search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்ரஷர் ஐலண்ட் பள்ளி"

    • போட்டியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தேசிய கல்வி மற்றும் மனித வள மேம்பாட்டு அமைப்பால் இந்தியா ஸ்வச் பாரத் என்னும் தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டி, கட்டுரை போட்டி, வண்ணம் தீட்டுதல் போட்டி, படம் வரைதல் போட்டி மற்றும் போஸ்டர் தயாரித்தல் போன்ற பல்வேறு வகையான போட்டிகளை இந்தியா முழுவதும் நடத்தியது.

    பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

    இதில் 5-ம் வகுப்பு மாணவன் அபினவ் ஜெய் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 7-ம் வகுப்பு மாணவன் முஹம்மது சுலை மான் கையெழுத்து போட்டி யிலும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மேலும் 12 பேர் கையெழுத்து போட்டியிலும், 3 பேர் வண்ணம் தீட்டுதல் போட்டியிலும், 3 பேர் கட்டுரை போட்டியிலும் பள்ளி அளவில் முதலிடம் பெற்றனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பள்ளி தாளாளர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

    • தீபாவளி கொண்டாட்டத்தில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.
    • பள்ளி தாளாளர், முதல்வர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் மழலையர் பிரிவு மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பட்டாசு வெடித்தும், அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை கூறினர். மேலும் மணவ, மாணவிகளை பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாட அறிவுறுத்தினர். ஏற்பாடுகளை மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அனுசியா செய்திருந்தார்.

    • ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டி தேர்வு நடத்தப்பட்டது.
    • மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டி தேர்வை எழுதினர்.

    தென்காசி:

    தென்காசி தீயணைப்பு மீட்பு பணித்துறை மாவட்ட அலுவலர் கணேசன் ஆணையின்படி, பள்ளி மாணவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டித் தேர்வானது நடத்தப்படுகிறது.

    அதன்பேரில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுக்கு செங்கோட்டை தீயணைப்பு மீட்பு பணித்துறை சிறப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் மற்றும் நிலைய பணியாளர்கள் மாரிமுத்து, ஆல்பர்ட், கோமதி சங்கர் ஆகியோர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போட்டி தேர்வை நடத்தினர்.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு போட்டி தேர்வை எழுதினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்ஷலா மற்றும் ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஆகியோர் செய்திருந்தனர்.

    • போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பிரைனோபிரைன் நிறுவனம் சென்னை டிரேடு சென்டரில் மாநில அளவிலான அபாகஸ் போட்டியை நடத்தியது. இப்போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 4-ம் வகுப்பு மாணவர்கள் ஹாரூன் ரஷீத், முகமது யக்யா, 3-ம் வகுப்பு மாணவி ஹாஸ்லின் ரிசா மற்றும் 5-ம் வகுப்பு மாணவி அப்சின் சனா ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • யோகா போட்டி கோவில்பட்டி ஆச்சாரியா பள்ளியில் நடைபெற்றது.
    • மாணவன் இஷாந்த் ராகவன் 12 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்றார்.

    தென்காசி:

    மதுரை சகோதயா ஒவ்வொரு வருடமும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டுப் போட்டி களை நடத்தி வருகிறது. அதன்படி யோகா போட்டி கோவில்பட்டி ஆச்சாரியா பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவி கள் கலந்து கொண்ட இப்போட்டியில் தென்காசி ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 6-ம் வகுப்பு மாணவன் இஷாந்த் ராகவன் 12 வயதிற்குட்பட்ட மாண வர்கள் பிரிவில் முதலிடத்திலும், 7-ம் வகுப்பு மாணவன் முகமது இலியாஸ் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடத்திலும் வெற்றி பெற்று சாதனை படை த்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றனர். மண்டல அளவில் முதலி டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • மழலையர் பிரிவு மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை போன்று உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
    • மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் பாட்டு பாடி நடனமாடி அசத்தினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மழலையர் பிரிவு மாணவர்கள் கிருஷ்ணர் போன்றும் மாணவிகள் ராதை போன்றும் உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணை போன்ற பொருட்களை பள்ளிக்குக் கொண்டு வந்தனர்.

    கிருஷ்ணர் மற்றும் ராதை போன்று வேடம் அணிந்து வந்த மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் பாட்டு பாடி நடனமாடி அசத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அனுசியா செய்திருந்தார்.

    • போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் முகிலன்,முகமது அப்துல்லா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்கள் ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் -2023-க்கு தேர்ச்சி பெற்றனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் கரூர் மாவட்டத்தில் நடத்திய ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் -2023 தேர்ச்சி போட்டியில் கலந்து கொண்டனர்.

    பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 5-ம் வகுப்பு மாணவன் முகிலன், 6-ம் வகுப்பு மாணவன் முகமது அப்துல்லா முதலிடத்திலும், 7-ம் வகுப்பு மாணவன் இஷாந்த் ராகவன், முகமது இலியாஸ் மற்றும் 5-ம் வகுப்பு மாணவன் தருண் பிரசாத் ஆகியோர் 2-ம் இடத்திலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தாய்லாந்தில் நடைபெறக்கூடிய ஆசிய பசிபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் -2023-க்கு தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மாணவர்களுக்கு யோகா ஆசிரியை மாதவி பயிற்சி அளித்தார். வெற்றி பெற்று தாய்லாந்திற்கு பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.

    • மாணவ, மாணவிகள் சமூகத்தில் எவ்வாறு பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ- மாணவிகள் சமூகத்தில் மருத்துவர், நீதிபதிகள் போன்று உடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சமூகப் பொறுப்பு தினம் கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகள் தன் குடும்பத்திலும், சமூகத்திலும் எவ்வாறு பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் ஆசிரியைகள் நந்தினி, பிரீத்தி மற்றும் சுபாஷினி சமூகப் பொறுப்புணர்வை உணர்த்தக்கூடிய பதாகைகளை பள்ளியின் வளாகத்தில் வைத்தனர். மேலும் பள்ளி தாளாளர், முதல்வர் மாணவ, மாணவிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தி பேசினர்.

    நிகழ்ச்சியில் மழலையர் பிரிவு மாணவ- மாணவிகள் சமூகத்தில் முக்கிய பங்காற்றக் கூடிய பணியில் இருக்கும் போலீசார், மருத்துவர் மற்றும் நீதிபதிகள் போன்று உடை அணிந்து கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் அருள் வர்ஷனா செய்திருந்தார்.

    • மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • அகமது இர்ஷாத் 2-ம் இடத்தையும்,மரிய ஜோபில் 4-ம் இடத்தையும் பெற்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆலடி அருணா பவுண்டேஷன் மற்றும் மேக்னஸ் செஸ் அகாடமி இணைந்து நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 5-ம் வகுப்பு மாணவன் அகமது இர்ஷாத் 2-ம் இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவன் மரிய ஜோபில் 4-ம் இடத்தையும், 1-ம் வகுப்பு மாணவன் அஜய் கலந்து கொண்டதற்கான சான்றிதழையும் பெற்று மாநில அளவில் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் கோப்பைகளை தட்டி சென்றனர். மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

    • விழாவிற்கு மாணவர்களின் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.
    • மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் மரங்களை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் வனப்பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் மாணவி தஸ்னிமா வரவேற்று பேசினார். விழாவிற்கு பெற்றோர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்து கூறினார். மாணவிகள் மீனா சுல்பியா மற்றும் ஹன்சுல் லுபைனா மரங்களை பேணி பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

    மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் மரங்களை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றனர். மேலும் மாணவ-மாணவிகள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை பள்ளிக்கு கொண்டு வந்திருந்தனர் . பள்ளியின் தாளாளர், முதல்வர், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இணைந்து மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டனர். மாணவி ஹனா பாத்திமா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்ஷலா செய்திருந்தார்.

    • பள்ளி வளாகத்தில் மக்கா, மதினா போன்ற மாதிரிகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
    • முகமது ரஜப் பக்ரீத் தினத்தைப் பற்றி மாணவ- மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பக்ரீத் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் மக்கா, மதினா போன்ற மாதிரிகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பள்ளியின் கணித ஆசிரியர் டாக்டர் முகமது ரஜப் பக்ரீத் தினத்தைப் பற்றி மாணவ- மாணவிகளுக்கு எடுத்து கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்ஷலா செய்திருந்தார்.

    • மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் வாசிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டன.
    • சிறப்பாக செயல்பட்ட மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறையில் இணையவழி மூலம் ட்ரஷர் எக்ஸ்பெர்டைஸ் மாரத்தான் நடைபெற்றது. இதில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ட்ரஷர் எக்ஸ்பெர்டைஸ் மாரத்தானில் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் வாசிப்பது, கணக்கு வாய்ப்பாடு, ஆங்கிலத்தில் கதை சொல்வது என பல்வேறு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டன.

    இதனை சரிவர முடித்து செயல்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு வாரியாக முதல் 3 இடத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர். விழா ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அருள் வர்சலா மற்றும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் நூஸ்மா பேகம் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×