஐ.டி, தேர்தல் ஆணையம், இவையனைத்தையும் அவர்கள் நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள்.

    தினந்தோறும் எராளமான பொய்கள் பரப்புவார்கள், போலியான பிம்பங்களை உருவாக்கு வார்கள், ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்ச் செய்திகளை பரப்புவார்கள்.

    இவற்றை எதிர்கொள்ள, நமது பலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். கொள்கை தான் நமது பலம். நிர்வாகிகள் தான் நமது பலம். தீயாக உழைக்கும் கழக உடன்பிறப்புகள் தான் நமது பலம். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள கழக கட்டமைப்பு தான் நமது பலம்.

    இந்த பலங்களை மிகத் துல்லியமாகப் பயன்படுத்துவதே நமது முக்கியமான வியூகம் ஆக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது வாக்குகளை உறுதி செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நமது கழகத்தினர் உற்சாகத்துடன் செயல்பட வைக்க வேண்டும்.

    அதற்காகத்தான், "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற இந்தப் பரப்புரை. அந்தந்த வாக்குச்சாவடிக்குட்பட்ட மாநில நிர்வாகி முதல், வார்டு மற்றும் கிளைச் செயலாளர்கள் வரை அனைவரையும் இந்தக் கூட்டங்களில் பங்கேற்க அழைக்க வேண்டும்.

    அந்த வாக்குச்சாவடியில் மூத்த கழக முன்னோடிகள் அல்லது ஏதேனும் அதிருப்தியாளர்கள் இருந்தால், அவர்களையும் தவறவிடாமல் அழைக்க வேண்டும்.

    தேனாம்பேட்டையில், என் வாக்குச்சாவடியில் பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நானும் நேரடியாகப் பங்கேற்பேன்.வீடு வீடாகச் செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

    ஒவ்வொரு பூத் கமிட்டி உறுப்பினரும் வீடு வீடாகச் செல்லுவதை உறுதி செய்யுங்கள். வீடுவீடாக சென்று விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை முறையாக சரிபார்க்க வேண்டும்.

    ஒவ்வொரு வீட்டிலும், திராவிட மாடல் அரசின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். நான் இரவிலும் உறங்காமல் உழைத்து வருகிறேன் என்பது உங்களுக்கே தெரியும்.

    அதே அளவிலான உழைப்பை, உங்களின் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் எதிர்பார்க்கிறேன். ஒரு வாக்குச்சாவடியை வென்றால், ஒரு தொகுதியை வெல்லலாம். எனவே, இந்தத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியும் மிக முக்கியமானது.

    உங்கள் வாக்குச்சாவடியில் வெற்றி பெற வேண்டிய பொறுப்பை உங்களிடமே ஒப்படைக்கிறேன். ஒவ்வொருவரும் தங்களது வாக்குச்சாவடிகளில் வென்று வருவீர்கள் என்ற முழு நம்பிக்கையுடன் இந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன். என் நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.

    மீண்டும் வெல்வோம், வரலாறு படைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதை பழக்கத்தால் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது.
    • விஜயகாந்த் வருகை போல விஜய் வருகை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

    திருப்பூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநகர மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதை பழக்கத்தால் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. அப்படி இருந்தும் தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் வெற்றி பெற்றது உறுத்திக்கொண்டுள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்த சில கட்சிகள் பிளவுபட்டுள்ளது. த.வெ.க. வரவு என எல்லாவற்றையும் ஆலோசித்து தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் இதனை கண்காணிக்காவிடில் தி.மு.க.வை வீழ்த்த முடியாது.

    த.வெ.க. தலைமையில் பெரும் கூட்டணி அமைந்தால் இந்தியா கூட்டணியை 3-வது இடத்திற்கு தள்ள வாய்ப்பு உள்ளது. தி.மு.க., ஆட்சியில் பல துறைகளில் ஊழல் முறைகேடு உள்ளது. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தார்கள். தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

    தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்தால் தான் மிருக பலத்துடன் உள்ள தி.மு.க.வை வீழ்த்த முடியும். வெற்று விளம்பர ஆட்சியாக உள்ளது. அதனை எதிர்க்கட்சிகள் சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    அ.தி.மு.க.வில் ஒரு சிலரின் சுயநலத்தால் விழுதுகள் போன்ற பலரை நீக்கி விட்டு நாங்கள் துரோகி என்கிறார்கள். 99 சதவீத தொண்டர்கள் மன வருத்தத்திலும் வேதனையிலும் உள்ளனர். சரியான முடிவு எடுக்காவிடில் தேர்தல் பாடம் தரும். செங்கோட்டையன் எங்களோடு நட்பாக உள்ளார். அதற்காக எங்களுடன் தான் பயணிக்க வேண்டும் என்பதில்லை. அவர் விருப்பம் போல் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.

    நான் எதார்த்தத்தை நாட்டு நடப்பு பற்றி பொறாமை இல்லாமல் சொல்கிறேன். த.வெ.க. வளர்ந்து வரும் கட்சியாக தெரிகிறது. விஜயகாந்த் வருகை போல விஜய் வருகை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் பல மக்கள், பெண்கள் ஆதரவை பெற்றவர். முதலில் எங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறோம். விஜய் தலைமையில் நல்ல கூட்டணி அமைந்தால் ஆளும் தி.மு.க.விற்கு போட்டியாக அமையும்.

    3-வது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் தான் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்பதால் தான் அவர்கள் கூட்டணிக்கு சென்றோம். தொண்டர்களின் முடிவால் தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளோம். பா.ஜ.க. எங்களிடம் நட்போடு பேசினாலே மிரட்டுவது போல பரப்பி வருகின்றனர். அ.ம.மு.க. எந்த கூட்டணியில் இருந்தாலும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் முன்னாள் மேயர் விசாலாட்சி போட்டியிடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை வேறோடு வீழ்த்துவோம்.
    • அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுங்கள். ஒற்றுமை இல்லாமல் எந்த இலக்கையும் அடைய முடியாது.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தெரிகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்து தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

    இதற்காக வாக்குச்சாவடி வாரியாக பாக முகவர்கள் தி.மு.க.வில் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரையும் அந்தந்த நகர ஒன்றிய பேரூர் அளவில் ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாகவும் பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மண்டல அளவில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி முடித்துள்ளனர். இதன் பிறகு என் வாக்குச் சாவடி-வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி கூட்டத்தை மாமல்ல புரத்தில் கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி நடத்தினார்.

    ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார். இப்போது என் வாக்குச் சாவடி-வெற்றி வாக்குச் சாவடி செயல்பாடு எப்படி உள்ளது என்பது பற்றி ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக மாவட்டக் கழக யெலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அவரது அறிவுரைகளை கேட்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநகர ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற, உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர் கள் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் அமர வைத்து முதலமைச்சரின் பேச்சை கேட்பதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அதன்படி காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் உரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழ்நாட்டை கபளீகரம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை வேறோடு வீழ்த்துவோம். ஒன்றிய பி.ஜே.பி. அரசு தமிழ்நாட்டுக்கு செய்து கொண்டிருக்கும் துரோகங்களை நிதி ஒதுக்கீடுகளில் செய்து கொண்டிருக்கும் வஞ்சகங்களை எடுத்துச் சொல்லுங்கள். நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரவர் வாக்குச்சாவடியில் வெற்றி பெறுவது இலக்காக இருக்க வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு டார்கெட் உருவாக்கி செயல்படுங்கள்.

    தேர்தலில் பணியாற்றும் ஒவ்வொருவரும் தி.மு.கழகம் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கை உள்ளத்தில் தாங்கி உழைக்க வேண்டும். நீங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும் இன்னும் உங்கள் பணியை வேகப்படுத்துங்கள்.

    அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுங்கள். ஒற்றுமை இல்லாமல் எந்த இலக்கையும் அடைய முடியாது. நம்முடைய வெற்றியை யாரும் தடுக்க முடியாது.

    என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று ஒவ்வொரு கழக உடன் பிறப்புகளும் உறுதியேற்று களப்பணியாற்றினால், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026-ல் 7-வது முறையாக தி.மு.கழகம் ஆட்சி அமைவது உறுதியாகி விடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
    • நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட செயலாளர்களிடம் பேசினார்.

    திருச்சி:

    என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

    அதில் காணொளி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட செயலாளர்களிடம் பேசினார்.

    இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,

    அமலாக்கத்துறை இரண்டாம் முறையாக தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பதில் அளித்து அங்கிருந்து அமைச்சர் புறப்பட்டு சென்றார்.

    • துணை நடிகைகள் பலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • யார் யாரெல்லாம் போதை பொருள் பயன்படுத்தினர் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    போதைப்பொருள் விற்பனை சப்ளையில் ஈடுபட்டதாக திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீன், முகப்பேரைச் சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் கடந்த 20-ந்தேதி கைது செய்தனர்.

    சர்புதீனின் காரில் இருந்து 27.91 லட்சம் ரூபாயும், சீனிவாசன் வீட்டில் 10 கிராம் ஓ.ஜி. கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து திருமங்கலம் போலீசார் 3 பேரையும் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சர்புதீன், தொழில்அதிபர் சரத் ஆகியோரை திருமங்கலம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    சர்புதீன் நடிகர் சிம்புவிற்கு மேலாளராக பணியாற்றி உள்ளார். பல நடிகர்கள், நடிகைகளுடன் பழக்கமுடையர். இதனால் அதில் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார்? என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் எந்தெந்த சினிமா விருந்துகளில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது? அதில் கலந்து கொண்ட திரை உலகினர் யார் யார் என்பது தொடர்பாகவும் சர்புதீனிடம் விசாரணை நடத்தி பட்டியலை தயாரித்தனர்.

    இந்த நிலையில் சர்புதீன் கொடுத்த தகவலின் பேரில் திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து துணை நடிகைகள் பலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் யாரெல்லாம் போதை பொருள் பயன்படுத்தினர் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் பிரபல நடிகைகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தருமபுரி மாவட்டத்தை தி.மு.க. புறக்கணித்துள்ளது‌.
    • தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இப்போது 13 சதவீத வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரியில் பா.ம.க. மூத்த நிர்வாகி இல்ல திருமணத்திற்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வருவது போல் இல்லை. தி.மு.க. ஒரு துரும்பை கூட செய்யவில்லை. சிப்காட் தொழிற்சாலை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலைகள் வரவில்லை.

    தருமபுரி மாவட்டத்தை தி.மு.க. புறக்கணித்துள்ளது. அதற்கு வருகிற தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். வருகிற டிசம்பர் 17-ம் தேதி எனது தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    அதற்கு தி.மு.க.வை தவிர, அனைத்து கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பீகாரில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே காரணம். தமிழ்நாட்டில் சமூக நீதியை மு.க.ஸ்டாலின் குழித் தோண்டி புதைந்துள்ளார்.

    கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, ஒப்பந்தத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுதான் சமூக நீதி.

    தமிழ்நாட்டில் நகாராட்சி துறையில் ரூ.888 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றப்பத்திரிகையை, காவல் துறைக்கு கொடுத்துள்ளனர்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியாளர் பணிக்கு ரூ.25 லட்சம் வரை ஹவாலா பணம் வந்ததாக 232 பக்கம் அறிக்கை கொடுத்தும் இந்த அரசு விசாரணை நடத்தவில்லை. ஆனால் இந்த செய்தி வெளியானதற்கு விசாரணை நடத்துகிறார்கள். மணல் கொள்ளை நடந்துள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

    கூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 505 வாக்குறுதிகளை கொடுத்தார்கள். இப்போது 13 சதவீத வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

    தொழிலாளர்கள் முதலீடு முழுமையாக வந்ததாக முதலமைச்சரும், அமைச்சரும் பொய்யாக கூறுகிறார்கள். 9 விழுக்காடு தான் முதலீடு வந்துள்ளது. 80 முதலீடு வந்ததாக சொன்னவர்கள். தற்போது 23 சதவீதம் வந்துள்ளது என சொல்கிறார்கள்.

    தமிழ்நாட்டிற்கு வராமல், ஆந்திரா, தெலுங்கானாவுக்கு, தொழில் நிறுவனங்கள் செல்கிறது. இதற்கு தி.மு.க.வின், கலெக்சன், கமிசன் கராப்சன் அதிகம் என்பதால், இங்கு வருவதில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள்.
    • இந்தியாவின் போர் முழக்க பாடலாக வந்தே மாதரம் இருக்க வேண்டும்.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.

    வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பாராளுமன்றத்தின் சிறப்பு விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவையில் வந்தே மாதரம் பாடல் சிறப்பு விவாதத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

    மக்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * புனித பாடல் குறித்த விவாதத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.

    * இந்திய நாட்டின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றிய பாடல் வந்தே மாதரம்.

    * வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள்.

    * தலைமுறைகளைக் கடந்து உத்வேகம் அளித்து வருகிறது வந்தே மாதரம் பாடல்.

    * வந்தே மாதரம் பாடலில் நூற்றாண்டு விழா, நெருக்கடி நிலையின்போது தற்செயலாக அமைந்து விட்டது.

    * வந்தே மாதரம் பாடலால் தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது.

    * இந்த விவாதத்தின் மூலம், எதிர்கால சந்ததியினர் வந்தே மாதரம் குறித்து கற்பிக்கப்படுவர்.

    * இந்தியாவின் போர் முழக்க பாடலாக வந்தே மாதரம் இருக்க வேண்டும்.

    * God Save the Queen பாடலை இந்தியர்கள் பாட வேண்டும் என பிரிட்டிஷார் விரும்பினர்.

    * பிரிட்டிஷாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்தே மாதரம் பாடல் அமைந்தது.

    * இந்தியர்களின் உறுதியை பறைசாற்றும் பாடலாக வந்தே மாதரம் விளங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×