search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "10 killed"

  • பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு வீரர்கள் திரும்பும் வழியில் பனிச்சரிவு.
  • பனிச்சரிவில் சிக்கியுள்ள 28 பேர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரம்.

  டேராடூன்:

  உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இமயமலையின் திரவுபதி கா தண்டா-2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

  அப்போது, திடீரென அந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


  இந்த பனிச்சரிவில் சிக்கிய சிலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


  இந்த துயர நிகழ்விற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருத்தம் தெரிவித்துள்ளார். உத்தர்காசியில் ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது, இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினேன். உள்ளூர் நிர்வாகம், தேசிய பேரீடர் மீட்புக்குழு, இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் ராணுவக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டு வருகின்றன, இவ்வாறு அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  இதேபோல் உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு பல உயிர்களை பலி வாங்கியுள்ளது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல், காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக திரும்பவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

  சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். #China #Pharmaceutical #FireAccident
  பீஜிங்:

  சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஷினான்ஜி நகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. ஆலையின் கீழ் தளத்தில் உள்ள எரிவாயு குழாய்களை சீரமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு திடீரென தீப்பிடித்தது.

  இதனால் அங்கு கரும் புகை மண்டலம் எழுந்து, ஆலை முழுவதையும் சூழ்ந்தது. தீவிபத்தை தொடர்ந்து, ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்தபடி வெளியே ஓடினர். எனினும் தீயில் சிக்கியும், புகையால் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டும் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

  கடந்த மாதம் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 78 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.   #China #Pharmaceutical #FireAccident 
  சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் அமைந்துள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் உடல் கருகி பலியாகினர். #ChinaFire
  பெய்ஜிங்:

  சீனாவின் ஷாங்காங் மாகாணத்தில் செயல்பட்டு வரும் மருந்து தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீப்பற்றியது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் பலர் சிக்கினர்.

  தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகியும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற மூன்று தீவிபத்துகளில் சிக்கி 13 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. #ChinaFire
  பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள கால்பந்து கிளப்பின் பயிற்சி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலிதாபமாக பலியாகினர். #BrazilFire #BrazilFootballClubFire
  ரியோ டி ஜெனிரோ:

  பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிளமிங்கோ கால்பந்து கிளப் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பயிற்சி மையத்தில் இன்று அதிகாலை சிலர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

  அப்போது, கால்பந்து கிளப்பில் திடீரென தீ பற்றியது. இது அனைத்து இடங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். தீ விபத்தில் கிளப்பின் ஒரு பகுதி முழுவதும் சேதமானது.

  தகவலறிந்து தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து சென்றன. தீயை போராடி அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #BrazilFire #BrazilFootballClubFire
  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வேனும் கன்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #PudukkottaiAccident
  புதுக்கோட்டை:

  ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோயில் வழிபாட்டுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

  புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பிரிவு சாலையில் இன்று மதியம் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி கடுப்பாட்டை இழந்து வேன் மீது வேகமாக மோதியது.

  இந்த விபத்தில் வேனில் சென்ற ஐயப்ப பக்தர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் இறந்தனர்.

  தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு திருமயம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  காயமடைந்து திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் தெரிவித்தார். #PudukkottaiAccident
  ஆப்கான் தலைநகர் காபுலில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #Kabulsuicideattack #Kabulattack
  காபுல்:

  ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகர் காபுலில் பிரிட்டனை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

  இந்நிலையில், இந்த நிறுவனத்தின் அருகில் நேற்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நேற்று திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

  இந்த தாக்குதலில் அங்கிருந்த 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும், 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

  தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  பிரிட்டன் பாதுக்காப்பு நிறுவனம் மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

  இந்த நிறுவனம், காபுலிலுள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. #Kabulsuicideattack #Kabulattack
  சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகத்தின் அருகே இன்று நடைபெற்ற தாக்குதலில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #SomaliaTwinBlast
  மொகடிஷு:

  சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் சஹாபி என்ற பிரபல உணவகம் அமைந்துள்ளது. இன்று அந்த உணவகத்தின் அருகே இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றது.

  இந்த வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இதில் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

  தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். 
  #SomaliaTwinBlast
  சத்தீஸ்கர் மாநிலத்தில் நவராத்திரி விழாவிற்கு சென்று திரும்பிய 10 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். #ChhattisgarhAccident
  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலம் ராஜநந்த்கான் மாவட்டம், டோங்கர்கர் நகரில் உள்ள புகழ்பெற்ற பம்லேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் துர்க் மாவட்டம் பிலாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை அந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சொகுசு காரில் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

  ராஜநந்த்கான்-துர்க் சாலையில் சோம்னி கிராமம் அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல டிரைவர் முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி மீது சொகுசு கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுமையாக சேதமடைந்தது.

  காருக்குள் இருந்த 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரைத் தேடி வருகின்றனர். #ChhattisgarhAccident
  குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் லாரியுடன் கார் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
  அகமதாபாத்:

  குஜராத் மாநிலம் சூரத் நகரில் பல்சானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் பலேஷ்வர் கிராமம் அருகில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 11 பேர் பயணம் செய்தனர். 

  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி எதிர்ப்புறம் சென்றது. அப்போது அங்கு வந்த லாரி கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

  விபத்து குறித்து அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். விபத்தில் பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
  சிரியாவில் எயின் அல் டினே கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதாகவும் அதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Syria #Airstrike
  டமாஸ்கஸ்:

  சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி உள்நாட்டுப்போர் மூண்டது. தொடர்ந்து 8-வது ஆண்டாக அந்தப் போர் நீடித்து வருகிறது.

  இந்த நிலையில் சிரியாவின் தென் மேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள ஒரு கிராமத்தின் மீது ரஷியாவின் துணையுடன் அதிபர் ஆதரவு படைகள் நேற்று குண்டுவீச்சில் ஈடுபட்டன.

  இந்தக் குண்டுவீச்சில் 6 பேர் பலியாகினர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

  ஆனால் அங்கு இயங்கி வருகிற ஒரு மருத்துவ அறக்கட்டளை, எயின் அல் டினே கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதாகவும் அதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் கூறுகிறது.

  பலியானவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் என கூறப்படுகிறது. 35 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

  அண்டை கிராமங்களில் அதிபர் ஆதரவு படைகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இடம் பெயர்ந்து எயின் அல் டினே கிராமத்துக்கு வந்த மக்கள்தான் பீப்பாய் குண்டுவீச்சில் சிக்கிக்கொண்டதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.