என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 9 கிலோ கஞ்சா- குட்கா பறிமுதல்  10 பேர் கைது
  X

  கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 9 கிலோ கஞ்சா- குட்கா பறிமுதல் 10 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 9 கிலோ கஞ்சா- குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் கஞ்சா, குட்கா விற்பனை செய்பவர்கள் சம்பந்தமாக கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சா விற்பனை செய்த இடங்கள் மற்றும் குட்கா போதை பொருள் குறித்த கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடந்த அதிரடி சோதனையில் கஞ்சா விற்பனை செய்த திட்டகுடி கீழ்செருவாய் சீனிவாஸ் (22), திருமாணிக்குழி பாலகிருஷ்ணன் (35), 17 வயது சிறுவன், சிதம்பரம் சிவா (24), விமல்ராஜ் (23), ஆலபாக்கம் பிரகாஷ் (28), கிஷோர் (20), புதுப்பேட்டை ரகுபதி வயது 22 , திட்டக்குடி கோழியூர் ஆனந்தராஜ் ( 20), செந்தூரை பிரவின் (19) ஆகிய 10 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். குட்கா விற்பனை செய்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா மற்றும் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

  Next Story
  ×