என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "title reveal"

    • கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர்.
    • கலகலப்பான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'முதலும் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படமும், இப்படத்தில் வரும் முதலும் நீ முடிவும் நீ பாடலும் இவரை பிரபலமாக்கியது.

    இப்படத்தை தொடர்ந்து கிஷன் தாஸ், சிங்க், தருணம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார் ஹர்ஷத் கான்.

    கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்த படத்தை சாரங் தியாகு இயக்குகிறார். சித்து குமார் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இந்நிலையில், இப்படத்திற்கான தலைப்பை ப்ரோமோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நகைச்சுவையாக படம்பிடித்துள்ள ப்ரோமோ காட்சியில் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது.

    இந்த படத்திற்கு 'ஆரோமலே' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த கலகலப்பான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 'சித்தா' பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது.

    'சித்தா' பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, துஷரா விஜயன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    சியான் 62' படத்தை ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது. இப்படத்தின் டைட்டில் 'ப்ரோமோ' விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17- ந் தேதி வெளியாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டனர். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் தற்பொழுது 1 டே டூ கோ என்ற புது போஸ்டரை சீயான் விகரம் அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில் அவரின் முகம் முழுவதும் ஒரு துணியால் சுற்றி இருக்கிறது. அவரின் கண் மட்டும் வெளியே தெரிகிறது. ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிக்ப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×