என் மலர்
நீங்கள் தேடியது "president erdogan condoles"
துருக்கி நாட்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் அதில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 73 பேர் காயமடைந்தனர். #Turkey #TtrainDerail
இஸ்தான்புல்:
பல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டது அதில் 360-க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
தெகிர்டாக் பகுதியில் வரும் போது பயணிகள் ரெயிலின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 10 பயணிகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 73 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து சென்றனர். 100க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சென்று முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. துருக்கு ராணுவம் சார்பில் மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அதிபர் எர்டோகன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #Turkey #TtrainDerail






