search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passed"

    • பெரம்பலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 63 பேர் தேர்ச்சி பெற்றனர்
    • பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் 531 ஆகும்

    பெரம்பலூர்,

    நடப்பு ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 7-ந் தேதி நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்தவர்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 122 பேர் 'நீட்' தேர்வினை எழுதினர். அவர்களுக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் கற்பகத்தின் நேரிடையான மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 முடித்த 95 பேர் நீட் தேர்வு எழுதினர்.

    இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த 5 மாணவர்களும், 18 மாணவிகளும் என மொத்தம் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மேலும் அதில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு 3 மாணவர்களுக்கும், 4 மாணவிகளுக்கும் என மொத்தம் 7 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 முடித்து நீட் தேர்வு எழுதிய 95 பேரில், 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு 8 மாணவர்களுக்கும், 9 மாணவிகளுக்கும் என மொத்தம் 17 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் 531 ஆகும். அந்த மதிப்பெண்ணை புகழேந்தி என்ற மாணவர் பெற்றார். பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளையும், அதில் அரசு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளவர்களையும் கலெக்டர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதியதில், 50 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 5 பேர் அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைத்து டாக்டருக்கு படித்து வருகின்றனர். இந்த ஆண்டு 13 பேர் கூடுதலாக மொத்தம் 63 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவா்களில் 24 பேருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த 2020-ம் கல்வியாண்டில் 6 பேரும், கடந்த 2021-ம் ஆண்டில் 5 பேரும் அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைத்து டாக்டருக்கு படித்து வருகின்றனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வை மொத்தம் 7090 பேர் எழுதினர்.
    • தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் 32-வது இடம் பெற்றது.

    ஊட்டி,

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது.

    நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வை 3502 மாணவர்கள், 3588 மாணவிகள் என மொத்தம் 7090 பேர் எழுதினர்.

    இந்த நிலையில், நேற்று எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு இணையத ளத்தில் வெளியிடப்பட்டது.

    மாணவர்கள் பாட வாரியாக எடுத்த மதிப்பெண் விவரம் மாணவர்கள் பள்ளிகளில் கொடுத்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.

    மேலும் பள்ளிகளில் உள்ள தகவல் பலகைகளில் மாணவர்கள் தேர்ச்சி விவரம் ஒட்டப்பட்டது.

    எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவில் நீலகிரி மாவட்டத்தில் 2,916 மாணவர்கள், 3,336 மாணவிகள் என மொத்தம் 6,297 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 88.82 சதவீதம் ஆகும்.

    இதில் 84.55 சதவீதம் மாணவர்களும், 92.98 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றனர்.

    தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் 32-வது இடம் பெற்றது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 89.5 ஆக இருந்த நிலையில், மாநிலத்தில் 19-வது இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில், வருகிற 26-ந் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. இருப்பினும், சில பள்ளி களில் பிளஸ்-1 சேர்க்கை நடந்து வருவதால், மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் தாங்கள் எடுத்த மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதன் மூலம் பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    • 10-ம் வகுப்பு தேர்வில் 30 ஆயிரத்து 152 பேர் எழுதினர்.
    • 10-ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 28 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சிப் பெற்றனர்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20ந் தேதி வரை நடந்தது. இத்தேர்வை திருப்பூர் மாவட்டத்தில் 312 பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்து 67 மாணவர்கள், 15 ஆயிரத்து 85 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 152 பேர் எழுதினர். இதன் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 30 ஆயிரத்து 152 மாணவ, மாணவிகளில் 13 ஆயிரத்து 785 மாணவர்கள், 14 ஆயிரத்து 538 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சிப் பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.93 ஆகும். இது கடந்த ஆண்டை விட 5.47 சதவீதம் அதிகம். தேர்வு எழுதிய மாணவர்களில் 91.49 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கடந்த ஆண்டு 29வது இடம் பிடித்திருந்த நிலையில் தற்போது 18 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை திருப்பூர் மாவட்டம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் 47 அரசு பள்ளிகள்,1 அரசு உதவி பெறும் பள்ளி, 104 தனியார் பள்ளிகள்,10 சுயநிதி பள்ளி என மொத்தம் 162 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    • மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48ஆயிரம் வழங்கப்படுகிறது.
    • தமிழகத்தில் மொத்தம் 6695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கோவை,

    தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் (என்எம்எம்எஸ்) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 162 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை (எம்எச்ஆர்டி) சார்பில் நாடு முழுவதும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி, திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்ேறாரின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.3.50 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

    ஏழாம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தொடர்ந்து 9, 10 பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய 4 வகுப்புகளுக்கான கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதன்படி 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படுகிறது.

    வறுமை காரணமாக திறமையான மாணவர்கள் பள்ளிக் கல்வியை நிறுத்தி விடக்கூடாது என்பதே இந்த கல்வி உதவித்தொகையின் நோக்கமாகும். மாணவர்களின் நுண்ணறிவுத்திறனை சோதிக்கும் வகையில் 90 மதிப்பெண்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு 90 மதிப்பெண்கள் என மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியானதில், தமிழகத்தில் மொத்தம் 6695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் கோவை மாவட்டத்தில், மொத்தம் 162 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 9-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் முகாசினி, ஹரிணி தங்கம், ரவீணா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர்.
    • அரசு சார்பில் ஆண்டுதோறும் தலா ரூ.1,000 வீதம் பிளஸ்-2 வரை வழங்கப்படும்.

    சிவகிரி:

    சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகள் 2021-2022-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற (என்.எம்.எம்.எஸ்) தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டனர்.

    இந்த தேர்வில் சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 9-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் முகாசினி, ஹரிணி தங்கம், ரவீணா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் தலா ரூ.1,000 வீதம் பிளஸ்-2 வரை வழங்கப்படும்.

    தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், சிவகிரி சேனைத்தலைவர் மகாசபை தலைவர் மாரியப்பன், பொருளாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் மூக்கையா, தலைமை ஆசிரியர் சக்திவேலு மற்றும் ஆசிரிய - ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் சேனைத்தலைவர் மகாசபை அறப்பணி குழு, கல்வி பணிக்குழு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 662 மாணவர்கள், 12 ஆயிரத்து 500 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 162 மாணவ-மாணவிகள் எழுதினர்.
    • இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 316 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 944 பேரும் என மொத்தம் 22,260 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.55 என மொத்தம் 92.13 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வுகள் கடந்த மே மாதம் 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண்களை கணினியில் ஏற்றும் பணியும் முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை 10 மணிக்கு பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 11 ஆயிரத்து 662 மாணவர்கள், 12 ஆயிரத்து 500 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 162 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 316 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 944 பேரும் என மொத்தம் 22,260 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.46, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.55 என மொத்தம் 92.13 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 108 அரசு பள்ளிகளை சேர்ந்த 5,913 மாணவர்கள், 6,995 மாணவிகள் என மொத்தம் 12,908 பேர் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினர். இதில் 4756 மாணவர்கள், 6475 மாணவிகள் என மொத்தம் 11,231 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 80.43, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.57 என மொத்த தேர்ச்சி விகிதம் 87.01 சதவீதமாகும்.

    பிளஸ்-1 பொதுத்தேர்வை 78 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 67 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிவுகளை எளிதில் அறியும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். மாணவர்களின் செல்போ னுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருந்தது.

    இன்னும் 4 நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் மாணவர்கள் பெற்று கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 110 மாற்றுத்திறனாளிகள் எழுதி இருந்தனர்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 70 மாற்றுத்திறனாளிகளில் 67 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை பொறுத்த வரை நெல்ைல மாவட்டத்தில் 131, தென்காசி மாவட்டத்தில் 101, தூத்துக்குடி மாவட்டத்தில் 104 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினர்.

    இதில் நெல்லையில் 113, தென்காசியில் 96, தூத்துக்குடியில் 100 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #MonsoonSession #OBC
    புதுடெல்லி:

    பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம். ஆனால், இதுதொடர்பான மசோதாவுக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இதுவரை வழங்கப்படவில்லை. 

    தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கப்படாததால், பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்கள் பல வகைகளில் காவு கொடுக்கப்பட்டன. அம்மக்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்குடன் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைகளை வழங்கினாலும் அதற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் இல்லை என்பதால் அந்தப் பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை.

    இந்நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 406 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். #Parliment #Loksabha #OBC
    நாடாளுமன்ற மக்களவையில், ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. #HumanTrafficking #LokSabha
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவையில், ‘ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. ஆட்கள் கடத்தப்படுவதை தடுப்பதும், கடத்தப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதும், கடத்தல்காரர்களை தண்டிப்பதும் இதன் நோக்கம் ஆகும்.

    ஆள் கடத்தலை தடுக்க மாவட்டந்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளை நியமிப்பதற்கும், கடத்தப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் பணிக்காக சிறப்பு அதிகாரியை நியமிப்பதற்கும் மாநில அரசுகளுக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.



    ஆண், பெண் இருபாலருக்கு மட்டுமின்றி, வெளிநாட்டினருக்கும் இம்மசோதா பொருந்தும் என்று விவாதத்துக்கு பதில் அளித்தபோது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்தார். மனிதர்களை வாங்குவதும், விற்பதும் முதல்முறையாக குற்றம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். #HumanTrafficking #LokSabha #tamilnews 
    ×