search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுத்தேர்வில்"

    • பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், பாரதி இன்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு முதல்முறையாக சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.
    • அனைவரையும், பாரதி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் உமாதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், பாரதி இன்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு முதல்முறையாக சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவி வருணப்பிரியா 500-க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், மாணவி ஹரிப்பிரியா மற்றும் மாணவர் விக்னேஷ் 458 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவர் விக்னேஷ் 450 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளையும், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், உறுதுணையாய் இருந்த பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரையும், பாரதி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் உமாதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 662 மாணவர்கள், 12 ஆயிரத்து 500 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 162 மாணவ-மாணவிகள் எழுதினர்.
    • இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 316 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 944 பேரும் என மொத்தம் 22,260 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.55 என மொத்தம் 92.13 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வுகள் கடந்த மே மாதம் 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண்களை கணினியில் ஏற்றும் பணியும் முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை 10 மணிக்கு பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 662 மாணவர்கள், 12 ஆயிரத்து 500 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 162 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 316 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 944 பேரும் என மொத்தம் 22,260 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.55 என மொத்தம் 92.13 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 108 அரசு பள்ளிகளை சேர்ந்த 5,913 மாணவர்கள், 6,995 மாணவிகள் என மொத்தம் 12,908 பேர் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினர். இதில் 4756 மாணவர்கள், 6475 மாணவிகள் என மொத்தம் 11,231 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 80.43, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.57 என மொத்த தேர்ச்சி விகிதம் 87.01 சதவீதமாகும்.

    பிளஸ்-1 பொதுத்தேர்வை 78 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 67 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகளை எளிதில் அறியும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். மாணவர்களின் செல்போ னுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தது.

    இன்னும் 4 நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் மாணவர்கள் பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×