search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பிளஸ்-2 தேர்வை ஆர்வத்துடன் எழுதிய மாணவ- மாணவிகள்
    X

    கோவையில் பிளஸ்-2 தேர்வை ஆர்வத்துடன் எழுதிய மாணவ- மாணவிகள்

    • தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.
    • தனித்தேர்வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

    கோவை,

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நடக்கிறது.

    கோவை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 360 பள்ளிகளை சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் என மொத்தம் 35,827 பேர் எழுதுகின்றனர். தனித்தேர் வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.

    தேர்வு அறைகளில் இருக்கைகளில் மாணவ-மாணவிகளின் நுழைவுச்சீட்டு எண்கள் எழுதப்பட்டு இருந்தது. மாணவ-மாணவிகள் தேர்வு அறைகளுக்கு செல்ல வசதியாக தகவல் பலகையில் அறை எண், ஹால்டிக்கெட் எண், தேர்வு தேதி ஆகியவை அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

    தேர்வு மையங்கள் அனைத்திலும் மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதி செய்யப்பட்டு இருந்தது. தேர்வில் முறைகேடு நடக்காமல் கண்காணிக்க 180 பேர் கொண்ட பறக்கும் படை, 128 நிலையான படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். 138 தேர்வு மைய முதன்மை கண்கா ணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.

    தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் ஹால்டிக்கெட்டை பரிசோதனை செய்த பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு அறைக்குள் சென்று தேர்வை எழுதினர்.

    பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேர்வு மையத்தின் வெளியே விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் தேர்வு அறைக்குள் அனுமதிக்காத துண்டு தாள். செல்போன் வைத்திருத்தல், வினாத்தாள், விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள் மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டு வரை அல்லது நிரந்தரமாக தொடர்ந்து படிக்க தடை விதிக்கப்படும். தேர்வு எழுதவும் தடை, மதிப்பெண் சான்றிதழ் ரத்து செய்தல், நிறுத்தம் செய்தல் போன்ற தண்டனைகளுக்கு உள்ளாக நேரிடும். எனவே தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பிளஸ்-2 தேர்வு நடந்த ராமநாதபுரத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்தமாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 15,630 மாணவர்கள், 18,760 மாணவிகள் என மொத்தம் 34,390 பேர் எழுத உள்ளனர். இதற்காக 128 தேர்வு மையங் கள் அமைக்கப்பட்டு உள்ளன

    Next Story
    ×