search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிகள்"

    • அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.
    • குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது.

    தென்காசி:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர் சாரல் மழை பெய்ததன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் மாலையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    தொடர்ந்து குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் கூடிய சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குளு குளு சீசன் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிகாலையிலேயே அதிகளவில் திரண்டனர்.
    • கடந்த வாரம் ரூ.500-க்கு விற்ற சங்கரா மீன் ரூ.400 விற்பனையாகி உள்ளது.

    நாகப்பட்டினம் : 

    நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாஙகுப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் புஷ்பவனம், கோடியக்கரை, உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசை படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீன்வர்கள் இன்று ஞாயிற்று கிழமை என்பதால் அதிகாலை கரை திரும்பினர். மீன்களை வாங்குவதற்கு மீன்பிரி யர்கள், மீன் வியாபாரிகள் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானோர் நாகை துறைமுகத்தில் திரண்டனர்.

    ஒரு சில விசை படகுகளில் அதிக அளவில் கனவா மீன்களும் ஏற்றுமதிக்காக இறால் நண்டுகள் என கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் கூட, நாளை ஆடி அமாவாசை என்பதால் விற்பனை சற்று மந்தமாக இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    அதாவது கடந்த வாரம் ரூ500 விற்ற சங்கரா 400 க்கு விற்பனையாகி உள்ளது.

    கேரள மாநிலத்தில் ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இரண்டு மாதம் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் அதிக அளவில் கேரள மீன் வியாபாரிகள் மீன்கள் வாங்குவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக முகாமிட்டு இன்று மீன்களை அதிக அளவில் வாங்கி கொண்டு கனரக வாகன மூலம் கேரளாவுக்கு செல்கின்றனர்.இதே போல் திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன் வியாபாரிகள் மீன்கள் வாங்க வந்துள்ள நிலையில் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மீன் பிரியர்கள் ஏராளமானோர் துறைமுகத்தில் குவிந்துள்ளதால் நாகை மீன்பிடித் துறைமுகம் களைக்கட்டி உள்ளது.

    மீன்களின் விலையை பொருத்தவரை வஞ்சரம் ஒரு கிலோ 650- 900, பாறை 350 முதல் 450,சீலா 400 முதல் 450,கண்ணாடி பாறை 400 முதல் 450,இறால் 400 முதல் 500 க்கும் விற்பனையாகிறது

    • கடை வழங்க முன்னுரிமை கேட்டு வியாபாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
    • நாளை முதல் தற்காலிக பஸ் நிலையம் செயல்படும்

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்து புதுப்பிக்க அரசு ரூ.8 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. இந்த நிலையில் பழைய பஸ் நிலையத்தின் ஒரு பகுதி அடைக்கப்பட்டது. இதையடுத்து அய்யப்பன்எம்.எல்.ஏ. தலைமையில் கடைக் காரர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் சமரச கூட்டம் நகராட்சி அலுவ லகத்தில் உசிலம்பட்டி ஆர்.டி.ஒ. ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ. அய்யப்பன், நகராட்சித் தலைவர் சகுந்தலா, நக ராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டித்தாய் ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

    அப்போது நகராட்சி கமிஷனர் தற்போது உள்ள பஸ் நிலையம் 1½ ஏக்கரில் உள்ளது. கூடுதலாக ஒரு ஏக்கர் விரிவாக்கம் செய்து 2½ ஏக்கரில் 18 பஸ்கள் நிற்கும் வகையில் புதுப்பிக்க அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாளை முதல் தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என தெரிவித்தார்.

    இதையடுத்து புதிதாக கட்டப்படும் பஸ் நிலையத்தில் தற்போது கடை வைத்துள்ள வியா பாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் அது போன்று முன்னுரிமை வழங்க முடியாது எனவும் அதற்கு உத்தரவாதம் தரமுடியாது எனவும் தெரிவித்தனர். இதனால் கடை வியாபாரிகள் கூட்டத்தை புறக்கணித்துச் சென்றனர்.

    தற்காலிக பஸ் நிலையம் உசிலம்பட்டி-தேனி ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் பஸ்கள் இயங்குகின்றன.

    • வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலில் அய்யப்பன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பஸ் நிலையத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என 4 மாவட்டங்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த 4 மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதி யாக உசிலம்பட்டி பஸ் நிலையம் உள்ளது.

    1996-ம் ஆண்டு கட்டப்பட்ட பஸ் நிலையம் சிதிலமடைந்தது. இதைத் தொடர்ந்து சுமார் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு மற்றும் விரிவாக்க பணி களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

    பயணிகள் வசதிக்காக அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 2 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. புனரமைப்பு மற்றும் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்களை நகராட்சி சார்பில் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன் அறிவிப்பின்றி பஸ் நிலையத்தை மூடியுள்ளதாக குற்றம் சாட்டி பஸ் நிலைய வளாக கடை வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த அய்யப்பன் எம்.எல்.ஏ., வியாபாரிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டார். உசிலம்பட்டி போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் எம்.எல்.ஏ., வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து தடுப்புகளை நகராட்சி நிர்வாகம் அகற்றியது. கால அவகாசம் அளிக்கப்பட்டு அனைத்து துறைகளின் அனுமதி பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டி வழங்கும் விழாவினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • சிறு வியாபாரிகள், வணிகர்களுக்கு மூலதனத்துக்காக கடன் உதவி வழங்குவதற்காக பிரதமர் ஸ்வநிதி திட்டம் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டி வழங்கும் விழாவினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்து, சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டியினை வழங்கினார்.

    சிறு வியாபாரிகள், வணிகர்களுக்கு மூலதனத்துக்காக கடன் உதவி வழங்குவதற்காக பிரதமர் சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டம் எனப்படும் பிரதமர் ஸ்வநிதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அதனடிப்படையில் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் தலா ஒரு வண்டியின் விலை ரூ 1,06,000 மதிப்பீட்டில்,9 உணவு மற்றும் பழ விற்பனை வண்டிகளை ரூ. 9.54,000 மதிப்பீட்டில் மற்றும் ஒரு பூ விற்பனை வண்டி ரூ.60,000 மதிப்பீட்டில் என ரூ. 10,14,000 மதிப்பீட்டில் விற்பனை வண்டிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இவ்விழாவில் நாகை சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ், நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சாலையோர வியாபாரிகளுக்கு இலவச விற்பனை வண்டிக்கான ஆணையை மாவட்டகலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    அருகில் முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் வாரச்சந்தை வியாபாரிகள் ‘திடீர்’ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைத்து காய்கறிகள், மளிகை பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக வாரச்சந்தைக்கு ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் ராமநாத புரம் புதிய பஸ்நிலையத்தை ரூ.20 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வாரச்சந்தை அமைக்க நகராட்சி நிர்வா கம் தடை விதித்திருந்தது. இதனால் வியாபரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    இன்று புதன்கிழமை என்பதால் அதிகாலையி லேயே வழக்கமான வாரச் சந்தை நடக்கும் பகுதிக்கு வந்த வியாபாரிகள் அங்கு கடை வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து புதிய பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் வாரச்சந்தை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கடை அமைக்க வேண்டாம் என கூறினர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நகராட்சி அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    நகராட்சி நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து வாரச்சந்தை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென ராமநாதபுரம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இன்று மட்டும் வாரச்சந்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த வாரம் முதல் வாரச்சந்தை வேறு ஒரு இடத்தில் அமைக்க மாற்று இடம் தரப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட வாரச்சந்தை வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • செவ்வாய் சந்தை செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டார பகுதி மக்களிடம் பெயர் பெற்று வந்தது.
    • வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் எம்.என்.குப்பம் பகுதியில் 50 ஆண்டிற்கு முன்பு துவங்கப்பட்ட பாரம்பரிய "செவ்வாய் சந்தை", செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டார பகுதி மக்களிடம் பெயர் பெற்று வந்தது. இன்று அது பெயரளவில் மட்டுமே இயங்கி வருகிறது.

    முன்பு போல் மாடுகள் ஏலம், கோழி விற்பனை, கிராமத்து விளையாட்டு பொருட்கள், மளிகை, காய்கறி, பழங்கள், தின்பண்டங்கள் என பலவகை பொருட்கள் வருவதில்லை., தற்போது இங்கு மீன் கருவாடுகள், மாடுகள் மட்டுமே குறைந்த அளவில் விற்கப்படுகிறது. அதுவும் போதிய அளவில் லாபத்தை தருவதில்லை என வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த பாரம்பரிய சந்தை மீண்டும் பிரபலமாக, அதை விரிவாக்கம் செய்து, வியாபாரிகள் வெயில், மழையில் பொருட்களை பாதுகாக்க கூறை, கழிப்பறை, வாகனம் நிறுத்தும் இடம், உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி கொடுத்தால் இங்கு இன்னும் கூடுதலாக வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    • கன்னியாகுமரியில் சூறாவளி காற்று வீசியது
    • மீன்கள் அதிகமாக இல்லாததால் வெளியூர், உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள் ளது. இந்த துறை முகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கன்னியா குமரி பகுதியில் கடந்த 2 நாட்களாக கடுமையான சூறாவளி காற்று வீசி வரு கிறது. இதனால் கடல் கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் காணப்படு கிறது. மேலும் மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி மாற்று வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சின்ன முட்டம் துறை முகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த விசைப்பட குகள் அனைத்தும் சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதைத்தொ டர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மின் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது. இதே போல ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் சூறாவளி காற்று காரணமாக பெரும்பாலான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த கடற்கரை கிராமங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் சூறைக்காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. இதற்கி டையில் சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் கடுமையான குளிர்காற்று வீசுகிறது.

    இதேபோல் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1000-க்கணக்கான பைபர் வள்ளங்கள் உள்ளன. குளச்சல் மீன்பிடித் துறை முகத்தை தங்கு தளமாக கொண்டு மீன் பிடித்து வருகிறார்கள். விசைப்படகுகள் மீன் பிடி தடைக்காலமாக உள்ளதால் மீன்பிடிக்க செல்லாமல் மீன் பிடித்துறை முகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    வானிலை எச்சரிக்கை காரணமாக குளச்சல் சுற்று வட்டார பகுதியில் உள்ள பைபர் வள்ளங்கள், கட்டு மரங்கள் மீன்பிடிக்க செல்ல வில்லை. மேலும் மேடான பகுதியில் வள்ளங்களை மீனவர்கள் நிறுத்தி வைத் துள்ளனர். காற்று அதிகமாக காணப்படுவதால் குறைந்த அளவு மீனவர்களே மீன் பிடிக்க சென்றதால் மீன்கள் வரத்து குறைந்தது. மீன்கள் அதிகமாக இல்லாததால் வெளியூர், உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • பூ வியாபாரிகள் மோதல்; 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வியாபாரிகள், போலீசார் விசாரணை, Clash, arrested

    மதுரை

    திருப்பரங்குன்றம் கீழத்தெருவை சேர்ந்த பழனிவேல் மனைவி புஷ்பவல்லி (வயது28). இவர் கோவில் முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகன் மதன் (30). இவரும் கோவில் முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்குள் வியாபாரம் செய்வது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று அவர்க ளிடையே வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட போட்டியில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொ ண்டனர். இந்த மோதலில் மதன், அவரது தாய் செல்வி, சகோதரி உமாராணி, மாமா ராஜபாண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து புஷ்ப வல்லியை ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து புஷ்பவல்லி, திருப்பரங் குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனையும், அவருடைய மாமா ராஜபாண்டியையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ராஜபாண்டி தரப்பிலும் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் புஷ்ப வல்லி, சரவணன், கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சரவணன், கணேசன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழ்பவானி வாய்க்கால் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
    • ரூ.733 கோடி மதிப்பில் கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க கடந்த 2020ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன.

    காங்கயம் :

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூரில் கடையடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.

    கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களை சோ்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.இந்நிலையில் ரூ.733 கோடி மதிப்பில் கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க கடந்த 2020ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிா்ப்பும் தெரிவித்தும் வருகின்றனா்.

    இந்நிலையில் கான்கிரீட் திட்டத்தை கைவிடக் கோரியும், மண் வாய்க்காலாகவே தொடா்ந்தும் இருக்க வேண்டும் என வலியுறுத்தியும் காங்கயம் தாலுகாவுக்குட்பட்ட திட்டுப்பாறை, நத்தக்காடையூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    • தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறை மூலமாக சோதனை நடத்தப்பட்டது.
    • புகைப்பிடிக்கக் கூடாது என்ற வாசகம் ஒட்டாத கடைகள் உள்ளிட்ட சில கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

    அவினாசி :

    தேசிய புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறை மூலமாக சோதனை நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அவிநாசி அருகே கருவலூரில் சுகாதாரத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

    இதில் கருவலூா் அரசுப் பள்ளி அருகே செயல்பட்டு வரும் மளிகைக் கடைகள், உணவகங்கள், தேநீா் கடைகள் உள்ளிட்டவற்றில் சோதனை மேற்கொண்டு புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த கடைகள், புகைப்பிடிக்கக் கூடாது என்ற வாசகம் ஒட்டாத கடைகள் உள்ளிட்ட சில கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

    இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், எவ்வித முன்னறிவிப்புமின்றி சோதனை மேற்கொண்டதை கண்டித்தும் கருவலூா் வணிகா் சங்கத்தினா் சாா்பில் அப்பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டனா். 

    சிவகங்கையில் நகராட்சி அலுவலர்களை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்
    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சியை தூய்மைமிகு நகராட்சியாக மாற்றுவதற்காக நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் காந்தி வீதியில் நடந்த ஆய்வில் 595 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

     நேற்று நேரு பஜார் வீதியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சில வியாபாரிகள் கடைகளை அடைத்துக்கொண்டு நகராட்சி ஊழியர்களை   சோதனை செய்யவிடாமல் தடுத்ததுடன்,   வாக்குவாதத்தில் ஈடுபட்பட்டனர். 

    மேலும் சாலையில் வியாபாரிகள் கூடியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    அங்கு வந்த காவல்துறையினர் சமாதானம் செய்ததை தொடர்ந்து நடந்த சோதனையில் கடைகளில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். 

    மேலும் கடைகளுக்கு அபராதமும் விதித்து சென்றனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,  சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்ச்சிகளுக்கும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கப் மூலம் டீ, காப்பி தருகின்றனர். 

    பிளாஸ்டிக் உற்பத்தி செய்து மாவட்டத்தின் உள்ளே வருவதை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை வேண்டும். எங்களைப் போன்று சிறு, குறு வியாபாரிகள் பிளாஸ்டிக் கவர் இல்லாமல் பார்சல் செய்து எவ்வாறு கொடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர். 

    எனவே நகராட்சி நிர்வாகம்  தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ×