search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shelter"

    • கார்த்திக் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.
    • வீட்டை விட்டு வெளியேறி நவாவூர் கோவிலில் திருமணம் செய்தனர்.

    கோவை,

    கோவை கணுவாய் அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது32).

    கார்த்திக் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கோகிலா(24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று அவர்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே காத லர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் நவாவூரில் உள்ள கோவிலில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்தனர். பின்னர் 2 பேரும் பாது காப்பு கேட்டு வடவள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 2 தரப்பு பெற்றோரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்
    • இந்த நிகழ்ச்சியில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி மேட்டுப்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் பாப்பு என்ற திருஞானசம்பந்தம், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாமணி, கிணத்துக்கடவு ஒன்றிய குழு தலைவர் நாகராணி கனகராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் சிங், ஒன்றிய பொருளாளர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற சாந்தலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தாமரை தென்னரசு, வசந்தி ராசு, கலைக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சபரி கிரிவாசன், கன்னிகா பரமேஸ்வரி, பாலு, வலசு ரவி மற்றும் கனகராஜ், விஸ்வநாதன், ஞானவேல், சதிஷ்குமார், கனகராஜ், வலசு ரவி, சுப்பிரமணியம், வடிவேல், சக்திவேல், குணா, கோவிந்தராஜ், மாரியப்பன், சின்ன நெகமம் மயில்சாமி, சண்முகம், கருப்புச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கவியரசனும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
    • நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் செல்லப்பம்பா ளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கவியரசன் (வயது 22). இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.

    அண்ணா நகர் அருகே உள்ள நெட்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் கார்த்திகா (21). இவர் பி.சி.ஏ பட்டதாரி.

    இவர்கள் இருவரும் உற வினர்கள் என்பதால், இவர்க ளுக்குள் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் இரு வீட்டாருடைய பெற்றோருக்கும் தெரிய வந்ததால், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் கவியரசனும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பெற்றோருக்கு பயந்து நேற்று பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இருதரப்பு பெற்றோரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே கார்த்திகா தனது பெற்றோருடன் செல்ல மறுத்து, காதல் கணவருடன் செல்வதாக கூறியதால் அவரை கவியரசனுடன் மகளிர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    • திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
    • இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.

    கோவை,

    கோவை பட்டணம் அடுத்த நடுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது23).

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டணம் பகுதியை சேர்ந்த யோகேஸ்வரி(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் யோகேஸ்வரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபரிடம் பேசுவதையும் தவிர்க்குமாறு கூறியதாக தெரிகிறது.

    இருப்பினும் காதல்ஜோடியினர் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் பெற்றோர் தங்களை சேர விடமாட்டார்கள் என நினைத்த காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று காதல் ஜோடியினர் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி, திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்கள் திருமணம் செய்து கொண்டது தெரியவரவே பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காதலர்களான பாலாஜி, யோகேஸ்வரி ஆகியோர் பாதுகாப்பு கேட்டு இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்து மனு கொடுத்தனர்.

    மனுவில், நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மிரட்டலும் விடுக்கின்றனர். எங்களது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

    • 3 காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பெற்றோர்களிடம் காதல் ஜோடிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (26). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை பார்க்கும் பார்வதி (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு 2 பேரும் காதலித்து வந்தனர்.

    இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் 2 பேரும் சென்னிமலையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    அதே போல் சென்னிமலை அருகே முகாசி பிடாரியூர் ஊராட்சியை சேர்ந்த மனோஜ் (29) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பவித்ரா (26) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

    ஆனால் இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    சென்னிமலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பணி புரியும் கோபிநாதன் (25) என்பவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்த திவ்யதர்ஷினி (20) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

    இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில்பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்களின் பெற்றோர்களை போலீசார் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பின்னர் இந்த திருமணத்தை ஏற்று கொண்ட பெற்றோர்களிடம் காதல் ஜோடிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.

    அதே போல் நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரவீனா (21) ஆகியோர் ஒரே இடத்தில் வேலை செய்த போது காதல் ஏற்பட்டது.

    இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    பின்னர் இருவரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்து காதல் ஜோடிகளை அனுப்பி வைத்தனர்.

    கடந்த 2 நாட்களில் சென்னிமலை போலீசில் 4 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்பாக பயணத்திற்கு வழி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை கணுவாய் பாளையம் பிரிவு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே ஏற்கனவே நிழற்குடை ஒன்று உள்ளது.

    இதில் மர்ம நபர்கள் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பஸ்சுக்காக வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் சாலை ஓரங்களிலேயே நின்று பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

    காரமடை-தோலம்பாளையம் சாலை தமிழக-கேரள மாநிலங்களை இணைக்கும் சாலையாகவும் இருப்பதால் வாகன போக்குவரத்து எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.

    இதனால் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் சாலையோரங்களில் நின்று பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

    மேலும், மழை, வெயில் காலங்களில் ஒதுங்குவதற்கு இடமும் இல்லை. விபத்துகள் நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள்,பணிக்கு செல்வோர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கவும், பாதுகாப்பாக பயணத்திற்கு வழி செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • காதல் ஜோடியை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே பெரும் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம்.அவரது மகன் விண்ணரசன் (28), பொக்லைன் எந்திரம் ஆப்ரேட் டராக உள்ளார். இவரும் பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகள் கிருபாசினி (19), என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.

    இவர்களின் காதல் இரு வீட்டார் பெற்றோருக்கும் தெரிய வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் காதல் ஜோடியை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முஸ்லிம் மக்கள் கழக நிறுவன ஜைனுதின் தலைமையில் மயிலம் போலீஸ்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.அங்கு போலீசார் விசாரணை செய்வதற்கு மறுத்ததாக தெரிவிக்கிறது.

    இதனால் நேற்று திண்டிவனம் அடுத்த தீவனூரில் விநாயகர் கோவிலில் திருமணம்செய்து கொண்டனர். பின் னர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள் ளனர். அங்கிருந்து காதல் ஜோடியை திண்டிவனம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அதன்படி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு காதல் ஜோடி திருமண கோலத்தில் வந்து, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை செய்ததில், இருவரின் சம்மதத்தின் பேரில் திருமணம் நடை பெற்றதாகவும், இருவரும் சேர்ந்து வாழப்போவதாக வும் தெரிவித்தனர்.இதனையடுத்து இருவரையும் விண்ண ரசன் பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

    • காத்திருப்பு போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் 1 சதவீதம் படி வேலை வழங்கிட வேண்டும்.
    • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசில் அடித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் 1 சதவீதம் படி வேலை வழங்கிட வேண்டும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • தமிழக அரசால் இல்லம் தேடி மருத்துவம் கொண்டுவரப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • இந்த மருத்துவ முகாமில் 1065 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் கருணாகரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை, அரசு மருத்துவர் கௌசிகா முன்னிலை வகித்தனர்.

    இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.2000 வீதம் மதிப்புள்ள உணவு பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசுகையில், தமிழக அரசால் இல்லம் தேடி மருத்துவம் கொண்டுவரப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்படி வீட்டில் யாராவது நோயினால் பாதிக்கப்பட்டால் உறவினர்கள் வர மறுத்தாலும் அரசு ஆம்புலன்ஸ் நேரடியாக வீட்டிற்கு சென்று பாதிக்கப்பட்டவருக்கு தேவையான முழு மருத்துவ உதவியும் செய்து அதற்கான முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது என்றார்.

    இந்த மருத்துவ முகாமில் 1065 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். வட்டார அளவில் அங்கன்வாடிகள் சார்பில் இயற்கை உணவு மற்றும் இயற்கை வகையான ஊட்டச்சத்து கண்காட்சி முகாமில் இடம் பெற்றிருந்தது.

    முடிவில் சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

    சிரியாவில் எயின் அல் டினே கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதாகவும் அதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #Syria #Airstrike
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி உள்நாட்டுப்போர் மூண்டது. தொடர்ந்து 8-வது ஆண்டாக அந்தப் போர் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் சிரியாவின் தென் மேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள ஒரு கிராமத்தின் மீது ரஷியாவின் துணையுடன் அதிபர் ஆதரவு படைகள் நேற்று குண்டுவீச்சில் ஈடுபட்டன.

    இந்தக் குண்டுவீச்சில் 6 பேர் பலியாகினர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

    ஆனால் அங்கு இயங்கி வருகிற ஒரு மருத்துவ அறக்கட்டளை, எயின் அல் டினே கிராமத்தின் மீது பீப்பாய் குண்டு போடப்பட்டதாகவும் அதில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் கூறுகிறது.

    பலியானவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் என கூறப்படுகிறது. 35 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    அண்டை கிராமங்களில் அதிபர் ஆதரவு படைகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இடம் பெயர்ந்து எயின் அல் டினே கிராமத்துக்கு வந்த மக்கள்தான் பீப்பாய் குண்டுவீச்சில் சிக்கிக்கொண்டதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன. 
    ×