என் மலர்
உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 தேர்வில் கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முதலிடம்
- பிளஸ்-2 தேர்வில் கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது.
- தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.
பரமக்குடி
பிளஸ்-2 பொது தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி 99 சதவீத தேர்ச்சி பெற்று நகரில் முதலிடத்தை பெற்றது. இந்த பள்ளி மாணவி தீபிகா முதலிடத்தையும், சபிதா 2-ம் இடத்தையும், கோபிகா 3-ம் இடத்தையும் பெற்றனர். விலங்கியல் பாடத்தில் தீபிகா 100 மதிப்பெண்ணும், கணக்கியல் பாடத்தில் மாணவி கோபிகா 100 மதிப்பெண்ணும் பெற்றனர்.
இவர்களுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. தாளாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல் ஹமீது, செயலர் சாதிக் அலி, பொருளாளர் லியாகத் அலி மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அஜ்மல் கான் வரவேற்றார். முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசும், 100 மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் புரோஸ்கான் நன்றி கூறினார்.