search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மாவட்டத்தில்"

    • மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது.
    • கவுந்தப்பாடி பகுதியில் இரவில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

    ஈரோடு:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகி றது. குறிப்பாக இரவு நேரத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கோபி, நம்பியூர், புளியம்பட்டி பகுதியில் உள்ள தரைப்பால ங்கள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் வாழ்க்கை ஸ்தம்பித்தது. இந்நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.

    கவுந்தப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி யில் இரவில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதேப்போல் பவானி, அம்மாபேட்டை, கோபி, பெரு ந்துறை, தாளவாடி, கொடுமுடி, சத்தியமங்கலம், நம்பியூர் போன்ற பகுதிகளி லும் சாரல் மழை பெய்தது.

    கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் அணைப்பகுதிகளான வரட்டுப்பள்ளம், குண்டேரி ப்பள்ளம், பவானிசாகர், கொடிவேரி போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்து உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    கவுந்தப்பாடி-28.20, வரட்டுப்பள்ளம்-17, பவானி-15.80, அம்மா பேட்டை-14.20, தாளவாடி-11, கோபி-10.20, பெருந்துறை-10, பவானி சாகர்-8.20, கொடுமுடி-8, ஈரோடு-6.20, கொடிவேரி-6, சத்தியமங்கலம்-3, நம்பியூர்-2.

    • பட்டாசு கடைகள் அமைக்க 247 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
    • மாவட்டம் முழுவதும் 238 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடைவீதிகளில் ஜவுளி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதேபோல் பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைக்க மொத்தம் 247 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. இதில் உரிய பாதுகாப்பு, பல்வேறு அம்சங்கள் இடம் பெறாத காரணத்தினால் 9 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 238 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் கூறும்போது,

    தீபாவளி பண்டிகையை மக்கள் பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் 2 வாசல் கண்டிப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதேப்போல் பாதுகாப்பு உபகரணங்கள் கடையில் இருக்க வேண்டும்.

    300 லிட்டர் அளவு தண்ணீர் சேமித்து வைத்தி ருக்க வேண்டும். தீயணைப்பு கருவிகள் வைத்திருக்க வேண்டும். மிக முக்கியமாக புகை பிடித்தல் கூடாது போன்ற அறிவுரை பட்டாசு கடைக்காரர் களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

    மேலும் விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசு எப்படி வெடிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் தினமும் காலை, மாலையில் தீயணைப்பு துறை வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    வீடுகளுக்குள் வெடி எடுக்கக் கூடாது. குடிசை பகுதி, தென்னை மரம் அருகே ராக்கெட் வெடிக்க கூடாது போன்றவை அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார்.

    • அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில் 133 பள்ளிகளில் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.

    ஈரோடு:

    அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ் படிக்க வழிவகை செய்யும் விதமாக அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நடப்பாண்டில் நீட் மற்றும் ஜெ.இ.இ. பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்டத்தில் வரும் 6-ந் தேதி தொடங்குகிறது.

    இது குறித்து பள்ளிக்கல்வித்துறையினர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, எலைட் பள்ளி என 133 பள்ளிகளில் நீட், ஜெ.இ.இ. பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. வகுப்பை காலை அல்லது மாலை நேரத்தில் நடத்தி கொள்வது குறித்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

    திங்கள் முதல் வியாழன் வரை தினமும் பயிற்சி வகுப்பு நடக்கும். வெள்ளிக்கிழமை தேர்வு குறித்த மதிப்பீடு நடக்கும். இதே நடைமுறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடை பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு வரை நீட் தேர்வு பயிற்சி வகுப்பாக மட்டும் நடந்தது. இந்த ஆண்டு பயிற்சி வகுப்புடன் தினமும் தேர்வும் நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வானில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.
    • தாளவாடி பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. காலை யிலிருந்து மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள், குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    அதே போல் மாவட்ட முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் வழக்கம் போல் அதிகமாக பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் மாலை 5 மணி பிறகு வானில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி யுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.

    ஈரோடு மாநகரப் பகுதியில் சுமார் 45 நிமிடம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் இரவு சாரல் மழை செய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.

    தாளவாடி பகுதியில் இரவில் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் கொடுமுடி, பெருந்துறை, சத்தியமங்க லம், கோபி, பவானி, கவுந்த ப்பாடி, வரட்டுப்பள்ளம், கொடிவேரி, சென்னிமலை, நம்பியூர், பகுதிகளிலும் இடி யுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் மழை யால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    தாளவாடி - 33, கொடு முடி - 30.80, பெருந்துறை - 27, சத்தியமங்கலம்-27, கோபி - 25.20, பவானி - 21, பவானிசாகர் - 16, கவுந்தப்பாடி - 9.20, ஈரோடு- 9, வரட்டு பள்ளம்- 8.80, கொடிவேரி-6.20, சென்னிமலை - 5, நம்பியூர் - 3.

    • ஈரோடு மாவட்டத்தில் மிலாடிநபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு மது கடைகளுக்கு விடுமுறை.
    • அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மிலாடிநபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு 'மது விற்பனை இல்லாத நாளாக" அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து வரும் 28-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ஆகிய 2 நாட்கள் முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

    அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,271 ரேஷன் கடைகளில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 758 ரேஷன் கார்டுகள் உள்ளன.
    • இவர்களில் 10,159 பேர் இன்னும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கவில்லை.

    ஈரோடு:

    ஒரே நபர் இரு ரேஷன் கார்டு வைத்திருப்பதும், ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டில் பயனாளிகளாக இருப்பதை தவிர்க்கவும், ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பி னர்களின் அனை வரது ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 1,271 ரேஷன் கடைகளில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 758 ரேஷன் கார்டுகள் உள்ளன.

    இதில் அரிசி கார்டு 6 லட்சத்து 72 ஆயிரத்து 670. அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகள் 66,235 ஆகும். காவலர் கார்டுகள் 1,572 ஆகும். சர்க்கரை கார்டு 18, 181 ஆகும்.

    முதியோர் அரிசி கார்டு 4,794 ஆகும். அன்னபூர்ணா அரிசி கார்டு 23 ஆகும். எந்த பொருளும் வேண்டாம் என்பவர்களுக்கான கார்டு 1,346 ஆகும்.

    இந்த காடுகளில் 20 லட்சத்து 81 ஆயிரத்து 780 உறுப்பினர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 10,159 பேர் இன்னும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைக்கவில்லை.

    இவர்களின் விபரத்தை சேகரித்து இணைக்கும் முயற்சியில் வட்ட வழங்கல் அலுவலர்க ள் ஈடுபட்டுள்ளனர். ஒரு வேளை அவர்களின் பெயர் வேறு கார்டில் இருந்தா லும், அவர் இறந்திருந்தாலும் விரைவில் பெயர் நீக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
    • முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு நிதி உதவி வழங்கி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    அமைச்சர் சு. முத்துசாமி மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டமானது வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் ஈரோடு திண்ட லில் உள்ள வேளாளர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு நிதி உதவி வழங்கி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3-வது நாளாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
    • கொடுமுடியில் அதிகபட்சமாக 8 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் போன்று வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 2 நாட்க ளாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலை யில் நேற்று 3-வது நாளாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதிய முதல் இரவு வரை இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

    குறிப்பாக கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாது இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    மாவட்டத்தில் கொடு முடியில் அதிகபட்சமாக 86 மில்லி மீட்டர் அதாவது 8 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    இதேபோல் நம்பியூரில் சுமார் மாலை 2 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. ஈரோடு மாநகரா ட்சி பகுதியில் நேற்று மதியம் 2 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது அதன் பிறகு கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.

    சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மாநகரின் பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. மாநகராட்சியில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    ஈரோடு நாச்சியப்பா வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு, மீனாட்சி சுந்தரனார் சாலை ஆர்.கே.வி.ரோடு, பெருந்துறை ரோடு பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஈரோடு வ.உ.சி. மார்க்கெட் பகுதி சேரும், சகதிவுமாக காட்சியளிக்கிறது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

    பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதேப்போல் பெருந்துறை, வரட்டுபள்ளம், கோபி, கவுந்தப்பாடி, தாளவாடி, குண்டேரி பள்ளம், மொடக்குறிச்சி, அம்மா பேட்டை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. 3 நாட்களாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஈரோடு மாவட்டத்தில் கனத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில், ஏராளமான விவசாயிகள் நேந்திரம், கதலி, மொந்தன், பூவன் உள்ளிட்ட வாழை சாகுபடி செய்துள்ளனர்.

    இந்நிலையில் எண்ணமங்கலம் சுற்று வட்டார பகுதியில் சூறாவளி காற்று டன் கனமழை பெய்தது. இதில், அப்பகுதி யில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த, இரண்டாயிரம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    கொடுமுடி-86.80, நம்பியூர்-48, ஈரோடு-37, பவானி-32.80, பெருந்துறை-28, வரட்டுபள்ளம்-11.40, கோபி-9.20, கவுந்தப்பாடி-4.20, தாளவாடி-3.10, குண்டேரி பள்ளம்-3.40, மொடக்கு றிச்சி-3, அம்மா பேட்டை-2.

    • ஈரோட்டில் சில இடங்களில் லேசான மழை பெய்தது.
    • திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிறுவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெ யிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலை முதல் மாலை வரை வெயில் தாக்கம் உச்சத்தில் இருந்து வந்தது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்த தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோட்டில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. எனினும் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது. மாலை திடீரென வானங்களில் கருமேகங்கள் சூழ்ந்து முதலில் லேசான மழை பெய்ய தொடங்கியது.

    அதன் பிறகு நேரம் செல்ல சொல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேர ம் பலத்த மழை பெய்தது.

    இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகளின் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளு க்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்த சூழ்நிலையில் மழை பெய்த தால் குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிறுவியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக மொடக் குறிச்சியில் 46 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதுபோல் எலந்தகுட்டை மேடு, கவுந்தப்பாடி, கொடுமுடி, குண்டேரி பள்ளம், தாளவாடி பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    மொடக்குறிச்சி-46, எலந்தகுட்டைமேடு-44, கவுந்தப்பாடி-41.20, ஈரோடு-20, கொடுமுடி-14.20, குண்டேரிபள்ளம்-10, தாளவாடி-8, பவானி-6.40, சென்னிமலை-2.

    • போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் கோபி, சித்தோடு, சென்னிமலை, சத்தியமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த கோபி மொடச்சூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 21),

    சித்தோடு அம்மன் நகரை சேர்ந்த பாலநாதகுமார் (50), சென்னிமலை பாரதிநகரை சேர்ந்த சுப்ரமணி (57), சக்தி வடக்கு பேட்டையை சேர்ந்த இன்பராஜ் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் இருந்த போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2-ம் கட்டமாக மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ண ப்பம் மற்றும் டோக்கன் விநியோகக்கும் பணி இன்று தொடங்கியது.
    • இதில் 568 ரேஷன் கடைகளை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

    ஈரோடு:

    மகளிர் உரிமைத்தொ கையாக மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தமிழகம் முழுவதும் தொடங்கப்படுகிறது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக முதல் கட்ட விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் விநியோகம் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடந்தது.

    அப்போது விண்ணப்பம் பெறாத வர்கள், வீடு பூட்டி இருந்தது போன்ற காரணத்துக்கான விண்ணப்பங்கள் அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்கள் பெற்று வருகின்றனர்.

    முதற்கட்ட விண்ணப்பதா ரர்களுக்கு கடந்த மாதம் 24-ந் தேதி முதல் வரும் 4-ந் தேதி வரை பதிவேற்ற முகாம் நடந்து வருகிறது. இந்த பணியில் இல்லம் தேடி கல்வித்திட்ட பணியாளர்கள், வருவாய் துறையி னர், கூட்டுறவு துறையினர் என மொத்தம் 3 ஆயிரத்து 177 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ண ப்பம் மற்றும் டோக்கன் விநியோகக்கும் பணி இன்று தொடங்கியது.

    இதில் 568 ரேஷன் கடை களை சேர்ந்த வர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படு கிறது. ரேஷன் கடை ஊழி யர்கள் தங்கள் பகுதியில் ஒதுக்க ப்பட்ட ஒவ்வொரு வீடுகளாக சென்று மகளிர் உரிமை திட்டத்திற்கான டோக்கன் மற்றும் விண்ண ப்பம் வழங்கி வருகின்றனர்.

    வரும் 4-ம் தேதி வரை இந்த பணி நடைபெறுகிறது.அதைத்தொடர்ந்து வரும் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 544 இடங்களில் பதிவேற்ற முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது.

    முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 77 ஆயிரத்து 532 ரேஷன் அட்டை தாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டு ள்ளன.

    • தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
    • இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.

    ஈரோடு:

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அரசு வேலை நாளாக உள்ளதால் இவ்விடு முறையை ஈடு செய்யும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் 12-ந் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    ×