search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் நீட் - ஐ.ஐ.டி. அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
    X

    ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் நீட் - ஐ.ஐ.டி. அடிப்படை பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

    • 6-ம் மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் - ஐ.ஐ.டி. அடிப்படைக்கான மாதிரி வகுப்புகள் நடைபெற்றது.
    • அறிமுக வகுப்பை ஆசிரியர் யாஷ் சர்மா இணைய வழியில் நடத்தினார்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டில் இருந்து 6-ம் வகுப்பு முதல் நீட் - ஐ.ஐ.டி. அடிப்படை பயிற்சிக்கான வகுப்புகள் தொடங்கி உள்ளது. அதன் முன்னோட்டமாக 6-ம் மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட் - ஐ.ஐ.டி. அடிப்படைக்கான மாதிரி வகுப்புகள் நடைபெற்றது.

    வகுப்புகள் ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்களால் இணைய வழியில் நடத்தப்படுகிறது. அறிமுக வகுப்பை ஆசிரியர் யாஷ் சர்மா நடத்தினார். இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஐ.ஐ.டி., நீட் போன்ற போட்டி தேர்வுகளில் வெற்றி பெற 6-ம் வகுப்பு முதலே மாணவர்கள் அடிப்படை பயிற்சி வழங்க பள்ளி நிர்வாகம் எடுத்த முயற்சிக்கு மாணவர்களின் பெற்றோர் பாராட்டு தெரிவித்துள்னனர்.

    Next Story
    ×