என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மீரா மஹதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
    • வித்யாசாகர் இசையில் இப்படம்  வெளியானது.

    இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டபுள் டக்கர். ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இப்படம்  வெளியானது.

    மேலும் இப்படத்தில் கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான 'டபுள் டக்கர்' ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது.

    பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டி வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு பெருமளவில் கிடைத்துள்ளது. ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு இருக்கிறது.

    • வலுவான உடல் உள்ளவர்கள் செய்வது, உங்களால் முடியுமா?
    • இவர்களால் முடியாதது எதுவுமே இல்லை, இவர்களால் எல்லாமே முடியும்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ். திரையுலகில் நடிகர் ஹீரோ என்பதை கடந்து, நிஜ வாழ்வில் பலருக்கு உதவி செய்து வருகிறார். தமிழர்களின் பாரம்பரிய "மல்லர் கம்பம்" சாகச கலை நிகழ்வு, இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருந்தது.

    தற்போது ராகவா லாரன்ஸ்-இன் "கை கொடுக்கும் கை" மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற "மல்லர் கம்பம்" சாகச நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

     


    தொடர்ந்து பேசிய ராகவா லாரன்ஸ், "எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளி குழுவினர் தான். எனக்கு எப்போது தளர்வாக இருந்தாலும், இவர்களை ஆட வைத்து பார்த்து ஊக்கம் கொள்வேன். எப்போது எனக்கு வாய்ப்பு கிடைத்தாலும், பாடல்களில் டான்சில் இவர்களை ஆட வைப்பேன்."

    "நயன்தாரா எத்தனை முறை ஆடினாலும் பார்க்கிறார்களே அது போல் நம் படங்களை பார்க்கட்டும் இவர்களையும் பார்க்கட்டும். சில காலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டேன். அப்போது தான் 'மல்லர் கம்பம்' என ஒன்று இருக்கிறது அதைக் கற்றுக்கொள்கிறோம் மாஸ்டர் என்றார்கள்."

    "இது வலுவான உடல் உள்ளவர்கள் செய்வது, உங்களால் முடியுமா? எனக் கேட்டேன். ஆனால் எங்களால் முடியும் என்றார்கள். அதே போல் கற்றுக்கொண்டார்கள். இங்கு அவர்கள் செய்வதை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. இவர்களால் முடியாதது எதுவுமே இல்லை. இவர்களால் எல்லாமே முடியும்."

    "இதன் மூலம் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். இவர்கள் வாடகை கட்டக் கூட கஷ்டப்படுகிறார்கள். உங்கள் வீட்டு விழா, தெரிந்த நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள். இவர்களை அழைத்து நிகழ்ச்சி செய்யும் அனைவருக்கும் நான் வீடியோவில் வாழ்த்து சொல்வேன்."

    "இவர்களுக்காக நான் என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன். இந்த கலை இவர்களை வாழ வைக்கும். இந்த கலையை கற்றுக்கொண்டதற்காக இவர்கள் அனைவருக்கும் என் வீட்டில் ஸ்கூட்டி வழங்குகிறேன். அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன். அந்த படத்தின் மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன்," என்று தெரிவித்தார்.

    • பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.
    • நேற்று வெளியான இப்பாடல் 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்துள்ளது.

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.

    "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது. நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு விசில் சின்னமாக இருக்கும் என நெட்டிசன்கள் அவர்களின் கருத்தை கமெண்டுகளில் பரப்பி வருகின்றனர்.

    பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.

    நேற்று வெளியான இப்பாடல் 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் வியூஸ்களை யூடியூபில் கடந்துள்ளது. தெனிந்திய சினிமாக்களில் 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளை கொண்ட பாடலாக பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற "அரபிக் குத்து" இருந்தது. தற்போது அரபிக் குத்து பாடலின் சாதனையை முறியடித்து கோட் படத்தின் விசில் போடு பாடல் குறைந்த நேரத்தில் அதிக வியூஸ்களை பெற்றுள்ளது.

    இதன் மூலம் அவர் பட பாடலின் சாதனையை அவரே அடுத்தப்பட பாடலின் மூலம் முறியடித்து இருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகினார்.
    • நடித்திருக்கும் அருண் விஜய்க்கு மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

    பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் வணங்கான். படத்தில் முதலில் சூர்யா கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகினார்.

    இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக அருண்விஜய் படத்தில் இணைந்து நடிக்க தொடங்கினார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    தீவிரமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது அண்ணன் பாலாவிற்கு என் முழுமுதல் நன்றி .கடின உழைப்பு தந்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் என் நன்றிகள். கதாபாத்திரத்துக்காக தன்னை வருத்திக்கொண்டு நடித்திருக்கும் அருண் விஜய்க்கு மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வணங்கான் படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    • 'பிளாஷ்பேக்' போர்ஷனில் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார்
    • இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது.

    தமிழ் பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விக்ரம் திகழ்ந்து வருகிறார் . 'சேது' படம் மூலம் புகழ் பெற்ற அவர் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். இதில் 'தில்', தூள், சாமி, அந்நியன் படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றன.

    தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் 'தங்கலான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவரது ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

    இந்நிலையில், 'சித்தா' பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    சியான் 62' படத்தை ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது. இப்படத்தின் டைட்டில் 'ப்ரோமோ' விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17- ந் தேதி வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இதில் விக்ரம் தாடியுடன் கூடிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று உள்ளது. இதுதவிர மேலும் ஒரு தோற்றத்தில் விக்ரம் நடிக்க உள்ளார்.

    இப்படத்தில் 'பிளாஷ்பேக்' போர்ஷனில் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார் என தற்போது தகவல் வெளியாகி  உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2004ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்யக் கோரி இருவரும் மனு தாக்கல்.
    • விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு.

    நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2004ம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தை ரத்து செய்யக் கோரி இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    திருமண வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்
    • வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.

    நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் அதனை காட்சி படுத்துவதில் ஆற்றல் பெற்றவர்.

    ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பாடலான 'டோண்ட் வரி டா மச்சி' மற்றும் 'எதனால' பாடல் வெளியானது.

    வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெயிலர் தற்பொழுது வெளியாகிவுள்ளது.

    ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பார்டரில் கதைக்களம் நடப்பதுப் போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. பிரியா பவானி சங்கருக்காக விஷால் எந்த எல்லையும் தாண்டுவேன் என வசனம் பேசுகிறார். அவருக்காக பலப் பேரை வெட்டி சாய்ப்பது போன்ற காட்சிகள் டிரெயிலரில் இடம் பெற்றுள்ளன.

    ரத்னம் படத்தின் டிரெயில் ஹரிப் படத்தின் அனைத்து அம்சங்களும் கொண்ட ஒரு அதிரடி ஆக்ஷன் டிரெயிலராக அமைந்து இருக்கிறது. படத்தின் டிரெயிலர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் தெனிந்திய சினிமாக்களில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜயின் அரபிக் குத்துப் பாடல்.
    • கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய் தற்பொழுது " தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.

    "பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது. நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு விசில் சின்னமாக இருக்கும் என நெட்டிசன்கள் அவர்களின் கருத்தை கமெண்டுகளில் பரப்பி வருகின்றனர்.

    பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.

    பாடல் வெளியாகி 19 மணி நேரம் கடந்த நிலையில் இது வரை 19 மில்லியன் பார்வையையும் 1.15 மில்லியன் லைக்சுகளையும் யூடியூபில் பெற்றுள்ளது.

     

    பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் தெனிந்திய சினிமாக்களில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜயின் அரபிக் குத்துப் பாடல். தற்பொழுது விசில் போடு பாடல் இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அரபிக் குத்து பாடலின் வியூசை இது தாண்டி முதல் இடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
    • ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், பாரதிராஜா,மணிரத்னம் ,விக்னேஷ் - நயன்தாரா, உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

    பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார்.

    இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் நடந்தது.சில பிரச்சினைகள் காரணமாக ஐஸ்வர்யா திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.




    இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு 2- வது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.ஏப்ரல் 15 - ந்தேதி அன்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையொட்டி திருமண பணிகளில் ஷங்கர் தீவிரமாக ஈடுபட்டார்.பல முக்கிய பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கினார். மேலும் திருமண விழாவை தடபுடலாக நடத்த ஏற்பாடு செய்தார்




    இந்நிலையில் இன்று (15- ந்தேதி) சென்னையில் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.



    மேலும் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சூர்யா,கார்த்தி,விக்ரம், விஷால், அர்ஜுன் இயக்குனர்கள் பாரதிராஜா,மணிரத்னம் -சுஹாசினி, கே. பாக்யராஜ்,பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி - ப்ரிதா ஹரி, விஷ்ணு வர்தன் - அனுவர்தன், விக்னேஷ் சிவன் - நயன்தாரா, ரவி குமார்,




    நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் நாசர் - கமிலா நாசர், ஜீவா,சித்தார்த், நடிகை அதிதி ராவ், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்ரி, ஜெயந்திலால் காடா, ஏ.எம்.ரத்னம்,தில் ராஜு, ஐசரி கணேஷ்,ராஜசேகர்,திருப்பதி பிரசாத், இசையமைப்பாளர் ஹாரில் ஜெயராஜ்,உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.




    மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர்கள் லிங்குசாமி,அட்லி, வசந்த பாலன், நடிகர் பரத், ஆகியோர் வரவேற்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார். தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. இன்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

     

    நடிகர் ரஜினிகாந்த, கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், கீர்த்தி சுரேஷ் அர்ஜூன் மற்றும் பலர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

     

     

     

    இயக்குனர் பாரதிராஜா, மணிரத்னம், பாக்யராஜ், வாசு, கே.எஸ் ரவிக்குமார், ஹரி ஆகியோர் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்தினர்.

    மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் அட்லி, இயக்குனர் வசந்த பாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 1983 ஆம் ஆண்டு வெளியான ’விசா’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
    • இந்நிலையில் அடுத்ததாக ’டர்போ’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்மூட்டி. 1983 ஆம் ஆண்டு வெளியான 'விசா' திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 'மௌனம் சம்மதம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    அதைத் தொடர்ந்து அழகன், தளபதி, மக்கள் ஆட்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம், போன்ற படங்களில் நடித்தார்.

    ராம் இயக்கத்தில் மம்மூட்டி மற்றும் அஞ்சலி இணைந்து 2018 ஆம் ஆண்டு வெளியான 'பேரன்பு' படத்தில் நடித்தனர். கடந்த ஆண்டு வெளியான நண்பகல் நேரத்து மயக்கம், கண்ணூர் ஸ்குவாட் மற்றும் சில மாதங்களுக்கு முன் பிரம்மயுகம் போன்ற வித்தியாசமான கதைக்களமுடைய படங்களைத் தேடி நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமல்லாமல் அப்படத்தை இவரே தயாரிக்கவும் செய்கிறார்.

    இந்நிலையில் அடுத்ததாக 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். மமூட்டி மற்றும் கன்னட நடிகரான ராஜ் பி ஷெட்டி இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோஹன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.

    மிதுன் மானுவேல் தாமஸ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். வரும் ஜூன் 13 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. நேற்று படம் வெளியாகும் தேதி அறிவிப்புடன் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • நடிகர் சத்யராஜ் பல முக்கிய நடிகர்- நடிகைகள் பட்டாளத்தை இயக்குனர் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

    இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.




    ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் இது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.இதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு அணிந்து இருந்தார்.

    இதனை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் பரவியது.



    மேலும் தலைவர் -171 படத்துக்கு 'கழுகு' என்று 'டைட்டில்' பெயர் வைக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த டைட்டில் பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரை செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டு அந்த படம் வெளியானது.

    மேலும் தலைவர் -171 படம் தங்கக் கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி 'மாபியா' ''டான்" வேடத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் தலைவர் 171- படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



    இந்தப் படத்தின் 'சூட்டிங்' வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் "பர்ஸ்ட் லுக்" போஸ்டர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்ததுடன் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்தப் படத்தின் 'டைட்டில் ப்ரமோ' வருகிற 22 - ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த படத்தில் ரஜினியுடன் நடிகை ஷோபனா 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் ரஜினி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதே போல் நடிகர் சத்யராஜ் இப்படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




    ஸ்ருதிஹாசன் - லோகேஷ் ஜோடியாக நடித்த 'இனிமேல்' ஆல்பம் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்தப் பாடல் வெற்றியை பெற்றது. இதனால் லோகேஷ் முழு கவனம் செலுத்தி தலைவர் 171 படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர்.

    இதையொட்டி பல முக்கிய நடிகர்- நடிகைகள் பட்டாளத்தை இயக்குனர் லோகேஷ் இப்படத்தில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×