என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிலம்பம் போட்டி
- சிலம்பம் போட்டி நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் பரமசிவம் செய்திருந்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ், இ.சி.ஏ. அகாடமி மற்றும் நேரு யுவ கேந்திர இணைந்து மாவட்ட அளவில், சிலம்ப கிரேடிங் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தியது. இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சிவ கங்கை, காளையார் கோ வில், கல்லல், மானா மதுரை, திருப்புவனம், சிங் கம்புணரி, திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதி களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பதக்கங்கள் வழங் கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் பரமசிவம் செய்திருந்தார்.
Next Story






