பீச் ரிசார்ட்டில் Chill செய்த மாளவிகா மோகனன்

ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பீச் ரிசார்ட்டில் Chill செய்த மாளவிகா மோகனன்
Published on

ரஜினி நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்

தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.பழங்குடி இன பெண்ணாக நடித்த மாளவிகா மோகனனின் தோற்றம் மிரட்டலாக இருந்தது.

இவர் இந்தி மொழியில் உருவாகும் 'யுத்ரா' என்ற படத்தில் நடித்து வருவதுடன் ரன்பீர் கபூருடன் அனிமல்-2 படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர் மாளவிகா மோகனன். தனது கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவது அவரின் வழக்கம்.

இன்ஸ்டாகிராமில் அவருக்கு 4 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். இந்நிலையில் கடற்கரை ரிசார்ட்டில் தங்கியுள்ள மாளவிகா மோகனன் ஓட்டல் அறையில் பிகினி உடையில் செல்பி எடுத்தபடி நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் மிக உற்சாகத்துடன் அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர். மாளவிகா மோகனனனின் இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com