பொள்ளாச்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை

பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை
Published on

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி மேட்டுப்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் பாப்பு என்ற திருஞானசம்பந்தம், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாமணி, கிணத்துக்கடவு ஒன்றிய குழு தலைவர் நாகராணி கனகராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் சிங், ஒன்றிய பொருளாளர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற சாந்தலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தாமரை தென்னரசு, வசந்தி ராசு, கலைக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சபரி கிரிவாசன், கன்னிகா பரமேஸ்வரி, பாலு, வலசு ரவி மற்றும் கனகராஜ், விஸ்வநாதன், ஞானவேல், சதிஷ்குமார், கனகராஜ், வலசு ரவி, சுப்பிரமணியம், வடிவேல், சக்திவேல், குணா, கோவிந்தராஜ், மாரியப்பன், சின்ன நெகமம் மயில்சாமி, சண்முகம், கருப்புச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com