மாநில அளவிலான சதுரங்க போட்டி- ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.அகமது இர்ஷாத் 2-ம் இடத்தையும்,மரிய ஜோபில் 4-ம் இடத்தையும் பெற்றனர்.
மாநில அளவிலான சதுரங்க போட்டி- ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சாதனை
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆலடி அருணா பவுண்டேஷன் மற்றும் மேக்னஸ் செஸ் அகாடமி இணைந்து நடத்திய மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 5-ம் வகுப்பு மாணவன் அகமது இர்ஷாத் 2-ம் இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவன் மரிய ஜோபில் 4-ம் இடத்தையும், 1-ம் வகுப்பு மாணவன் அஜய் கலந்து கொண்டதற்கான சான்றிதழையும் பெற்று மாநில அளவில் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் கோப்பைகளை தட்டி சென்றனர். மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com