வசூலை வாரி குவிக்கும் டபுள் டக்கர்

மீரா மஹதி இப்படத்தை இயக்கியுள்ளார். வித்யாசாகர் இசையில் இப்படம்  வெளியானது.
வசூலை வாரி குவிக்கும் டபுள் டக்கர்
Published on

இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டபுள் டக்கர். ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இப்படம்  வெளியானது.

மேலும் இப்படத்தில் கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட், சுனில் ரெட்டி, ஷா ரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் விஜய், டெடி கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான 'டபுள் டக்கர்' ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தது.

பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டி வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு பெருமளவில் கிடைத்துள்ளது. ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓட்டிக்கொண்டு இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com