என் மலர்
நீங்கள் தேடியது "train derail"
- கோரே ரெயில் நிலையத்தில் நுழைந்த சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டது.
- ஒடிசா முதல் மந்திரி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கோரே ரெயில் நிலையத்தில் நேற்று காலை 6.44 மணிக்கு சரக்கு ரெயில் ஒன்று சென்றது.
ரெயில் நிலையத்தில் இந்த சரக்கு ரெயில் மிக வேகமாக சென்றபோது திடீரென தடம் புரண்டது.
ரெயில் நிலைய தண்டவாளத்தை இடித்து தள்ளி நொறுக்கிய சரக்கு பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்து நிகழ்ந்த போது ஏராளமான பயணிகள் ரெயில் நிலையத்தில் நின்றிருந்தனர். சரக்கு ரெயில் தடம் புரண்டதால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பலர் சரக்கு ரெயில் பெட்டி அடியில் சிக்கினர்.
தகவலறிந்த ரெயில்வே மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரக்கு பெட்டிகளை விரைவாக அகற்றினர். அத்துடன் பயணிகளையும் மீட்டனர். அப்போது 3 பயணிகள் உடல் நசுங்கி பலியானது தெரிந்தது.
ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து அறிந்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், சரக்கு ரெயில் தடம் புரண்ட விபத்து காரணமாக அந்த பகுதி வழியாக இயக்கப்படும் 19 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 20 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது என இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது.
- ரெயில் தடம் புரண்டதில் எட்டு பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு இறங்கி விபத்துக்குள்ளனது.
- விபத்தில் சிக்கி உயிரிழந்தர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரெயில் நிலையம் அருகே ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரெயில் தடம் புரண்டதில் எட்டு பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு இறங்கி விபத்துக்குள்ளனது.
இதில், ரெயிலில் பயணித்த 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு குழுக்கள் விரைந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு நிவாரண ரெயில் அனுப்பப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரி மொஹ்சின் சைல் கூறியுள்ளார். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தர்களின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
- விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.
- உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு.
உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமுற்றனர். காயமுற்றவர்களுக்கு அருகாமை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து அரங்கேறிய இடத்தில் மீட்பு பணிகள் மற்றும் ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
ரெயில் விபத்துக்குள்ளான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் நிறைவுபெற்றன. சேதமடைந்த ரெயில் பாதை சீரமைக்கப்பட்டு, அங்கு ரெயில் சோதனை முறையில் இயக்கப்பட்டது. விரைவில் இந்த வழித்தடத்தில் பழைய படி ரெயில்கள் செல்லும்.
- விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.
- உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு.
உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் 2.35 மணிக்கு திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 பெட்டிகள் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமுற்றனர். காயமுற்றவர்களுக்கு அருகாமை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது.
இந்த நிலையில், திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்துக்கான காரணங்களை ரெயில்வே அதிகாரிகள் அறிக்கையாக சமர்பித்துள்ளனர். அந்த அறிக்கையில், ரெயில் தண்டவாளங்கள் முறையாக பராமரிக்கப்படாதது தான் விபத்து ஏற்பட முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தண்டவாளத்தில் ரெயில் பாதைகள் சரியாக கட்டப்படவில்லை. இதன் காரணமாக ரெயில் வரும் போது அவை சீராக இயங்கவில்லை. இதனாலேயே ரெயில் தடம்புரண்டது என அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரெயில் விபத்து ஏற்படுவதற்கு முன்பே தண்டவாளம் சரி செய்யப்பட வேண்டிய நிலையில் இருப்பதாக அலுவலர் ஒருத்தர் ஜூனியர் பொறியாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். எனினும், தண்டவாளத்தில் முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக அந்த பகுதியை கடந்த செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.
பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் ரெயில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து சென்றிருந்தால், எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது. எனினும், ரெயில் அங்கு கடக்கும் போது எச்சரிக்கை தகவல் விடுக்கப்படவில்லை. இதனால், ரெயில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் அந்த பாதையை கடந்தது. இதன் விளைவாக ரெயில் தடம் புரண்டது.
விபத்து ஏற்பட என்ன காரணம் என்பதை கண்டறிய வடகிழக்கு ரெயில்வே சேர்ந்த ஆறு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் விபத்துக் களத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு, ரெயிலை ஓட்டியவர், மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர் என பலத்தரப்பினரிடம் விசாரணை செய்தனர். இதன் முடிவிலேயே இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- ரெயில் விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
- தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12578) வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. சிக்னல் கோளாறு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில், இரண்டு ரெயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால், தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கவரைப்பேட்டையில் ஏற்பட்ட ரெயில் விபத்து காரணமாக 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அரக்கோணத்திலிருந்து புதுச்சேரி செல்லும் எம்இஎம்யூ ரெயில் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சூளூர்பேட்லை நெல்லூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எம்இஎம்யூ ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஜயவாடா- சென்ட்ரல் வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- அசாமில் அகர்தலா- லோகமான்ய திலக் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து.
- விபத்தில் பெரிய உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.
அசாம் மாநிலத்தில் அகர்தலா- லோகமான்ய திலக் விரைவு ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:-
ரெயில் 12520 அகர்தலா- எல்டிடி எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் இன்று மதியம் 3.55 மணியளவில் லும்டிங்கிற்கு அருகிலுள்ள டிபலாங் நிலையம் லும்டிங் அருகே தடம் புரண்டன.
இந்த விபத்தில் பெரிய உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
விபத்தை தொடர்ந்து, ரெயில்வே அதிகாரிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். மேலும், மீட்பு ரெயில் விரைவில் சம்பந்தப்பட்ட இடத்தை அடையும்.
லும்டிங்கில் உள்ள ஹெல்ப்லைன் எண்கள் 03674 263120, 03674 263126.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் இருந்து போடிக்கு சென்று கொண்டிருந்த ரெயில் மதுரை சந்திப்பில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மதுரை ரெயில்வே சந்திப்பில் ரெயில் எஞ்சினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டதாலும், பணிகளின் எண்ணிக்கை குறைவாகி இருந்ததாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மதுரை ரெயில்வே சந்திப்பில் சக்கரம் கழன்று தடம்புரண்டு ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- ரெயில் பெட்டி தடம் புரண்டதை அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
- விரைவில் இந்த பாதை சரி செய்யப்பட்டு, இயல்பு நிலை திரும்பும்.
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் பயணிகள் ரெயிலின் பெட்டி ஒன்று டிரக் மீது மோதியதால் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில் பெட்டி தடம் புரண்டதை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
மதுப்பூர்-ஜசிதி பிரிவில் ரோஹினி நவாடி ரயில்வே கிராசிங்கில் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்த இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவத்தின் போது நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.
"கேட்ஸ்மேன் ஒரு லெவல் கிராசிங்கின் தடையை குறைத்துக்கொண்டிருந்தபோது, டிரக் அதைக் கடந்து ரெயிலில் மோதியது. முதல் பெட்டியின் நான்கு சக்கரங்கள் தடம் புரண்டன. எனினும், உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை," என்று கிழக்கு ரெயில்வேயின் சி.பி.ஆர்.ஓ. கௌசிக் மித்ரா தெரிவித்தார்.
கிரேன் உதவியுடன் ரெயில் பெட்டியை தூக்குவதற்கு ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், விரைவில் இந்த பாதை சரி செய்யப்பட்டு, இயல்பு நிலை திரும்பும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
- விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகன்றனர்.
- விபத்து நடந்த இடத்தில் ஐந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு வருகின்றன.
கிழக்கு ஈரான் தபாஸ்நகரத்தில் இருந்து யாஸ்ட் நகரத்திற்கு பயணிகள் ரெயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, தபாஸ் நகரத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் தண்டவாளத்தில் இருந்து இறங்கி திடீரென விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகன்றனர்.
விபத்து நடந்த இடத்தில் ஐந்து ஆம்புலன்ஸ்கள் விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு வருகின்றன. மேலும், 12 ஆம்புலன்ஸ்கள் வந்துக் கொண்டிருப்பதாகவும் மாகாணத்தின் மேலாண்மைத் தலைவர் தெரிவித்துள்ளார்.






