search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி"

    • சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது.

    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.நேற்றும்,இன்றும் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இலவச வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக செயல்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-நேற்றும், இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது. புதிய கணக்குகள் தொடங்கும் நடைமுறையினை மேற்கொள்ள பட்டது. எனவும் இதர பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளனர். குடும்பத் தலைவிகள் ரூ 1000 உரிமைத் தொகை பெற இலவச வங்கி கணக்கு துவங்க வங்கிக்கு வரலாம். இந்த வாய்ப்பை மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
    • கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி கட்டிடம் சுமார் 40 ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும். நாள்தோறும் இந்த வங்கிக்கு வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், தற்போது இந்த வங்கி கட்டிடம் மேற்காரைகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வங்கிக்கு வரும் மக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

    எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    நாகர்கோவில் :

    கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் ரவிசாம் பேனர்ஜி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது சேமிப்பு கணக்கை வைத்துள்ளார். இந்த நிலை யில் பணத்தேவைக்காக நாகர்கோவிலில் உள்ள மற்றொரு தேசிய மயமாக்கப் பட்ட வங்கியின் ஏ.டி.எம்.மில் ரூ.5 ஆயிரம் எடுத்த போது பணம் வரவில்லை. ஆனால் அவரது செல்போ னுக்கு பணம் எடுக்கப்பட்ட தாக குறுந்தகவல்கள் வந்துள்ளது.

    உடனே தான் சேமிப்புக் கணக்கு வைத்திருந்த வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் 2 நாட்களில் அந்த பணம் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப் பட்டு விடும் என்று கூறியுள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்க வில்லை.

    இதனால் ரவி சாம்பேனர்ஜி சம்பந்தப் பட்ட வங்கிக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பின்னரும், உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ரவிசாம்பேனர்ஜி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தேசிய மய மாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி நஷ்ட ஈடுடாக ரூ.15 ஆயிரமும், வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    • ராமநாதபுரத்தில் வருகிற 12-ந்தேதி வங்கி கல்வி கடன் முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் வங்கி கல்விக்கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 12-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம். இந்த வங்கி கடன் முகாமில் தேசியமய மாக்கப்பட்ட அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்ட 17 வங்கிகள் பங்கேற்கின்றன.

    17 வங்கிகள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து ஆவணங்களை சரிபார்த்து விரைந்து கல்வி கடன் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. பொருளாதார சூழல் காரணமாக உயர் கல்வியை தொடர முடியாத மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம்.

    ஏற்கனவே ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 700 மாணவர்களுக்கான உயர் கல்விக்கான உதவியை தன்னுடைய சொந்த நிதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வரும் நிலையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வங்கிகளில் கல்வி கடன் பெற்று பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாணவர்களின் சிரமத்தை இலகுவாக்கும் வகையில் இந்த கல்வி கடன் முகாமை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருங்கிணைத்துள்ளார்.

    ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் பொருளாதார தடையால் உயர் கல்வி தொடர முடியாத நிலையில் இருக்கக்கூடாது. வங்கிகளின் மூலம் கல்வி கடன் பெற்று உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவ-மாணவிகள் இது தொடர்பான விவரங்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகி கேட்டு அறியலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது உயர்கல்வியை தொடர பயனுள்ள வகையில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தெரிவித்துள்ளார். 

    • மத்திய அரசின் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
    • செப்டம்பர் 30ந் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.இவ்வகை ரூபாய் நோட்டு எப்போது வேண்டுமானாலும் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்ற பேச்சும் இருந்து வந்தது. காரணம் 2,000 ரூபாய் நோட்டு, பணம் பதுக்கலுக்கு அதிகம் பயன்படும் என்ற அச்சம் இருந்தது.

    தற்போதும் பல்வேறு வகையில் பணம் பதுக்கல் அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் கைக்கு 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவே இல்லை. ரிசர்வ் வங்கி, 2018-19 ம் ஆண்டில் இருந்து புதிய 2,000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தியது. இந்நிலையில் 2,000 ரூபாய்கள் நீக்கம் செய்யப்படுவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.வரும் செப்டம்பர் 30ந் தேதி வரை, 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வசம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களை தங்கள் வங்கி கணக்கில் 'டிபாசிட்' செய்து கொள்ளலாம். வேறு எந்த வங்கி கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை அளித்து அதற்கு இணையான மற்ற ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் சாதாரண மக்களிடம் 2,000 ரூபாய் நோட்டுகள் இல்லாததால், பெரிய பரபரப்பு எழவில்லை. அப்படியே கைவசம் இருந்தாலும் எவ்வித கவலையும் தேவையில்லை. நான்கு மாத அவகாசம் இருப்பதால் நாளை முதல் பதட்டமில்லாமல் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என சிறப்பு ஏற்பாடு செய்துள்ள வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.

    இதுகுறித்து திருப்பூர் பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது:- நாளை 23-ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.அதற்காக, வங்கி கிளைகளில் சிறப்பு கவுண்டர் திறக்கப்படும்.ஆதார், பான்கார்டு போன்ற ஏதாவது ஆவண விவரங்களுடன், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்., மையங்கள் வாயிலாகவோ, நேரடியாகவோ, தங்கள் வங்கி கணக்கில் செலுத்திக்கொள்ளலாம்.அதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மட்டும், படிவத்தை பூர்த்தி செய்து ஆவண நகல்களுடன் வழங்க வேண்டும்.

    பொதுமக்கள் எவ்வகையிலும் பதற்றமடைய தேவையில்லை. நான்கு மாதம் அவகாசம் உள்ளது. கைவசம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை பாதுகாப்பான முறையில் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம். 500, 200, 100, 50 ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றிக்கொள்ளலாம். போதிய அளவுக்கு ரூபாய் நோட்டுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

    • ஐ.ஜி.அஸ்ரா கார்க் தகவல்
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. ஆலோசனை மேற்கொண்டார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனை மேற் கொண்டார். இதை தொடர்ந்து அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நெல்லை சரகத்தில் உள்ள மாவட்டங் களில் சுமார் 10 வருடங்க ளுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட நிலுவை யில் இருந்த 65 ஆயிரம் வழக்குகள் புலன் விசாரணை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத் தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 27 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை 554 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளது. 919 பேர் மீது பிணையில் வெளியே வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. குமரி மாவட்டத்தில் 24 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 63 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். அவர்களிடமிருந்து 13½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    27 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 6 கஞ்சா வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் 161 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 90 வழக்குகளில் புலன் விசாரணையின் மூலமாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.70 லட்சத்து 30 ஆயிரத்து 738 மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன், இந்த குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கும்போது வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் செல்போன்களில் குறுஞ் செய்தி மூலமாக தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • புதுமைப்பெண் திட்டத்தில் 2-ம் கட்டத்தில் 830 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் மாதம் சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவி களுக்கும் பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநீற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை தலா ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதுமை ப்பெண் திட்டத்தில் முதல் கட்டத்தில் 758 மாணவிகளும், 2-ம் கட்டத்தில் 830 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர்.

    மொத்தமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 1,588 மாணவிக ளுக்கு தலா ரூ.1000 வழங்க ப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுரக் ஷா காப்பீடு திட்ட த்தில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு அளிக்கப்படுகிறது.
    • 100 சதவீதம் மக்கள் அனைவரையும் பயனாளியாக சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    திருப்பூர் :

    மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து, பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா என்கிற பெயரில் விபத்து காப்பீடு திட்டம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (பி.எம்.ஜெ.ஜெ.பி.ஒய்.,) எனும் ஆயுள் காப்பீடு திட்டங்களை செயல்படுத்துகிறது.வங்கி கணக்கு வைத்துள்ளோர் அனைவரும் இந்த காப்பீடு திட்டங்களில் பயனாளி களாக சேர்கப்படுகின்றனர்.

    சுரக் ஷா காப்பீடு திட்ட த்தில் வெறும் 20 ரூபாய் ஆண்டு பிரீமியத்தில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு, ஜீவன் ஜோதி திட்டத்தில் ஆண்டு பிரிமியம் 436 ரூபாய்க்கு 2 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளியாக இணைய வயது வரம்பு தகுதி மட்டுமே உள்ளது. சுரக் ஷா காப்பீடு திட்டத்தில், 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டோரும், 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டோர், ஜீவன் ஜோதி திட்டத்திலும் இணையலாம்.வங்கிகள் மூலம் மலிவான பிரீமிய த்தில், அதிக பலன் தரும் இந்த திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. அதனால், காப்பீடு திட்ட பயனாளிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.இந்நிலையில் இரு காப்பீடு திட்டங்களிலும் 100 சதவீதம் மக்கள் அனைவரையும் பயனாளியாக சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து, அனைத்து வங்கி தலைமையுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பர ன்ஸிங்கில் பேசியுள்ளார்.அதனடிப்படையில் அனைத்து வங்கிகளும், காப்பீடு திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க வேண்டும் என மாவட்ட அளவில் இயங்கும் தங்கள் வங்கி கிளைகளுக்கு அறிவு றுத்தியுள்ளன.

    காப்பீடு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் அனைவரையும் பயனா ளியாக இணைப்பதற்காக, கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது.அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட முன்னோடி வங்கிகள் இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 

    • வீடு கட்டுவதற்கு மாற்றத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் கடன் வழங்கப்படவில்லை.
    • கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்

    டிசம்பர் 3 இயக்கம் மாற்றுத்திறனாளிகள் புது வாழ்வு நலச்சங்கம் சார்பில் மாற்றத்திறனாளிகளுக்கு சுயதொழில் செய்வதற்கு கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.ஒரு லட்சம் வரை ஜாமீன் இல்லாமல் வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வீடு கட்டுவதற்கு மாற்றத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் கடன் வழங்கப்படவில்லை.

    இதனை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் மாவட்ட செயலாளர் அமரேசன், துணைத் தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் மணிகண்டன், இளைஞர் அணி செயலாளர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் வட்டி இல்லா கடன் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.

    ராசிபுரம்:

    சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற 15 மற்றும் 16-ந் தேதிகளில் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரி தலைமை வகித்தார். இதில் சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம், உதவி செயற்பொறியாளர் எஸ்.ஆர்.ஜவகர், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.

    • 4 சப்- டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. பூதப்பாண்டி சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜ் தலைமையிலான போலீசார் வரகுணமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவும் ரூ.12,200 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட் டத்தில் உள்ள 4 சப்- டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. பூதப்பாண்டி சப்- இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜ் தலைமையிலான போலீசார் வரகுணமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற 3 நபர் களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீ சார் அவர்களது வாக னத்தை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந் தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் பிடித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஈசாந்தி மங்கலத்தைச் சேர்ந்த ஷாஜின் (வயது 20), அந்தரபுரத்தை சேர்ந்த அர்ஜுன் (19), சுதனேஷ் (20) என்பது தெரியவந்தது.

    இவர்களிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவும் ரூ.12,200 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரின் வங்கி கணக்கு களை முடக்கி போலீ சார் நடவடிக்கை மேற்கொண்ட னர். ஷாஜின் மற்றும் அவரது தந்தை தாயாரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.மேலும் அர்ஜுன், சுதனேசனின் வங்கி கணக்குகளும் முடக்கப் பட்டுள்ளது.

    இந்த வழக்கில் இறச்ச குளத்தைச் சேர்ந்த ராஜ வேல் என்பவர் தலை மறைவானார். அவரை பிடிக்க போலீசார் நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட ஷாஜின், அர்ஜுன், சுதனேசனிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர். கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப் பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மர்ம கும்பல் பற்றி போலீசார் தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் இரணி யல் அருகே உள்ளது திங்கள் நகர். இங்குள்ள இரணியல் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.

    அதன் அருகே பல்வேறு கடைகளும் உள்ளன. இதனால் அங்கு எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிக மாக இருக்கும். இன்று காலை அந்த வழியாக வந்த வர்கள், ஏ.டி.எம். அறை கதவு சரியாக மூடப்படாமல் இருப்பதை பார்த்தனர்.

    சந்தேகத்தின் பேரில் ஏ.டி.எம். மையம் அருகே அவர்கள் சென்ற போது அந்த எந்திரம் சேதப்படுத் தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வங்கி யின் மேலாளர் ஹசீந்தருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அவர் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது ஏ.டி.எம். எந்தி ரத்தின் முன்பக்க கதவை யாரோ மர்ம மனிதர்கள், கம்பியால் நெம்பியிருப்பது தெரிய வந்தது.

    எனவே நள்ளிரவுக்கு மேல் யாரோ சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர், இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    அவர்கள், கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வரும் பகுதியின் கீழ் உள்ள இடம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த போலீ சார், அதுகுறித்து ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் வந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×