search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Porn"

    • குற்றம்சாட்டப்பட்டவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்து இருந்தார்.
    • ஒருவர் தனது தனிப்பட்ட நேரத்தில் ஆபாச படம் பார்ப்பது குற்றம் இல்லை.

    தனிமையில் இருக்கும் போது, மற்றவர்களுக்கு காண்பிக்காமல் ஆபாச படம் பார்ப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால், அதில் எந்த தவறும் இல்லை என்று கேரளா உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    இதுபோன்ற விஷயத்தை குற்றமாக அறிவிப்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதாகவும், தனிப்பட்ட விருப்பதில் தலையிடுவதாக இருக்கும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

    2016-ம் ஆண்டு காவல் துறையினர் 33 வயதான நபர் ஒருவர் சாலையின் ஓரத்தில் நின்றுக் கொண்டு தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த போது கைது செய்து, அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 292-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நீதிபதி பி.வி. குன்ஹிகிருஷ்ணன் இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

    வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்து இருந்தார். இது தொடர்பான விசாரணையின் போது, ஆபாச படங்கள் காலம்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அதனை குழந்தைகள் உட்பட அனைவராலும் இயக்க முடிகிறது என்று நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.

    • சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    ஆபாச வீடியோ

    இந்த நிலையில் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் நீ ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த போது குளித்த வீடியோ என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறினார்.

    இதற்கிடையே அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மிரட்டல்

    இந்தநிலையில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் குளிக்கும் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது 2 முறையும் வெவ்வெறு செல்போன் எண்களில் இருந்து அந்த நபர் பேசியது தெரிய வந்தது. மேலும் தனது கணவர் சிகிச்சையில் இருந்த போது பக்கத்து படுக்கையில் இருந்த நபர் நான் குளிக்கும் போது வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அந்த பெண் கூறி உள்ளார்.

    செல்போன் எண்ணை வைத்து விசாரணை

    இதையடுத்து அந்த பெண்ணுக்கு பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் தலைமறைவானது தெரிய வந்தது.

    அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • ரெயில் நிலையங்களில் ரெயில்டெல் வழங்கும் 30 நிமிட இலவச வைஃபையில் 350 எம்.பி.க்கள் ஆபாச படங்கள் டவுன்லோட் செய்யவே பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளன.
    • விபிஎன் மற்றும் இன்னும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படாத சில இணையதளங்கள் மூலம் மக்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர்.

    புது டெல்லி:

    ரெயில் பயணிகளை டிஜிட்டல் முறையுடன் இணைப்பதற்காக இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2016ஆம் ஆண்டில் மும்பையில் முதன்முதலாக வைஃபை சேவை தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு ரெயில் நிலையங்களில் வைஃபை அமைக்கப்பட்டு இதுவரையில் சுமார் 6,100 ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த வைஃபை சேவை பெரும்பாலும் ஆபாச வீடியோக்களை பார்க்கவும், ஆபாச வீடியோ டவுன்லோடு செய்யவும் பயன்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தனியார் பத்திரிகை ஒன்று நடத்திய ஆய்வில் செகந்திராபாத் மற்றும் விஜயவாடா ரெயில் நிலையங்களில்தான் அதிகபட்சமாக ஆபாச வீடியோக்கள் டவுன்லோடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஐதராபாத் மற்றும் திருப்பதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    ரெயில் நிலையங்களுக்கு இணைய சேவை வழங்கும் ரெயில்டெல்லின் தகவலின்படி, செகந்திராபாத் மற்றும் விஜயவாடாவில் உள்ள ரெயில் நிலையங்களில் பயன்படுத்தப்படும் வைஃபையில் 35% ஆபாசப் படங்கள் டவுன்லோடு செய்யவே பயன்பட்டு வருவதாகதெரியவந்துள்ளது. அந்த ரெயில் நிலையங்களில் ரெயில்டெல் வழங்கும் 30 நிமிட இலவச வைஃபையில் 350 எம்.பி.க்கள் ஆபாச படங்கள் டவுன்லோட் செய்யவே பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளன.

    இதுகுறித்து ரெயில் டெல் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "கணிசமான எண்ணிக்கையிலான வைஃபை சேவைகள் ஆபாச வீடியோ டவுன் லோடு செய்யவே பயன்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான ஆபாச இணையதளங்களை அணுக முடியாத நிலையில், விபிஎன் மற்றும் இன்னும் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படாத சில இணையதளங்கள் மூலம் மக்கள் ஆபாச படங்களை பார்க்கின்றனர்" என்று கூறியுள்ளார்.

    ×