ரத்னம் படத்தின் அதிரடியான டிரெயிலர் வெளியானது

நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது.
ரத்னம் படத்தின் அதிரடியான டிரெயிலர் வெளியானது
Published on

நடிகர் விஷால் அடுத்ததாக ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் நடித்துள்ளார். ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இயக்குநர் ஹரி எப்பொழுதும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் அதனை காட்சி படுத்துவதில் ஆற்றல் பெற்றவர்.

ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பாடலான 'டோண்ட் வரி டா மச்சி' மற்றும் 'எதனால' பாடல் வெளியானது.

வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெயிலர் தற்பொழுது வெளியாகிவுள்ளது.

ஆந்திரா மற்றும் தமிழ்நாடு பார்டரில் கதைக்களம் நடப்பதுப் போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. பிரியா பவானி சங்கருக்காக விஷால் எந்த எல்லையும் தாண்டுவேன் என வசனம் பேசுகிறார். அவருக்காக பலப் பேரை வெட்டி சாய்ப்பது போன்ற காட்சிகள் டிரெயிலரில் இடம் பெற்றுள்ளன.

ரத்னம் படத்தின் டிரெயில் ஹரிப் படத்தின் அனைத்து அம்சங்களும் கொண்ட ஒரு அதிரடி ஆக்ஷன் டிரெயிலராக அமைந்து இருக்கிறது. படத்தின் டிரெயிலர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com