நீலகிரியில் 88.82 சதவீதம் பேர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வை மொத்தம் 7090 பேர் எழுதினர். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் 32-வது இடம் பெற்றது.
நீலகிரியில் 88.82 சதவீதம் பேர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி
Published on

ஊட்டி,

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வை 3502 மாணவர்கள், 3588 மாணவிகள் என மொத்தம் 7090 பேர் எழுதினர்.

இந்த நிலையில், நேற்று எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு இணையத ளத்தில் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் பாட வாரியாக எடுத்த மதிப்பெண் விவரம் மாணவர்கள் பள்ளிகளில் கொடுத்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது.

மேலும் பள்ளிகளில் உள்ள தகவல் பலகைகளில் மாணவர்கள் தேர்ச்சி விவரம் ஒட்டப்பட்டது.

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவில் நீலகிரி மாவட்டத்தில் 2,916 மாணவர்கள், 3,336 மாணவிகள் என மொத்தம் 6,297 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 88.82 சதவீதம் ஆகும்.

இதில் 84.55 சதவீதம் மாணவர்களும், 92.98 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றனர்.

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் 32-வது இடம் பெற்றது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 89.5 ஆக இருந்த நிலையில், மாநிலத்தில் 19-வது இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு முடிவு வெளியான நிலையில், வருகிற 26-ந் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. இருப்பினும், சில பள்ளி களில் பிளஸ்-1 சேர்க்கை நடந்து வருவதால், மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் தாங்கள் எடுத்த மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதன் மூலம் பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com