search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டி"

    • மத்திய பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • தேர்தல் பொறுப்புகளை ஒருவரே செய்யாமல் அனைவரும் பகிர்ந்து பணியாற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதாவில் மாநில நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

    புதிய நிர்வாகிகளின் முதல் கூட்டம் நடந்தது. பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. தலைமை வகித்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்டு, ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு, சிவசங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் புதுவை மாநில பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசியதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    முத்ரா திட்டம், கியாஸ் திட்டம் அனைத்து ஏழை மக்களையும் சென்றடைந்துள்ளது. புதுவையில் 3.5 லட்சம் பேர் மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.

    அவர்களை சந்தித்து நாடாளுமன்ற தேர்தலில் நாம் பணியாற்ற வேண்டும். அதற்கேற்ப வியூகங்களை வகுக்க வேண்டும். புதுவையில் பா.ஜனதா வேட்பாளர்தான் போட்டியிடுவார்.

    எனவே பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற நிர்வாகிகள் இரவு, பகலாக உழைக்க வேண்டும். தேர்தல் பொறுப்புகளை ஒருவரே செய்யாமல் அனைவரும் பகிர்ந்து பணியாற்ற வேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து பூத்களிலும் பா.ஜனதாவை பலப்படுத்த வேண்டும். மீண்டும் மத்தியில் பா.ஜனதா ஆட்சி மலரும் போது நாட்டில் அபரிதமான வளர்ச்சி இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மத்திய அரசு செய்த திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    • பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட பல்வேறு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • பாமினியில் பழங்குடியினர் கவுரவிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடியினர் கவுரவிப்பு தினம் நவம்பர் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    அதன் ஒருபகுதியாக நிறுவன தலைவர் கவுசல்யா தலைமையில் மன்னார்குடி அடுத்த பாமினியில் பழங்குடியினர் கவுரவிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

    விழாவில் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பால கணேஷ், ஸ்கார்டு செயலாளர் பாபு ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஸ்கார்டு தொண்டு நிறுவனம் சார்பில் அனைத்து குடும்பத்தினருக்கும் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் கூட்டமைப்பு தலைவர் சின்னதுரை, மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் விஜயராகவன், கனகதுர்க்கா, திலகவதி, ஸ்கார்டு கள பணியாளர் சிந்துகவி, பயிற்றுனர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. மாணவரணி சார்பில் கட்டுரை , பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நேஷ்னல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடந்தது. போட்டியினை, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    மேலும் போட்டிகளில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சட்டத்திட்ட திருத்தக் குழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்ரமணியன், நேஷனல் கல்லூரி தாளாளர் சிலம்புச்செல்வன், நகர செயலாளர் வெ கொ. கருணாநிதி,மாணவரணி அமைப்பாளர் எஸ்.ஆர்.ராமராஜன் மற்றும் பல்வேறு கல்லூரி மற்றும் அரசு பள்ளியில் இருந்து மாணவி மாணவிகள் திரளாக வளர கலந்து கொண்டனர்.

    • 2 அணிகளுக்கு இடையே போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது.
    • வெற்றி பெறும் அணியானது மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.

    தஞ்சாவூர்:

    புதுக்கோட்டையில் இன்று கிழக்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடங்கி நாளை வரை நடக்கிறது.

    இதில் தஞ்சை ,நாகை, பெரம்பலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட கிழக்கு மண்டலங்களை சேர்ந்த மாவட்ட கழகத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.

    முன்னதாக இந்த மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மாவட்டத்தில் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது.

    இதில் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    அதிலிருந்து தஞ்சாவூர் நண்பர்கள் கைப்பந்து கழக அணி, பிள்ளையார்பட்டி சோழன் கைப்பந்து கழக அணிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில்

    நேற்று இரவு விளையாடின.

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியை தஞ்சாவூர் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து 2 அணிகளுக்கு இடையே போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியை மாவட்ட கைப்பந்து கழக துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் டி. ரவிச்சந்திரன், பன்னீர்செல்வம், தமிழ்ச்செல்வன், இளங்கோவன், ரமேஷ் மற்றும் பலர் பார்த்தனர்.

    இதையடுத்து இன்று புதுக்கோட்டையில் நடைபெறும் கிழக்கு மண்டல அளவிலான பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் பிள்ளையார்பட்டி சோழன் கைப்பந்து கழக அணி, தஞ்சாவூர் நண்பர்கள் கைப்பந்து கழக அணிகள் விளையாட உள்ளன.

    இதேபோல் கிழக்கு மண்டலங்களில் பதிவு செய்யப்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.

    நாளை வரை நடைபெறும்

    இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியானது மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறும்.

    அரியலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைப்போட்டி

    அரியலூர்,  

    அரியலூரில், பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெறுகிறது. அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் மேரீஸ் பள்ளி ஆகிய பள்ளிகளில் போட்டி நடைபெற்று வருகிறது.

    போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமச் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம், 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் படைப்பாற் றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க வும் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், காண்கலை, நாடகம் என்பன உள்ளிட்ட தலைப்பு களில் இன்றுவரை நடை பெறும் இப்போட்டி களில் 50 பள்ளிகளில் இருந்து 800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டி னர்.

    போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். முதலிடம் பெறுபவர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரசுப்பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
    • பஞ்சாயத்து தலைவி ஆனந்தவேணி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்தினர்.

    உடுமலை:

    உடுமலை வட்டார அளவில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 48 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 25 பேர் இசை, நடனம், ஓவியம், வில்லுப்பாட்டு மற்றும் ஆங்கிலம், தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் சிற்பம் உருவாக்குதல் போன்ற பிரிவுகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

    பின்னர் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்ற 13 மாணவர்களில் ஆர் ஹரிசுதன் (நவீன ஓவியம்), எஸ்.விஜய்கிருஷ்ணா ( எதிர்கால கனவு), எம். ஆசியா சுஹனா ( ஆங்கில பேச்சு போட்டி) ஆகிய மூன்று மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    இப்போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்தி, பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் கஸ்தூரி பானு, சிவசுப்பிரமணியன், மகேந்திரன், மகேஸ்வரி ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் சதீஷ்குமார், பஞ்சாயத்து தலைவி ஆனந்தவேணி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்தினர்.

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
    • குழந்தைகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    அருவங்காடு,

    அருவங்காடு கார்டைட் பேக்டரி பகுதியில் உள்ள அங்கூர் வித்யாமந்திர் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் வகையில், ப்ரீ-கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, கையெழுத்து போட்டி, உச்சரிப்பு போட்டி, மாறுவேடப் போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன.

    இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னதாக தலைவர் ஸ்ரீமதி ராஷிகோயல், துணைத் தலைவர் மெளஸ்மி மல்லிக் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    இதில் குழந்தைகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்ட ஜோதி குமார் அதிர்ச்சி அடைந்து மயங்கி கீழே விழுந்தார்.
    • சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த துர்கா சமுத்திரத்தை சேர்ந்தவர் ஜோதி குமார் (வயது 25). சாப்ட்வேர் என்ஜினீயரான ஜோதி குமார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று இந்தியா ஆஸ்திரேலியா இடையான உலக கோப்பை இறுதி கிரிக்கெட் போட்டியை தனது நண்பர்களுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது இந்திய அணி தோல்வி அடையும் நிலைக்கு வருவதை கண்டு சோர்ந்து போனார். கடைசியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை கண்ட ஜோதி குமார் அதிர்ச்சி அடைந்து மயங்கி கீழே விழுந்தார். அவரது நண்பர்கள் ஜோதி குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிர் இழந்ததாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அவரது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கேழ்வரகு அடை, பாசிபருப்பு பாயாசம், சிவப்பு அரிசிபுட்டு செய்து அசத்தல்
    • பர்லியார் பஞ்சாயத்துக்கு முதல் பரிசு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில், குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் வட்டார அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இடையே பராம்பரிய சிறுதானிய உணவு தயாரிப்பு போட்டி நடைபெற்றது. திட்டஇயக்குனர் முத்து தலைமை தாங்கினார்.

    பராம்பரிய சிறுதானிய உணவு தயாரிப்பு போட்டியில் 6-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டு கேழ்வரகு அடை, பாசிபருப்பு பாயாசம், சிவப்பு அரிசிபுட்டு, கேழ்வரகு இடியாப்பம், அவல் வடை, எள்ளு சிம்லி, கம்பு குழிபணியாரம், கேழ்வரகு அல்வா, சத்துமாவு கேக், பிரண்டை துவையல், கொள்ளு அவல் கஞ்சி, உளுந்து பனைவெல்லம் கஞ்சி, எள் உருண்டை ஆகிய பல வகை உணவுகளை தயாரித்தனர்.

    இதில் சுவை மிகுந்த பாரம்பரிய உணவுகள் தயாரித்த மகளிர் குழுவினருக்கு ஊராட்சி ஒன்றிய தலைவி சுனிதா நேரு, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரமங்கலம் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் பர்லியார் பஞ்சாயத்து முதல் பரிசும், மேலூர் பஞ்சாயத்து 2-வது பரிசும், உபதலை பஞ்சாயத்து 3-வது பரிசும் பெற்றது. அவர்கள ஊட்டியில் வருகிற 21-ந்தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    • போட்டியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தேசிய கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பால் இந்தியா ஸ்வச் பாரத் என்னும் தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டி, கட்டுரை போட்டி, வண்ணம் தீட்டுதல் போட்டி, படம் வரைதல் போட்டி மற்றும் போஸ்டர் தயாரித்தல் போன்ற பல்வேறு வகையான போட்டிகளை இந்தியா முழுவதும் நடத்தியது.

    பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    இதில் 5-ம் வகுப்பு மாணவன் அபினவ் ஜெய் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 7-ம் வகுப்பு மாணவன் முஹம்மது சுலை மான் கையெழுத்து போட்டி யிலும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேலும் 12 பேர் கையெழுத்து போட்டியிலும், 3 பேர் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 3 பேர் கட்டுரை போட்டியிலும் பள்ளி அளவில் முதலிடம் பெற்றனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளி தாளாளர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

    கீழப்பழுவூர் மீரா மகளிர் கல்லூரியில் , மாவட்ட அளவிலான மேடை நாடகப் போட்டி

    அரியலூர், 

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த மீரா மகளிர் கலைக் கல்லூரியில் , மாவட்ட சுகாதாரத் துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மேடை நாடகப் போட்டி நடைபெற்றது.

    இளைஞர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டிக்கு கல்லூரி செயலர் எம்.ஆர்.கமல்பாபு தலைமை வகித்தார். மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, கல்லூரி முதல்வர் விஜி தொடக்கி வைத்து பேசினார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளின் மேடை நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டது. பிற்பகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட சுகாதாரப்

    பணிகள் இயக்குநர் அஜிதா கலந்து கொண்டு பேசினார்.

    அதன்பின்னர், போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணி விவரங்களை அறிவித்தார். அதில் மேடை நாடகப் போட்டியில் மீரா மகளிர் கல்லூரி முதல் இடத்தையும், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றது.

    • சிலம்பம் போட்டி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் பரமசிவம் செய்திருந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ், இ.சி.ஏ. அகாடமி மற்றும் நேரு யுவ கேந்திர இணைந்து மாவட்ட அளவில், சிலம்ப கிரேடிங் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தியது. இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சிவ கங்கை, காளையார் கோ வில், கல்லல், மானா மதுரை, திருப்புவனம், சிங் கம்புணரி, திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதி களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பதக்கங்கள் வழங் கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் பரமசிவம் செய்திருந்தார்.

    ×