என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவனை பள்ளி தாளாளர், முதல்வர் பாரட்டிய காட்சி.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு புள்ளி பட்டியலில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவன் இடம் பெற்று சாதனை
- சர்வதேச செஸ் கூட்டமைப்பில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த மாணவர்கள்உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
- மாணவன் ஜெகத் பிரபு 1204 புள்ளிகளை பெற்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு புள்ளி பட்டியலில் இடம் பிடித்தார்.
தென்காசி:
உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் சர்வதேச செஸ் கூட்டமைப்பில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த மாணவர்கள், சதுரங்க விளையாட்டு வீரர்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த சர்வதேச கூட்டமைப்பு வீரர்களின் புள்ளி பட்டியலை அறிவித்த நிலையில் அதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் ஜெகத் பிரபு 1204 புள்ளிகளை பெற்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு புள்ளி பட்டியலில் இடம் பிடித்தார். சாதனை படைத்த மாணவனை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.
Next Story






