பரமத்திவேலூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

கவியரசனும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.
போலீசில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி கவியரசன், கார்த்திகாவை படத்தில் காணலாம்.
போலீசில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி கவியரசன், கார்த்திகாவை படத்தில் காணலாம்.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் செல்லப்பம்பா ளையத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் கவியரசன் (வயது 22). இவர் என்ஜினீயரிங் முடித்துள்ளார்.

அண்ணா நகர் அருகே உள்ள நெட்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் கார்த்திகா (21). இவர் பி.சி.ஏ பட்டதாரி.

இவர்கள் இருவரும் உற வினர்கள் என்பதால், இவர்க ளுக்குள் பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் இரு வீட்டாருடைய பெற்றோருக்கும் தெரிய வந்ததால், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கவியரசனும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் பெற்றோருக்கு பயந்து நேற்று பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இருதரப்பு பெற்றோரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கார்த்திகா தனது பெற்றோருடன் செல்ல மறுத்து, காதல் கணவருடன் செல்வதாக கூறியதால் அவரை கவியரசனுடன் மகளிர் போலீசார் அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com