search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10ம் வகுப்பு மாணவி"

    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • அவர் அடிக்கடி செல்போனில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி வடக்கூர் கல்பாளைய தெருவை சேர்ந்தவர் தங்கம். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் மகள் ரம்யா (வயது 15).ரம்யா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கணவர் இறந்த பின்பு தங்கம் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    ரம்யா பள்ளிக்கு சென்று வந்த பின்னர் தாயாருக்கு உதவி செய்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவார். படித்து விட்டு அவரது அறையில் தூங்க செல்வார். இன்று காலை ரம்யா நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவரது தாயார் தங்கம், அறைக்கு சென்று கதவை தட்டினார்.

    அறைக்கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்தார்.

    அங்கு ரம்யா, மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கம் அலறினார்.

    இது பற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ரம்யா அடிக்கடி செல்போ னில் விளையாடி கொண்டிரு ந்ததாகவும், அதனை தாயார் கண்டித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்தி ருப்பதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு வீரர்கள் திரும்பும் வழியில் பனிச்சரிவு.
    • பனிச்சரிவில் சிக்கியுள்ள 28 பேர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரம்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இமயமலையின் திரவுபதி கா தண்டா-2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, திடீரென அந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


    இந்த பனிச்சரிவில் சிக்கிய சிலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


    இந்த துயர நிகழ்விற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருத்தம் தெரிவித்துள்ளார். உத்தர்காசியில் ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது, இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினேன். உள்ளூர் நிர்வாகம், தேசிய பேரீடர் மீட்புக்குழு, இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் ராணுவக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டு வருகின்றன, இவ்வாறு அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு பல உயிர்களை பலி வாங்கியுள்ளது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல், காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக திரும்பவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

    • விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது சோகம்
    • போலீசார் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே வட்டக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன், டெம்போ டிரைவர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திவாகர் (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கண்ணன் தற்பொழுது காணி மடத்தில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார். கண்ணனின் மகன் திவாகர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை அடுத்து திவாகர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இதையடுத்து நேற்று வீட்டில் இருந்து திவாகர் தனது தாயார் சித்ரா மற்றும் சகோதரி உடன் அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாடு கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் அங்கு கடல் அலையை ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது திவாகர் கடலில் இறங்கி கால் நனைத்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த ராட்சத அலை அவரை இழுத்துச்சென்றது. தாய் மற்றும் சகோதரியின் கண் எதிரே திவாகரை ராட்சத அலை இழுத்துச் சென்றதைப் பார்த்த அவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசுக்கும், கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட் டது.

    அவர்கள் சம்பவ இடத் திற்கு வந்து தேடுதல் வேட் டையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் திவாகர் பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை திவாகரை அலை இழுத்துச் சென்ற இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

    இதை பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கன்னியாகுமரி கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். திவாகரின் உறவினர்களும் அங்கு வந்தனர். அவர்கள் திவாகர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதற்கிடையில் போலீ சார் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது ராட்சத அலையில் மாணவன் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 9 கிலோ கஞ்சா- குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் கஞ்சா, குட்கா விற்பனை செய்பவர்கள் சம்பந்தமாக கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சா விற்பனை செய்த இடங்கள் மற்றும் குட்கா போதை பொருள் குறித்த கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடந்த அதிரடி சோதனையில் கஞ்சா விற்பனை செய்த திட்டகுடி கீழ்செருவாய் சீனிவாஸ் (22), திருமாணிக்குழி பாலகிருஷ்ணன் (35), 17 வயது சிறுவன், சிதம்பரம் சிவா (24), விமல்ராஜ் (23), ஆலபாக்கம் பிரகாஷ் (28), கிஷோர் (20), புதுப்பேட்டை ரகுபதி வயது 22 , திட்டக்குடி கோழியூர் ஆனந்தராஜ் ( 20), செந்தூரை பிரவின் (19) ஆகிய 10 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். குட்கா விற்பனை செய்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா மற்றும் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

    • ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு நாளை தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் மற்றம் அரசு தேர்வுகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 துணை தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு துணை தேர்வு தொடங்க உள்ளது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு நாளை தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு, பெருந்துறை, சத்தி, கோபி, பவானி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு 2,615 பேர் எழுத உள்ளனர்.

    இதேபோல் பிளஸ்-1 தேர்வு நாளை தொடங்கி வரும் 10-ம் தேதி நிறைவடைகிறது. இத்தேர்வும் 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் நடக்கிறது. தேர்வினை 1,566 பேர் எழுத உள்ளனர்.

    தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் மற்றம் அரசு தேர்வுகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், பாரதி இன்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு முதல்முறையாக சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.
    • அனைவரையும், பாரதி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் உமாதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், பாரதி இன்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு முதல்முறையாக சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவி வருணப்பிரியா 500-க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், மாணவி ஹரிப்பிரியா மற்றும் மாணவர் விக்னேஷ் 458 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவர் விக்னேஷ் 450 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளையும், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், உறுதுணையாய் இருந்த பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரையும், பாரதி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் உமாதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • திண்டுக்கல் அருகே டிரைவர் மற்றும் பெண்ணை தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    • வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே டிரைவர் மற்றும் பெண்ணை தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(26). இவர் டிராக்டர் வைத்து உழவு பணிகள் செய்து வருகிறார். சம்பவத்தன்று செங்காளியூரில் உள்ள ஒரு தோட்டத்தில் டிராக்டரில் உழவு பணி மேற்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கோபால், இந்துமதி, பாலுச்சாமி, காயத்ரி ஆகிய 4 பேரும் டிராக்டரை தடுத்து நிறுத்தி பிரச்சினைக்குரிய இந்த நிலத்தில் எதற்காக வேலை பார்க்கிறாய் என கூறி அவரிடம் தகராறு செய்தனர்.

    மேலும் டிராக்டரை சேதப்படுத்தியும், அவரது ெசல்போனை உடைத்தும், சிவக்குமாரை தாக்கியும் மிரட்டிஉள்ளனர். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் பாலுச்சாமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் கோபால்(42) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் ராஜம்மாள், சிலம்பாயி, சுப்ரமணி, மணிகண்டன், சிவா, ரத்தினம் ஆகிய 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா உயர்ந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.95ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 10 பைசா உயர்த்ப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை- 525, பர்வாலா- 438, பெங்களூர்- 510, டெல்லி- 455, ஹைதராபாத்- 474, மும்பை- 531, மைசூர்- 517, விஜயவாடா- 473, ஹெஸ்பேட்- 470, கொல்கத்தா- 542.

    கோழிவிலை : பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.139 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 107 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சோதனையில் 10 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    செந்துறை :

    திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் நத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையொட்டி செந்துறை பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த பிரான்மலை- பள்ளபட்டியை சேர்ந்த உதுமான் (31), சூர்யபிரகாஷ் (27) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    • கடலூரில் காதுகுத்து நிகழ்ச்சிக்கு சீர்வரிசை செய்யாததால் இரு தரப்பினர் மோதல்-10 பேர் மீது வழக்கு போடப்பட்டது.
    • கடலூர் புதுப்பாளையம் சேர்ந்தவர் ஜமுனா (வயது 35). இவருடைய உறவினர் சின்னத்தாய். இந்தநிலையில் சின்னத்தாய் வீட்டு காதுகுத்து விசேஷத்திற்கு ஜமுனா நகை செய்யவேண்டும். ஆனால் நகை செய்யவில்லை,

    கடலூர் : கடலூர் புதுப்பாளையம் சேர்ந்தவர் ஜமுனா (வயது 35). இவருடைய உறவினர் சின்னத்தாய். இந்தநிலையில் சின்னத்தாய் வீட்டு காதுகுத்து விசேஷத்திற்கு ஜமுனா நகை செய்யவேண்டும். ஆனால் நகை செய்யவில்லை என சின்னதாய் பல பேரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த ஜமுனா தனது தங்கை புவனாவுடன் சின்னதாய் வீட்டுக்கு நேரில் சென்று கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, புவனாவை கல்லால் தாக்கி மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகராறில் அம்மு என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் 2 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஜமுனா மற்றும் அம்மு கொடுத்த புகாரின் பேரில் தனித்தனியாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    • பீரோவை உடைத்து மர்ம கும்பல் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 70). ஓய்வு பெற்ற போலீஸ் காரர். இவரது மனைவி சந்திரா. இவர்களுக்கு யுகானந்தன் (வயது43) என்ற மகன் உள்ளார். அவர் சென்னையில் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ஒரே ஒரே வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருகின்றனர். கீழே வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மேல் தளத்தில் உள்ள வீட்டில் 3 அறைகள் இருக்கின்றன. இதில் ஒரு அறையில் சந்திரனும், சந்திராவும் மற்றொரு அறையில் யுகானந்தனும், கலைச்செல்வியும் . குழந்தைகள் இருவரும் இன்னொரு அறையிலும் தூங்குவது வழக்கம்.

    இந்த நிலையில் குழந்தைகள் இருவரும் உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பதால் அந்த அறையில் பூட்டு போடப்பட்டுள்ளது. நேற்று இரவு இவர்கள் அனைவரும் அவர்களது அறைக்கு தூங்கச் சென்றனர். அப்போது காலியாக இருந்த அறையில் உள்ளே புகுந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். புழுக்கம் அதிகமாக இருந்தால் சந்திரன் வெளியே எழுந்து வந்தார்.

    அப்போது வீட்டின் அறையின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் சந்திரன் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமண அழைப்பிதழ் கார்டு வாங்குவது போல் மோசடி.
    • கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகரத்தில் உள்ள சின்னக்கடை வீதி என்பது முக்கியமான பகுதியாகும். இப்பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன.

    தினமும் காலை முதல் இரவு வரை இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சின்னக்கடை வீதியில் திருவண்ணாமலை குபேர நகரை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மனைவி கவிதா என்பவர் திருமண அழைப்பிதழ் கார்டு மற்றும் நோட்டு புத்தகம் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' அணிந்தபடி வந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் 'ஹெல்மட்டை' கழற்றி மோட்டார் சைக்கிளில் வைத்துவிட்டு அந்த கடையில் திருமண அழைப்பிதழ் கார்டு வாங்குவது போன்று நின்று கொண்டிருந்தார்.

    கார்டு எடுப்பதற்காக கவிதா கடைக்குள் சென்ற போது அந்த வாலிபர் திடீரென கடைக்குள் புகுந்து அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு அவரை தள்ளி விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

    அதில் வாலிபர் சின்னக்கடை வீதியில் வந்து பைக்கில் நிற்பது ஹெல்மெட்டை கழற்றி வைத்துவிட்டு திருமண அழைப்பிதழ் கடைக்கு சென்று செயினை பறித்து விட்டு வேகமாக வெளியே ஓடி வந்து பைக்கில் ஏறி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்த காட்சிகளை வைத்து போலீசார் செயின் பறிப்பு கொள்ளையனை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×