என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Express derail"

    • உத்தர பிரதேசத்தில் பயணிகள் ரெயில் இன்று திடீரென தடம் புரண்டது.
    • இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில் இன்று மதியம் திடீரென தடம் புரண்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

    சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரெயில் கோண்டா பகுதியில் சென்றபோது தடம் புரண்டது. இந்த விபத்தில் ரெயிலின் 4 ஏசி பெட்டிகள் உள்பட பல பெட்டிகள் கவிழ்ந்துள்ளது என்றும், இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர் எனவும் தகவல் வெளியானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து மீட்புக்குழு விரைந்து சென்றுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • அசாமில் அகர்தலா- லோகமான்ய திலக் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்து.
    • விபத்தில் பெரிய உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.

    அசாம் மாநிலத்தில் அகர்தலா- லோகமான்ய திலக் விரைவு ரெயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:-

    ரெயில் 12520 அகர்தலா- எல்டிடி எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் இன்று மதியம் 3.55 மணியளவில் லும்டிங்கிற்கு அருகிலுள்ள டிபலாங் நிலையம் லும்டிங் அருகே தடம் புரண்டன.

    இந்த விபத்தில் பெரிய உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

    விபத்தை தொடர்ந்து, ரெயில்வே அதிகாரிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். மேலும், மீட்பு ரெயில் விரைவில் சம்பந்தப்பட்ட இடத்தை அடையும்.

    லும்டிங்கில் உள்ள ஹெல்ப்லைன் எண்கள் 03674 263120, 03674 263126.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×