search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plus-2 examination"

    • பிளஸ்-2 தேர்வில் கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது.
    • தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.

    பரமக்குடி

    பிளஸ்-2 பொது தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்று நகரில் முதலிடத்தை பெற்றது. இந்த பள்ளி மாணவி தீபிகா முதலிடத்தையும், சபிதா 2-ம் இடத்தையும், கோபிகா 3-ம் இடத்தையும் பெற்றனர். விலங்கியல் பாடத்தில் தீபிகா 100 மதிப்பெண்ணும், கணக்கியல் பாடத்தில் மாணவி கோபிகா 100 மதிப்பெண்ணும் பெற்றனர்.

    இவர்களுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல் ஹமீது, செயலர் சாதிக் அலி, பொருளாளர் லியாகத் அலி மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அஜ்மல் கான் வரவேற்றார். முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசும், 100 மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் புரோஸ்கான் நன்றி கூறினார்.

    • மொழிப்பாடத்தேர்வில் மட்டும் மாநில அளவில் 50 ஆயிரத்து 674 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
    • துணை பொதுத்தேர்வு ஜூன் 19ந் தேதி நடத்தப்படுகிறது.

    தாராபுரம் :

    பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ந தேதி துவங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடந்தது. மொழிப்பாடத்தேர்வில் மட்டும் மாநில அளவில் 50 ஆயிரத்து 674 பேர் ஆப்சென்ட் ஆகினர்.இவர்கள் பள்ளிக்கு வராதவர்கள் என தெரிவிக்கப்பட்டதால் நலத்திட்ட பொருட்கள், அதற்காக செலவிடப்பட்ட தொகை குறித்த கேள்விகள் எழுந்தன. பள்ளிக்கு வந்து தேர்வெழுத வராதவர்கள் நிலை குறித்து, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

    மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம், குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. தேர்வெழுதாத மாணவர்களை பள்ளி மேலாண்மை குழு மூலம், கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பிளஸ் 2 ரிசல்ட் வெளியான நிலையில் ஆப்சென்ட் மாணவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், உயர்கல்வி சேர்க்கையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, துணை பொதுத்தேர்வு ஜூன் 19ந் தேதி நடத்தப்படுகிறது. தோல்வியடைந்த மாணவர்களுக்கும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, ஆப்சென்ட்டான மாணவர்களில் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பட்டியல் திரட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

    • பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றது.
    • கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.27 ஆகும்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10 ஆயிரத்து 465 மாணவர்களும், 11 ஆயிரத்து 843 மாணவிகளும் தேர்வெழுதினர்.

    இன்று வெளியான தேர்வு முடிவில் 10 ஆயிரத்து 135 மாணவர்களும், 11 ஆயிரத்து 693 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 828 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.73 சதவீதம் ஆகும். மொத்த சதவீதம் 97.85 ஆகும்.

    மாநிலத்திலேயே மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்று முதன்மை மாவட்டமாக விருதுநகர் திகழ்கிறது.

    கடந்த 25 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்று வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக முதலிடத்தை இழந்த விருதுநகர் மாவட்டம் தற்போது மீண்டும் அதிகளில் தேர்ச்சி விகித்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

    கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.27 ஆகும்.

    • கடந்த 3 ஆம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது.
    • பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு பாடங்களுக்கு தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது.

    இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வி எண் 47(b)-க்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சித்து இருந்தால் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    • மாணவியின் தந்தைக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
    • மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது.கடலூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று கடைசி தேர்வு என்பதால் மாணவ-மாணவிகள் தீவிரமாக படித்து காலை முதல் மதியம் வரை தேர்வு எழுதி முடித்தனர். இதில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ் 2 மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது மாணவி கிரிஜாவின் தந்தை பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்த பொம்மை செய்யும் தொழிலாளி ஞானவேல் (வயது 45) திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிக்குரிய செய்தி தெரிந்தும், மாணவி கிரிஜா இன்று பிளஸ்-2 கடைசி தேர்வு என்பதால் நேரில் வந்து தேர்வு எழுதினார் என்ற விஷயம் தெரியவந்தது.

    தனது தந்தை இறந்தாலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து மாணவி இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதியதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மாணவி கிரிஜாவுக்கு ஆறுதல் கூறி தேர்வு எழுத ஊக்கமளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
    • தனித்தேர்வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

    கோவை,

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடக்கிறது.

    கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 360 பள்ளிகளை சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் என மொத்தம் 35,827 பேர் எழுதுகின்றனர். தனித்தேர் வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

    தேர்வு அறைகளில் இருக்கைகளில் மாணவ-மாணவிகளின் நுழைவுச்சீட்டு எண்கள் எழுதப்பட்டு இருந்தது. மாணவ-மாணவிகள் தேர்வு அறைகளுக்கு செல்ல வசதியாக தகவல் பலகையில் அறை எண், ஹால்டிக்கெட் எண், தேர்வு தேதி ஆகியவை அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

    தேர்வு மையங்கள் அனைத்திலும் மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதி செய்யப்பட்டு இருந்தது. தேர்வில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க 180 பேர் கொண்ட பறக்கும் படை, 128 நிலையான படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். 138 தேர்வு மைய முதன்மை கண்கா ணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.

    தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் ஹால்டிக்கெட்டை பரிசோதனை செய்த பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு அறைக்குள் சென்று தேர்வை எழுதினர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையத்தின் வெளியே விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் தேர்வு அறைக்குள் அனுமதிக்காத துண்டு தாள். செல்போன் வைத்திருத்தல், வினாத்தாள், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை அல்லது நிரந்தரமாக தொடர்ந்து படிக்க தடை விதிக்கப்படும். தேர்வு எழுதவும் தடை, மதிப்பெண் சான்றிதழ் ரத்து செய்தல், நிறுத்தம் செய்தல் போன்ற தண்டனைகளுக்கு உள்ளாக நேரிடும். எனவே தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பிளஸ்-2 தேர்வு நடந்த ராமநாதபுரத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்தமாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 15,630 மாணவர்கள், 18,760 மாணவிகள் என மொத்தம் 34,390 பேர் எழுத உள்ளனர். இதற்காக 128 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டு உள்ளன

    • திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 128 பள்ளிகளை சேர்ந்த 7383 மாணவர்கள், 7163 மாணவிகள் என மொத்தம் 14546 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
    • தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டு ள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் நாளை பிளஸ்-2 தேர்வு தொடங்க உள்ளது. திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 128 பள்ளிகளை சேர்ந்த 7383 மாணவர்கள், 7163 மாணவிகள் என மொத்தம் 14546 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    பழனி கல்வி மாவட்ட த்தில் 87 பள்ளிகளை சேர்ந்த 3931 மாணவர்கள், 4437 மாணவிகள் என மொத்தம் 8369 பேர் தேர்வு எழுதுவத ற்காக 38 மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளன. மாவட்டம் முழுவதும் 215 பள்ளிகளை சேர்ந்த 22,914 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

    தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டு ள்ளது. மேலும் தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 9 இடங்களில் வினாத்தாள் மையங்கள் அமைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்ட உள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதனை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் தொடங்க உள்ள பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • தேர்வு பணிகளில் சுமார் 1,500 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள்(திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி மாவட்டந்தோறும் தேர்வுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் நாளை மறுநாள் தொடங்க உள்ள பிளஸ்-2 தேர்வுக்காக மொத்தம் 73 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ, மாணவிகள் சுமார் 22 ஆயிரம் பேர் 69 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

    இதுதவிர பாளை மத்தியச்சிறை, சேரன்மகாதேவி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி, ஏர்வாடியில் தனியார் மெட்ரிக் பள்ளி, பாளை தனியார் பள்ளிகளில் 4 தனியார் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

    பறக்கும் படை

    தேர்வையொட்டி வினாத்தாள்கள் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளில் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வு பணிகளில் சுமார் 1,500 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

    தேர்வு நாளன்று காலை 7 மணிக்கு வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்காக 16 வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    தேர்வில் முறைகேடுகள், தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் 7 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர நிலையான படையும் ஒவ்வொரு மையத்திற்கும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி ஆய்வு செய்து வருகிறார்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-1 பொதுத்தேர்வை 16, 499 பேரும், பிளஸ்-2 தேர்வை 18,299 மாணவர்களும் எழுத உள்ளனர். இதற்காக 2 தனிதேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 64 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 2 தேர்வுகளுக்காக 1,322 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தனித்தேர்வு மையங்களில் சிறை கைதிகள் உள்பட பலர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    கட்டுப்பாடுகள்

    தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கண்கா ணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் உள்ள விதிகளை மாண வர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 110 மாற்றுத்திறனாளிகள் எழுதி இருந்தனர்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 70 மாற்றுத்திறனாளிகளில் 67 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை பொறுத்த வரை நெல்ைல மாவட்டத்தில் 131, தென்காசி மாவட்டத்தில் 101, தூத்துக்குடி மாவட்டத்தில் 104 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினர்.

    இதில் நெல்லையில் 113, தென்காசியில் 96, தூத்துக்குடியில் 100 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ×