அசாமில் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து

அசாமில் அகர்தலா- லோகமான்ய திலக் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து.விபத்தில் பெரிய உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.
அசாமில் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து
Published on

அசாம் மாநிலத்தில் அகர்தலா- லோகமான்ய திலக் விரைவு ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:-

ரெயில் 12520 அகர்தலா- எல்டிடி எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் இன்று மதியம் 3.55 மணியளவில் லும்டிங்கிற்கு அருகிலுள்ள டிபலாங் நிலையம் லும்டிங் அருகே தடம் புரண்டன.

இந்த விபத்தில் பெரிய உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

விபத்தை தொடர்ந்து, ரெயில்வே அதிகாரிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். மேலும், மீட்பு ரெயில் விரைவில் சம்பந்தப்பட்ட இடத்தை அடையும்.

லும்டிங்கில் உள்ள ஹெல்ப்லைன் எண்கள் 03674 263120, 03674 263126.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com