என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவிலான மேடை நாடகப் போட்டி
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த மீரா மகளிர் கலைக் கல்லூரியில் , மாவட்ட சுகாதாரத் துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மேடை நாடகப் போட்டி நடைபெற்றது.
இளைஞர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டிக்கு கல்லூரி செயலர் எம்.ஆர்.கமல்பாபு தலைமை வகித்தார். மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, கல்லூரி முதல்வர் விஜி தொடக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் மேடை நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டது. பிற்பகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட சுகாதாரப்
பணிகள் இயக்குநர் அஜிதா கலந்து கொண்டு பேசினார்.
அதன்பின்னர், போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணி விவரங்களை அறிவித்தார். அதில் மேடை நாடகப் போட்டியில் மீரா மகளிர் கல்லூரி முதல் இடத்தையும், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றது.






