search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் டி.எஸ்.பி. அலுவலகத்தில்    காதல் ஜோடி திருமண  கோலத்தில் தஞ்சம்
    X

    போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி திருமண கோலத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    திண்டிவனம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி திருமண கோலத்தில் தஞ்சம்

    • 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • காதல் ஜோடியை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே பெரும் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம்.அவரது மகன் விண்ணரசன் (28), பொக்லைன் எந்திரம் ஆப்ரேட் டராக உள்ளார். இவரும் பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகள் கிருபாசினி (19), என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.

    இவர்களின் காதல் இரு வீட்டார் பெற்றோருக்கும் தெரிய வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் காதல் ஜோடியை அச்சுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முஸ்லிம் மக்கள் கழக நிறுவன ஜைனுதின் தலைமையில் மயிலம் போலீஸ்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.அங்கு போலீசார் விசாரணை செய்வதற்கு மறுத்ததாக தெரிவிக்கிறது.

    இதனால் நேற்று திண்டிவனம் அடுத்த தீவனூரில் விநாயகர் கோவிலில் திருமணம்செய்து கொண்டனர். பின் னர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள் ளனர். அங்கிருந்து காதல் ஜோடியை திண்டிவனம் டிஎஸ்பி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    அதன்படி டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு காதல் ஜோடி திருமண கோலத்தில் வந்து, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரணை செய்ததில், இருவரின் சம்மதத்தின் பேரில் திருமணம் நடை பெற்றதாகவும், இருவரும் சேர்ந்து வாழப்போவதாக வும் தெரிவித்தனர்.இதனையடுத்து இருவரையும் விண்ண ரசன் பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

    Next Story
    ×