அமெரிக்க நடிகர் மெக்குயின் காலமானார்

ஹாலிவுட் நடிகரான Chad Mcqueen உடல்நலக் குறைப்பாடால் காலமானார்.தி கராத்தே கிட் என்ற படத்தில் டச் கதாப்பாத்திரத்தின் மூலம் புகழடைந்தார்.
அமெரிக்க நடிகர் மெக்குயின் காலமானார்
Published on

ஹாலிவுட் நடிகரான Chad McQueen {63} உடல்நலக் குறைப்பாடால் கடந்த 11 ஆம் தேதி காலமானார். Chad Mcqueen பிரபல கார் ரேஸரான ஸ்டீவ்- இன் மகனாவார்.

இவர் 1984-ல் வெளியான தி கராத்தே கிட் என்ற படத்தில் டச் கதாப்பாத்திரத்தின் மூலம் புகழடைந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

கராத்தே கிட் படத்தை தொடர்ந்து மார்ஷியல் லா, ஜிம்மி ஹாலிவுட் மற்றும் ரெட் லைன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். நடிப்பு மட்டும் அல்லாமல் கார் ரேஸிங்கில் மிகவும் ஆர்வம் உள்ளவர். பல ரேஸிங் போட்டியில் கலந்து பரிசுகளை வென்றுள்ளார்.

இவருக்கு சொந்தமாக கார் கஸ்டமைஸ் செய்யும் நிறுவனம் இருக்கிறது அதை தற்பொழுது இவரது மகன் பார்த்துக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com