யூடியூபில் பட்டையை கிளப்பும் விசில் போடு பாடல்

பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் தெனிந்திய சினிமாக்களில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜயின் அரபிக் குத்துப் பாடல்.கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
யூடியூபில் பட்டையை கிளப்பும் விசில் போடு பாடல்
Published on

நடிகர் விஜய் தற்பொழுது " தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தின் பாடலான 'விசில் போடு' பாடலின் லிரிக் வீடியோவை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலை மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ளார்.

"பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ? கேம்பைன்ன தான் தொறக்கட்டுமா? என்ற வரிகளில் பாடல் தொடங்குகிறது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், விஜயின் அரசியல் பிரவேசத்தின் முன்னோட்டம் போல் காணப்படுகிறது. நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு விசில் சின்னமாக இருக்கும் என நெட்டிசன்கள் அவர்களின் கருத்தை கமெண்டுகளில் பரப்பி வருகின்றனர்.

பாடல் வீடியோவின் கடைசியில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆடிய நடனம் மிக எனர்ஜிடிக்காக இருந்தது.

பாடல் வெளியாகி 19 மணி நேரம் கடந்த நிலையில் இது வரை 19 மில்லியன் பார்வையையும் 1.15 மில்லியன் லைக்சுகளையும் யூடியூபில் பெற்றுள்ளது.

பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் தெனிந்திய சினிமாக்களில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் விஜயின் அரபிக் குத்துப் பாடல். தற்பொழுது விசில் போடு பாடல் இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அரபிக் குத்து பாடலின் வியூசை இது தாண்டி முதல் இடத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com