search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல்"

    • பெண்கள் குளிப்பதையும், உடை மாற்றுவதையும் வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டனர்.
    • திருட்டுத்தனமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.

    மதுரை

    பெருங்குடி கணபதி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் முத்துராஜா (வயது 30). இவருடைய சகேகாதரர் அங்கு குமார் (32). இவர்கள் இருவரும் பெண்கள் தனியாக குளிக்கும் போதும் அவர்கள் உடைமாற்றும் போதும் அவர்களுக்கு தெரியாமல் திருட்டுத்த னமாக வீடியோ படம் எடுத்து வந்துள்ளனர்.

    பின்னர் அந்த வீடியோவை காட்டி பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி அவர்களிடமிருந்து பணம் பறித்து வந்தனர்.

    இந்த நிலையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் விஷேசத்தில் அவர்கள் கலந்துகொண்டனனர்.அங்கு கல்லூரி மாணவி ஒருவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். இது அந்த மாணவிக்கு தெரிய வந்தது.அவர் அவர்களை தட்டிக்கேட்டார். அப்போது அந்தப்பெண்ணை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். தர மறுத்தால் சமூக வலை தளங்களில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரி டம் கூறினார். அவர்கள் தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவுசெய்து முத்துராஜா, அங்கு குமாரிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணையில் அவர்கள் பலபெண்களை வீடியோ படம் எடுத்து பணம் பறித்து வந்த திடுக்கிடும் தகவல் வெளி யானது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கடவூர் தாசில்தாருக்கு, தொழிலாளி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்
    • அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலை அடுத்த, கடவூர் தாசில்தார் முனிராஜ்.இவர், கவுண்டம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகே, நத்தம் புறம்போக்கு நிலம் வழியாக, காத்தான் தெரு, சோப்புலான் தெரு, கொம்பு காரன் தெரு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பாதையில், தடுப்பு ஏற்படுத்தியவரிடம் விசாரித்து கொண்டிருந்தார். அப்போது, தொண்டமான் பஞ்., கவுண்டம் பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணன் (வயது 55) என்பவர், தாசில்தாரை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டியுள்ளார். இதுகுறித்து, தாசில்தார் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், கிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கருத்து வேறுபாடு காரணமாக சிலம்பரசனிடம் அந்த பெண் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
    • போலீசார் ஜவுளிக்கடை ஊழியர்கள் 2 பேரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 31 வயது இளம் பெண். இவருக்கு திருமணம் ஆகி விட்டது. இவர் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    அதே ஜவுளிக்கடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 32), தூத்துக்குடியைச் சேர்ந்த மதன் (31) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதால் இளம்பெண்ணுக்கும், சிலம்பரசனுக்கும் நட்பு ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சிலம்பரசனிடம் அந்த பெண் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஆனால் சிலம்பரசனும், மதனும் விடாமல் அந்த பெண்ணை தங்களுடன் பேசுமாறு வலியுறுத்தி உள்ளனர்.

    சம்பவத்தன்று செல்போனில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு உன்னை புகைப்படம் எடுத்து வைத்துள்ளோம். எங்களிடம் பேசாவிட்டால் அந்த படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டி உள்ளனர்.

    இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் கூறி கண்ணீர் வடித்துள்ளார். பின்னர் அவர் பெரியகடை வீதி போலீஸ்நிலையத்தில் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக 2 பேர் மிரட்டுகிறார்கள்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த சிலம்பரசன், மதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கலை நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே சோழங்குறிச்சி கிராமத்தில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீஸ்காரர்கள் ராமலிங்கம், அருள்ஜோதி ஆகியோர் அங்கு சென்றனர்.பின்னர் கலை நிகழ்ச்சி முடிந்து பொதுமக்கள் வீட்டிற்கு சென்றனர். அப்போது போலீஸ்காரர் அருள்ஜோதியை அதே ஊரைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 38) மற்றும் கீர்த்தி வாசன் (21) ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கல்லை எடுத்து காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து உடையார்பாளையம் போலீசில் அருள்ஜோதி புகார் அளித்தார். அதன்பேரில் திருநாவுக்கரசு, கீர்த்திவாசன் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • திருச்சியில் காதலை துண்டித்த கல்லூரி மாணவிக்கு கத்தி முனையில் காதலன் மிரட்டல் விடுத்தார்
    • தப்பி சென்ற காதலனுக்கு போலீசார் வலைவீச்சு

    திருச்சி,

    திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவிலை சேர்ந்தவர் தனஸ்ரீ (வயது 21). கல்லூரி மாணவியான இவரும், திருச்சி தில்லைநகர் வடவூரை சேர்ந்த பாலமுருகன் (22) என்பவரும் கடந்த 5 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் அந்த மாணவி காதலை துண்டித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் தனஸ்ரீ உறையூரில் அவர் படித்த கல்லூரிக்கு சென்று படிப்பு முடித்த சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு ஜெயந்தி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த காதலன் பாலமுருகன் என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய் என்று கேள்வி கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றார்.தனஸ்ரீ உறையூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • 2 பேரும் கட்டாயப்படுத்தி ஈரான் பெண்ணை மது குடிக்க வைத்தனர்.
    • ஈரான் பெண் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை:

    ஈரான் நாட்டை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண். இவர் பி.பார்ம் பிசியோதெரபி படித்து முடித்து விட்டு மும்பையில் தங்கி இருந்தார்.

    அப்போது இவருக்கு கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் ஈரான் பெண்ணை கோவைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரான் பெண் கோவை வந்தார். பின்னர் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் வேலை தேடி வந்தார்.

    தோழி மூலமாக ஈரான் பெண்ணுக்கு புதுசித்தாபுதூரை சேர்ந்த ராஜூ (32) என்பவர் அறிமுகம் ஆனார். 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு ராஜூ, ஈரான் பெண்ணை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு கிளப்பிற்கு சாப்பிடுவதற்காக அழைத்தார். இளம்பெண்ணும் அங்கு சென்றார். அங்கு ராஜூவுடன் அவரது நண்பர் குன்னூரை சேர்ந்த ஜோன் பிரான்சிஸ் (40) என்பரும் வந்து இருந்தார். அங்கு ராஜூவும், ஜோன் பிரான்சிசும் மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த 2 பேரும் ஈரான் பெண்ணை மது குடிக்க அழைத்தனர். ஆனார் அவர் மதுகுடிக்க மறுத்து விட்டார். இதனையடுத்து 2 பேரும் கட்டாயப்படுத்தி ஈரான் பெண்ணை மது குடிக்க வைத்தனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து ஈரான் பெண்ணிடம் போதையில் தவறாக நடக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த இளம்பெண் கிளப்பை விட்டு வெளியே வந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த 2 பேரும் நடுரோட்டில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசினர்.

    இது குறித்து ஈரான் பெண் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து ஈரான் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ராஜூ, ஜோன் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஒரு கட்டத்தில் இருவரும் நிர்வாணமாக வீடியோவில் பேசியதாக தெரிகிறது.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் செல்போன் செயலி மூலம் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவியில் இந்த செயலி மூலம் இருவரும் தகவல்களை அனுப்பி பரிமாறிக்கொண்டு வந்தனர்.

    பின்னர் செல்போன் மூலம் இருவரும் பேசி பழகி வந்தனர். இதற்கிடையே இருவரும் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசி வந்தனர்.

    ஒரு கட்டத்தில் இருவரும் நிர்வாணமாக வீடியோவில் பேசியதாக தெரிகிறது. இதனை அந்த வாலிபர் செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்டார்.

    இந்நிலையில் அந்த வாலிபர் நிர்வாணமாக பேசிய வீடியோவை அந்த பெண்ணுக்கு அணுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • அசோக் ராமன் கடைக்கு வந்து பணம் கேட்டார்.
    • 1000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சொரத்தன்குழி பஸ் நிலையம் அருகே பாப்பா ன்கொல்லை பழனிவேல் என்பவர் இட்லி கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி தங்கமணி கடையில் இருந்த போது அதே ஊரை சேர்ந்த மாம்பழம் என்கிற அசோக் ராமன் கடைக்கு வந்து பணம் கேட்டார். தங்கமணி தரமறுத்ததால் அவரை ஆபாசமாக திட்டினார்.பின்னர் கத்தியை காட்டி மிரட்டி கடையில் வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து அசோக் ராமனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • திருச்சியில் கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல சென்ற இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி
    • கொலை மிரட்டர் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்

    திருச்சி, 

    திருவானைக்காவல் மணல்மேடு ஐந்தாம் பிரகாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சத்யா (வயது 27). கடந்த 26.10.2000ம் ஆண்டு சத்யாவின் தந்தை முருகனை திருவனைக்காவல் மேலகொண்டையம் பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் சச்சிதானந்தம் (வயது 25) என்பவர் கொலை செய்துவிட்டார்.இந்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சத்யா ஸ்ரீரங்கம் சன்னதி வீதி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது சச்சிதானந்தம் சத்யாவை தடுத்து நிறுத்தி கத்தியைச் காட்டி மிரட்டி தந்தை கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரக்கூடாது என்று கூறி மிரட்டி உள்ளார்.இது குறித்து சத்யா ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சச்சிதானந்தவை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சச்சிதானந்தம் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    ஆபாச வீடியோ

    இந்த நிலையில் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் நீ ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த போது குளித்த வீடியோ என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறினார்.

    இதற்கிடையே அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மிரட்டல்

    இந்தநிலையில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் குளிக்கும் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது 2 முறையும் வெவ்வெறு செல்போன் எண்களில் இருந்து அந்த நபர் பேசியது தெரிய வந்தது. மேலும் தனது கணவர் சிகிச்சையில் இருந்த போது பக்கத்து படுக்கையில் இருந்த நபர் நான் குளிக்கும் போது வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அந்த பெண் கூறி உள்ளார்.

    செல்போன் எண்ணை வைத்து விசாரணை

    இதையடுத்து அந்த பெண்ணுக்கு பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் தலைமறைவானது தெரிய வந்தது.

    அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • 2 பேரும் அன்னூர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
    • இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை அன்னூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கரூரை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் அன்னூர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் இளம்பெண்ணை பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இதனை அறிந்த இளம்பெண் வாலிபரை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அந்த வாலிபர் வர மறுத்து விட்டார். மேலும் அந்த பெண்ணுடன் அவர் தனிமையில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடு வதாக மிரட்டி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக வாலிபர் மிரட்டுவதாகவும், தன்னிடம் இருந்து வாலிபர் வாங்கி 6 பவுன் தங்க நகைகளை பறித்து விட்டதாகவும், அதனை மீட்டுத் தர வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடியோ கால் செய்து ஆபாச படம் பிளே செய்யப்பட்டுள்ளது
    • வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டல்

    மத்திய அமைச்சர் ஒருவருக்கு கடந்த மாதம் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோ காலை எடுத்துள்ளார். அப்போது ஆபாச படம் பிளே ஆகியுள்ளது. அதன்பின் மர்ம நபர் ஒருவர் போன் செய்து, இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மத்திய மந்திரி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புகார் அடிப்படையில் டெல்லி மாநில குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இருவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தீவிர விசாரணைக்குப்பின் தற்போது போலீசார் முகமது வகீல், முகமகது ஷாகிப் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×