என் மலர்
சினிமா செய்திகள்
- 2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல்.
- சலார் பாகம் ஒன்றை இயக்கி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார்
2014 ஆம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார் பிரசாந்த் நீல். அதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தை இயக்கினார்.
இப்படத்தின் மூலம் உலகத்தையே கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். கே.ஜி.எஃப் பாகம் 1 மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் பாகம் இரண்டை இயக்கினார்.
கே.ஜி..எஃப் 2 ஒரு பான் இந்திய படமாக அமைந்தது. கே.ஜி.எஃப் திரைப்படம் கன்னட சினிமாவின் அதீக வசூலித்த படங்கள் பட்டியலில் 4-ஆம் இடத்தை பெற்றுள்ளது. 1500 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக சலார் பாகம் ஒன்றை இயக்கி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார். சலார் வெற்றியைத் தொடர்ந்து சலார் பாகம் இரண்டை நடிகர் பிரபாஸ் வைத்து இயக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜூலை மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆரின் 31 படத்தை இயக்கவுள்ளார் அற்கடுத்து கே.ஜி.எஃப் இன் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'சபரி' திரைப்படம்
- மே 3, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.
இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'சபரி' திரைப்படம் மே 3, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர்.
எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'சித்தா' பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது.
'சித்தா' பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, துஷரா விஜயன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சியான் 62' படத்தை ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது. இப்படத்தின் டைட்டில் 'ப்ரோமோ' விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17- ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டனர். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் தற்பொழுது 1 டே டூ கோ என்ற புது போஸ்டரை சீயான் விகரம் அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவரின் முகம் முழுவதும் ஒரு துணியால் சுற்றி இருக்கிறது. அவரின் கண் மட்டும் வெளியே தெரிகிறது. ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிக்ப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கிராமத்து பெண் போல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் பாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளார்
ரஜினி நடித்த காலா, அரண்மனை-3, நான் கடவுள் இல்லை, திருட்டு வி.சி.டி. உள்பட பல்வேறு தமிழ், மலையாள படங்களில் நடித்து வருபவர் சாக்ஷி அகர்வால். தற்போது மலையாளத்தில் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக தற்காப்பு கலை பயிற்சி, களறி பயிற்சிகளை பயின்று வந்தார்.
மேலும் கிராமத்து பெண் போல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மருமகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழில் இவருக்கு பல படங்கள் கைவசம் உள்ளன.
மேலும் கன்னடம், மலையாளம் மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், பல மொழிகளிலிருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குவிகிறது.தமிழில் வித்தியாசமான வேடங்கள் மூலம் கதாநாயகியாக அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என அசத்தி வருகிறார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் சாக்ஷி நடிக்க இருக்கிறார்.

மேலும் சாக்ஷிக்கு தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து, பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் பாலிவுட் படத்திலும் அவர் நடிக்க உள்ளார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'
- இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.
இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வித்தியாசாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
படத்தின் பாடலான ஆஞ்சி ஆஞ்சி மற்றும் ஓட்டு கேட்டு பாடல்கள் சென்ற வாரம் வெளியானது. இதைத்தொடர்ந்து உயிர் தமிழுக்கு படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணி கதைக்களத்தோடு இப்படம் உருவாகியுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மோகன் 'ஹரா' என்ற ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
- இப்படத்தில் 93 வயது சாருஹாசன் தாதா வேடத்தில் நடித்துள்ளார்
'மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்.இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.
80- 90 ம் ஆண்டுகளில் புகழின் உச்சியில் இருந்த இவர் ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி, நளினி உள்ளிட்ட நடிகைகளுடன் பல படங்களில் நடித்தார். ரேவதியுடன் நடித்த 'மெளன ராகம்' படத்தின் பாடல்கள் மோகனுக்கு பெரும் பெயர் பெற்று தந்தது.
தற்போது விஜய்யின் 'கோட்' படத்தில் மோகன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் நீண்ட காலமாக சினிமாவில் ஒதுங்கி இருந்த மோகன் தற்போது 'ஹரா' என்ற ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில்,குஷ்பு, யோகி பாபு, சாருஹாசன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார். இந்த படத்தை, கோயம்புத்தூர் மோகன் ராஜ் , ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.இப்படத்தை விஜய் ஸ்ரீஜி இயக்கி வருகிறார்.

'ஹரா' படத்தின் 'டீசர்' வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய தயாரிப்பாளர் மோகன் ராஜ் பேசியபோது "இது நாங்கள் தயாரிக்கும் 2- வது திரைப்படமாகும். இப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்படுகிறது. இந்த படம் மீண்டும் மோகனுக்கு வெற்றியை பெற்று தரும்.
இப்படத்தில் 93 வயது சாருஹாசன் சிறப்பாக நடித்துள்ளார். டான் என்றாலே எதிர்மறை எண்ணம் வருவது இயல்பு. ஆனால் இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் தாதா வேடத்தில் அவர் நடித்துள்ளார்" என்றார்
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் ‘தி கோட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷியாவில் நடந்து வருகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் தமிழ் புத்தாண்டிற்கு வெளியானது. மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
'தி கோட்' படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு 5, 6 முறை எங்கள் வீட்டுக்கு வந்து விஜய் நடித்து வரும் படத்தில் விஜயகாந்த் தோற்றம் இடம்பெறுவது பற்றி என்னிடம் அனுமதி கேட்டார்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலமாக விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார். விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறி இருந்தார்.
விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருந்து நான் யோசிக்க வேண்டும் அவர் இருந்திருந்தால் அவர் விஜய்க்கு என்ன சொல்லி இருப்பார்? செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும்.
எஸ்.ஏ. சந்திரசேகர் மீதும் விஜய் மீதும் அவருக்கு எப்போதும் மிகப் பெரிய பாசம் உண்டு. எனவே ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் கேப்டனை படத்தில் கொண்டு வருவது குறித்து அவர்கள் கேட்கும் போது விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்து இருக்க மாட்டார்.
விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவாக கூறுகிறேன் என்று சொன்னேன். வெங்கட் பிரபுவிடம் உனக்கும் விஜய்க்கும் என்னால் நோ சொல்ல முடியாது என்று அந்த நேர் காணலில் கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்
- விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரஜினி நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்
தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பழங்குடி இன பெண்ணாக நடித்த மாளவிகா மோகனனின் தோற்றம் மிரட்டலாக இருந்தது.
இவர் இந்தி மொழியில் உருவாகும் 'யுத்ரா' என்ற படத்தில் நடித்து வருவதுடன் ரன்பீர் கபூருடன் அனிமல்-2 படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர் மாளவிகா மோகனன். தனது கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவது அவரின் வழக்கம்.
இன்ஸ்டாகிராமில் அவருக்கு 4 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். இந்நிலையில் கடற்கரை ரிசார்ட்டில் தங்கியுள்ள மாளவிகா மோகனன் ஓட்டல் அறையில் பிகினி உடையில் செல்பி எடுத்தபடி நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் மிக உற்சாகத்துடன் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர். மாளவிகா மோகனனனின் இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.
- பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
நேற்று இரவு நடந்த கல்யாண ரிசப்ஷனில் மொத்த திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கர் படத்தில் பிரமாண்டத்தை காண்பித்து நாம் பார்த்து இருக்கிறோம்,. ஆனால் நிஜத்தில் ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை தன் மகளுக்காக நடத்தி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், ரன்வீர் சிங், அட்லீ, வெற்றிமாறன், ஏ.ஆர் ரகுமான், மோஹன்லால், நெல்சன் திலிப்குமார், அனிருத், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
அதைத்தொடர்ந்து ரன்வீர் சிங் பாட்டு டீ.ஜே கவுதமிடம் வாத்தி கம்மிங் பாடலை ஒலிக்க செய்து , மகிழ்ச்சியாக மணமக்களான ஐஷ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயனுடன் குத்தாட்டம் ஆடினார். இவர்களுடன் அதிதி ஷங்கர் மற்றும் அட்லீ இணைந்து ஆடினர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.
- வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.
கடந்த ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
அதைத் தொடர்ந்து ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.
ரஜினிகாந்த். படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. சில வாரங்களுக்கும் முன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.
அதில் ரஜினிகாந்தின் கை, தங்க கைக்கடிகாரங்களால் வடிவமைக்கப்பட்ட விலங்கில் மாட்டி இருக்கும். அவருக்கும் பின்னால் ஒரு பெரிய கடிகார வடிவமைக்கிபட்டிருக்கும்.
அந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ கதைக்களத்தில் ஒரு அங்கமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.
மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது. ரஜினியின் தலைவர் 171 படத்துக்கு 'கழுகு' என்று டைட்டில் பெயர் சூட்டப்பட்டு இருக்க்கிறது என தகவல் வெளியாகியது.

இந்நிலையில் அடுத்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் மோகன் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

படத்தின் ப்ரொமொ வீடியோ படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த வாரத்தில் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.
- முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் 'கண்ணப்பா' எனும் தெலுங்கு படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. ஃபேண்டசி டிராமாவாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்படுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சு இப்படத்தில் கண்ணப்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்து கடவுளான சிவனை வழிப்படும் தீவிர பக்தனான கண்ணபரை பற்றிய கதையாகும் இது. மோஹன்லால் மற்றும் பிரபாஸ், சிவன் கதாப்பாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இந்தி திரையுலகில் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் அக்ஷய் குமார். அவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளார். இதுவே அவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படமாகும். படப்பிடிப்பு பணிகள் இந்த மாதம் ஆரம்பிக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அக்ஷய் குமார் கண்ணப்பாவின் இயக்குனர் மற்றும் விஷ்ணு மஞ்சு சந்தித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தின் முதல் 'சிங்கிள்' நாளை (17- ந்தேதி) மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.
- இப்படத்தின் 'ரிலீஸ்' தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் தற்போது 'தேர்தல்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'சேத்துமான்' பட புகழ் இயக்குனர் தமிழ் இயக்கி வருகிறார்.
'அயோதி' புகழ் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் புதுமுகம் ரிச்சா ஜோஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 'ரீல் குட் பிலிம்ஸ்' ஆதித்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துஉள்ளார். .படப்பிடிப்பு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த படம் அரசியலை பின்னணியாக கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது
நடிகர் விஜயகுமாருக்கு இளம் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். துணிச்சலாக ஆரம்பத்திலேயே அரசியல் கதையில் அவர் நடித்து உள்ளது ரசிகர்களை வியக்க வைத்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 'எலெக்ஷன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. இந்த படத்தின் முதல் 'சிங்கிள்' நாளை (17- ந்தேதி) மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இந்த பாடலுக்கு 'தேர்தல் பாடல்' என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் 'ரிலீஸ்' தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






