அன்னூரில் முன்னாள் காதலியின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டல்

2 பேரும் அன்னூர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர். இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னூரில் முன்னாள் காதலியின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டல்
Published on

கோவை,

கோவை அன்னூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கரூரை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் அன்னூர் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் இளம்பெண்ணை பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இதனை அறிந்த இளம்பெண் வாலிபரை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அந்த வாலிபர் வர மறுத்து விட்டார். மேலும் அந்த பெண்ணுடன் அவர் தனிமையில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடு வதாக மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இதுகுறித்து அன்னூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக வாலிபர் மிரட்டுவதாகவும், தன்னிடம் இருந்து வாலிபர் வாங்கி 6 பவுன் தங்க நகைகளை பறித்து விட்டதாகவும், அதனை மீட்டுத் தர வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com