ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம்

3 காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பெற்றோர்களிடம் காதல் ஜோடிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் தஞ்சம்
Published on

சென்னிமலை:

சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (26). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை பார்க்கும் பார்வதி (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு 2 பேரும் காதலித்து வந்தனர்.

இவர்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் 2 பேரும் சென்னிமலையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

அதே போல் சென்னிமலை அருகே முகாசி பிடாரியூர் ஊராட்சியை சேர்ந்த மனோஜ் (29) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பவித்ரா (26) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

ஆனால் இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

சென்னிமலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பணி புரியும் கோபிநாதன் (25) என்பவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை செய்த திவ்யதர்ஷினி (20) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில்பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

ஒரே நாளில் 3 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர்களின் பெற்றோர்களை போலீசார் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் இந்த திருமணத்தை ஏற்று கொண்ட பெற்றோர்களிடம் காதல் ஜோடிகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதே போல் நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரவீனா (21) ஆகியோர் ஒரே இடத்தில் வேலை செய்த போது காதல் ஏற்பட்டது.

இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

பின்னர் இருவரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்து காதல் ஜோடிகளை அனுப்பி வைத்தனர்.

கடந்த 2 நாட்களில் சென்னிமலை போலீசில் 4 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com