காதலை துண்டித்த கல்லூரி மாணவிக்கு கத்தி முனையில் காதலன் மிரட்டல்

திருச்சியில் காதலை துண்டித்த கல்லூரி மாணவிக்கு கத்தி முனையில் காதலன் மிரட்டல் விடுத்தார்தப்பி சென்ற காதலனுக்கு போலீசார் வலைவீச்சு
காதலை துண்டித்த கல்லூரி மாணவிக்கு கத்தி முனையில் காதலன் மிரட்டல்
Published on

திருச்சி,

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவிலை சேர்ந்தவர் தனஸ்ரீ (வயது 21). கல்லூரி மாணவியான இவரும், திருச்சி தில்லைநகர் வடவூரை சேர்ந்த பாலமுருகன் (22) என்பவரும் கடந்த 5 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் அந்த மாணவி காதலை துண்டித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் தனஸ்ரீ உறையூரில் அவர் படித்த கல்லூரிக்கு சென்று படிப்பு முடித்த சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு ஜெயந்தி பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த காதலன் பாலமுருகன் என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய் என்று கேள்வி கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றார்.தனஸ்ரீ உறையூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com