search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10th Class"

    • 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது
    • முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது

    பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து

    தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

    10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நாளை, தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

    இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • கடந்த 2020-ம் ஆண்டு திப்பு சுல்தான், பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்கள் பலரின் பாடப்பகுதியையும் பா.ஜ.க. அரசு நீக்கியது.
    • மாணவர்கள் சிறு வயதிலேயே சமூக சிந்தனைகள் கொண்டு வளர்வார்கள்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில்கொ ரோனா தொற்று காலத்தில், மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி கடந்த 2020-ம் ஆண்டு திப்பு சுல்தான், பெரியார், நாராயண குரு மற்றும் முகலாய மன்னர்கள் பலரின் பாடப்பகுதியையும் பா.ஜ.க. அரசு நீக்கியது. இந்த பாட பகுதிகளை நீக்கியது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் நீக்கப்பட்ட பாடப் பகுதிகளை மீண்டும் சேர்ப்பது குறித்து தற்போதைய காங்கிரஸ் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்சபை தேர்தலின் போது, நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.க. அரசாங்கத்தின் போது பாட புத்தகங்களில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் மாற்றியமைக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதியளித்திருந்தது.

    தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் ஓய்வுபெற்ற வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் மஞ்சுநாத் ஹெக்டே தலைமையிலான பாடநூல் திருத்தக் குழுவை அமைத்தது. இக்குழு கர்நாடக அரசின் 6 முதல் 10 ம் வகுப்புகளுக்கான கன்னடம் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பரிந்துரையை வெளியிட்டுள்ளது.

    இந்தக் குழு அளித்த பரிந்துரையின்படி, 10-ம் வகுப்பு வரலாறு பாடநூலில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சமூக சீர்த்திருத்தங்கள் பாடம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

    பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்த்திருப்பது மாணவர்களை சிறு வயதிலேயே சமூக சிந்தனைகள் கொண்டு வளர்வார்கள் என கர்நாடகா கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு அரசு தேர்வு துறையால் நடத்தப்படும் பிளஸ்-2 தேர்வு முடிவடைந்துள்ளது.
    • தேர்வினை 106 மையங்களில் எழுத இருக்கிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதனை 32 ஆயிரத்து 171 பேர் எழுதுகிறார்கள்.தமிழ்நாடு அரசு தேர்வு துறையால் நடத்தப்படும் பிளஸ்-2 தேர்வு முடிவடைந்துள்ளது. இதுபோல் பிளஸ்-1 தேர்வு இன்று (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகா ரிகள் செய்துள்ளனர்.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நாளை தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 20-ந் தேதி வரை நடைபெ றுகிறது. இந்த தேர்வினை 106 மையங்களில், 354 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 1484 பேர் என மொத்தம் 32 ஆயிரத்து 171 பேர் எழுத இருக்கிறா ர்கள்.தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 106 தலைமை ஆசிரிய ர்களும், 106 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளராக பணியாற்ற 1780 ஆசிரி யர்களும் நியமிக்கப்ப ட்டுள்ளனர். மேலும், காப்பி அடித்தல் போன்றவற்றை தவிர்க்கும் வகையில் 178 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் தேர்வு மையத்தில் புகார் பெட்டி மற்றும் ஆலோசனை பெட்டி போன்றவைகளும் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளன. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன.

    • ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு நாளை தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் மற்றம் அரசு தேர்வுகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 துணை தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு துணை தேர்வு தொடங்க உள்ளது.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு நாளை தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு, பெருந்துறை, சத்தி, கோபி, பவானி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு 2,615 பேர் எழுத உள்ளனர்.

    இதேபோல் பிளஸ்-1 தேர்வு நாளை தொடங்கி வரும் 10-ம் தேதி நிறைவடைகிறது. இத்தேர்வும் 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் நடக்கிறது. தேர்வினை 1,566 பேர் எழுத உள்ளனர்.

    தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் மற்றம் அரசு தேர்வுகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    ×