தம்பி உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டா? - மிரட்டும் சீயான் விக்ரம்

'சித்தா' பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது.
தம்பி உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டா? - மிரட்டும் சீயான் விக்ரம்
Published on

'சித்தா' பட புகழ் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ''சியான் 62' தற்காலிகமாக பெயரிடப்பட்ட புதுப்படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, துஷரா விஜயன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

சியான் 62' படத்தை ரியா ஷிபுவின் எச்.ஆர் பிக்ச்சஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22 - ந்தேதி தொடங்க உள்ளது. இப்படத்தின் டைட்டில் 'ப்ரோமோ' விக்ரமின் பிறந்த நாளான ஏப்ரல் 17- ந் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் நேற்று படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டனர். அது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில் தற்பொழுது 1 டே டூ கோ என்ற புது போஸ்டரை சீயான் விகரம் அவரின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவரின் முகம் முழுவதும் ஒரு துணியால் சுற்றி இருக்கிறது. அவரின் கண் மட்டும் வெளியே தெரிகிறது. ரசிகர்களிடையே இப்படத்திற்கு மிக்ப் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com