கடவூர் தாசில்தாருக்கு மிரட்டல்

கடவூர் தாசில்தாருக்கு, தொழிலாளி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கடவூர் தாசில்தாருக்கு மிரட்டல்
Published on

கரூர்,

குளித்தலை அடுத்த, கடவூர் தாசில்தார் முனிராஜ்.இவர், கவுண்டம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகே, நத்தம் புறம்போக்கு நிலம் வழியாக, காத்தான் தெரு, சோப்புலான் தெரு, கொம்பு காரன் தெரு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பாதையில், தடுப்பு ஏற்படுத்தியவரிடம் விசாரித்து கொண்டிருந்தார். அப்போது, தொண்டமான் பஞ்., கவுண்டம் பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணன் (வயது 55) என்பவர், தாசில்தாரை பணி செய்ய விடாமல் தடுத்து, மிரட்டியுள்ளார். இதுகுறித்து, தாசில்தார் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார், கிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com