என் மலர்
நீங்கள் தேடியது "Tournament"
திருவனந்தபுரத்தில் கேரளா இறகுபந்து அகாடமி சார்பில் 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான 4-ம் ஆண்டு அகில இந்திய பெண்கள் இறகுபந்து போட்டி நடைபெற்றது.
இப் போட்டியில் தேசிய அளவிலான அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெண்கள் கலந்துகொண்டனர்.
இரட்டையர் பிரிவினருக்கான இறுதி போட்டியில் வள்ளியூர் எஸ்.டி.என். இறகுபந்து கிளப் அணியும் அசாம் மாநில அணியும் மோதியது. எஸ்.டி.என். இறகுபந்து கிளப் அணியில் அதன் கோச்சர் பிரியா கவின்வேந்தன் மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த போன்ஷியா ஆகியோர் ஜோடி சேர்ந்து ஆடினர்.
இந்த அணி அசாம் அணியை தோற்கடித்து முதலிடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் ஒற்றையர் பிரிவு போட்டியில் பிரியா கவின்வேந்தன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
வெற்றி பெற்ற வீராங்கனைகளை வள்ளியூர் வணிகர் நலச்சங்க தலைவர் எட்வின் ஜோஸ், இந்திய மருத்துவர் சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் சங்கரவெங்கடேசன், அரசு மருத்துவர் கவிதா சங்கரவெங்கடேசன், வழக்குரைஞர்கள் கல்யாணகுமார், ராஜஜெகன், தெட்சணமாறநாடார் சங்க கல்லூரி பேராசிரியர்கள் பாலமுருகன், புஷ்பராஜ், மேக்ரோ ஐ.டி.இ. தாளாளர் பொன்தங்கதுரை உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
- தி.மு.க. இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
- பல்லடம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டன.
பல்லடம்:
பல்லடம் அருகே தி.மு.க. இளைஞரணி சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது .இந்த போட்டியில் பல்லடம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 40 அணிகள் கலந்து கொண்டன. அதில் இறுதி போட்டியில் கரைப்புதூர் சி.ஆர்.அணி வெற்றி பெற்றது. இதன் பரிசளிப்பு விழாவில்,கிழக்கு ஒன்றிய கழக இளைஞரணி அமைப்பாளரும் பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவருமான பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.வெற்றி பெற்ற அணிகளுக்கு கருணாநிதி பிறந்த நாள் நினைவு கோப்பையை திருப்பூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் இல.பத்மநாபன் வழங்கினார். சான்றிதழ்கள் மற்றும் பரிசு தொகையை பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாவட்டத்தில் இருந்து போட்டியை பார்வையிட செல்லும் வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது.
- இதில் முதல் 25 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும்.
நெல்லை:
44-வது ஒலிம்பியாட் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் 180 நாட்டை சேர்ந்த சுமார் 1,800 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த போட்டியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பாக 15 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு தனி தனியாக போட்டிகள் நடத்தி அதில் முதல் இடம் பெறும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் போட்டியை கண்டு களிக்கவும் மற்றும் அங்கு வீரர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது .
அதன்படி நெல்லை மாவட்டத்தில் இருந்து ஒலிம்பியாட் சதுரங்க போட்டியை பார்வையிட செல்லும் வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள பல்நோக்கு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அனைத்து இந்திய சதுரங்க பெடரேஷன் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் அனுமதியோடு நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர். நாளையும் போட்டி நடைபெறுகிறது. இதில் முதல் 25 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படும். நுழைவு கட்டணம் கிடையாது.
- செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து, கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டும், கல்லூரியின் நிறுவனர் டாக்டர் இ.எம். அப்துல்லா பிறந்த நாளை முன்னிட்டும் மாநில அளவிலான கைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் கல்லூரி மைதானத்தில் நடந்தது.
தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா முன்னிலை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், மாணவ-மாணவிகளும் கல்வி மட்டுமல்லாது விளையாட்டு துறைகளிலும் இணைத்துக் கொண்டு முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. மாணவ-மாணவிகள் தனக்கென்று தனித்துவம் வாய்ந்த விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.
செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் பெரியசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரியாஸ் முகம்மது நபி கலந்து கொண்டார். கைப்பந்துப் போட்டிகளில் 18 அணிகளை சேர்ந்த வீரர்களும், கிரிக்கெட் போட்டிகளில் 17 அணிகளை சேர்ந்த வீரர்களும், மாவட்ட அளவிலான பெண்கள் பிரிவு கைப்பந்து போட்டிகளில் 7 அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
கைப்பந்து போட்டி ஆண்கள் பிரிவில் சென்னை செயின்ட்ஜோசப் பொறியியல் கல்லூரியும், பெண்கள் பிரிவில் ராமநா தபுரம் வேலுமனோகரன் கலைக்கல்லூரியும் கோப்பையை கைப்பற்றியது. கிரிக்கெட் போட்டியில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி கோப்பையை வென்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்க ளுக்கு சிறப்பு விருந்தினர் ரியாஸ் முகம்மது நபி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.
- ராமநாதபுரம் மாவட்ட தடகள போட்டி நடந்தது.
- வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் சீதக்காதி ஸ்டேடியத்தில் சங்க செயலாளரும், மாநில சங்கத்தின் இணைச் செயலாளருமான இன்பாரகு ஏற்பாட்டில் நடந்தது. டாக்டர் ஆசிக் அமீன் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாக அலுவலர் ஹாசித், ஆடிட்டர் ராமகிருஷ்ணன் போட்டியை தொடங்கி வைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வருகிற 15-ந்தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்று ராமநாதபுரம் மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் இன்பா ரகு தெரிவித்தார்.
- மாவட்ட அளவில் சதுரங்க போட்டி நடந்தது
- தொட்டியம் வெற்றி விநாயகா கல்லூரி வளாகத்தில்
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா சதுரங்க கழகம் துவக்க விழா தொட்டியம் வெற்றி விநாயகா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சதுரங்க கழக தலைவர் டி.கே. அமிர்தாசந்திரசேகர் தலைமை வகித்தார். செயலாளர் புவனேஸ்வரி தனபால். இணைச்செயலாளர் தொட்டியம் ஸ்ரீ சபரி வித்யாலயா வக்கீல் ஜி. பிரசாந்த், பாலசமுத்திரம் விஜயலட்சுமி மெட்டல் . முத்துக்குமார், பொறியாளர் மாரியப்பன் நிர்வாக குழு உறுப்பினர்கள் நாகப்பா, மருதை கார்த்திகைபட்டி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரவி, எம். புத்தூர் தீபன்ராஜ், ஓவிய ஆசிரியர் செந்தில் குமார், சந்திரகுமார், பார்கவி, முருகானந்தம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க கௌரவ பொறுப்பாளர்கள் தொட்டியம் வட்ட அனைத்து வணியர்கள் சங்க தலைவர் பிரபு, நிர்மலா, ஆட்டோ மொபைல்ஸ் பூபதி, ஆசிரியர்முகமதுஃபரூக், உள்பட சதுரங்க கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்பு நடந்த நான்காவது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தொட்டியம் வெற்றி விநாயகர் கல்லூரி சேர்மன் ஜி.சேகர், கல்லூரி முதல்வர்கள் அருள்குமார், சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் தொட்டியம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்தையன் வழங்கினார் .
- ெசன்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
- வரும் 12-ந் தேதி தொடங்குகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தார்சாலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க சுற்றுச்சு வர் மருத்துவமனை ஆய்வகம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் வருகிற செப்டம்பர் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. 150 நாடுகளை சேர்ந்த பார்வையாளர்கள் போட்டியை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசும், தமிழக டென்னிஸ் சங்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.3 கோடி மதிப்பீட்டில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மின்விளக்குக் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.1.5 கோடியில் மைதானத்த சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மைதானத்தில் ஓராண்டு காலத்துக்குள் 8 புதிய டென்னிஸ் கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் பெரும் அச்சுறுத்தை ஏற்படுத்தி வருவதால் நீர் நிலைகளை மாசுபடுத்தாத வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நீர் நிலையை பாது காக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளிநாட்டு மரங்களை தமிழகத்தில் நடுவதற்கு கோர்ட் தடை விதித்துள்ளது. அதன்படி வனத்துறை அமைச்சகம் சார்பில் வனங்கள் நிறைந்த பகுதிகளில் வெளிநாட்டு மரங்களை அகற்றுவ தற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விரைவில் நடவடிக்ைக மேற்கொள்ளப்படும்.
விதிகளைமீறி செயல்படும் கல் குவாரிகளை ஆய்வு செய்து தவறு நடந்திருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
- திருவாலவாயநல்லூரில் கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
- இதில் 85 அணிகள் கலந்து கொண்டன.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் அருண் மற்றும் சாலினி நினைவு கபடி குழு இணைந்து கபடி போட்டியை நடத்தியது. 85 அணிகள் கலந்து கொண்டன. சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
முதல் பரிசை குருவித்துறை வல்லவன் பார்ட்னர்ஸ் அணியும், 2-வது பரிசை காடுபட்டி அணியும், 3-வது பரிசை செல்லூர் அணியும், 4-வது பரிசை பேட்டை கிராம அணியும் பெற்றது. பரிசுகளை ஊராட்சி மன்ற செயலாளர் சகுபர்சாதிக், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேகர், முத்தையா, பாசறை மற்றும் ஜே.பி.கிளப் உள்ளிட்டோர் இணைந்து வழங்கினார். முன்னதாக போட்டிகளை சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் தொடங்கி வைத்தார்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், சித்தாலங்குடி ஒன்றிய கவுன்சிலர் தனபால் முன்னிலை வகித்தனர்.
- உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஊராட்சி மற்றும் செட்டியாபத்து காமராஜர் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி 3 நாட்கள் நடத்தியது.
- முதலிடம் பிடித்த செட்டியாபத்து அணிக்கு ரொக்க பரிசு ரூ.10 ஆயிரத்து 75 யை உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருங்கை மகாராஜா வழங்கினார்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஊராட்சி மற்றும் செட்டியாபத்து காமராஜர் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து 75-வது சுதந்திர தின விழாவையொட்டி மாவட்ட அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி 3 நாட்கள் நடத்தியது. போட்டியை உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
உடன்குடி யூனியன் துணைச் சேர்மன் மீராசிராசுதீன், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், துணைத் தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜம்புராஜ் வரவேற்றார். மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டது.
இறுதி போட்டியில் செட்டியாபத்து காமராஜர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், சுவிசேஷபுரம் அணியும் மோதியது.இதில் செட்டியாபத்து அணி வெற்றிபெற்றது. முதலிடம் பிடித்த செட்டியாபத்து அணிக்கு ரொக்க பரிசு ரூ.10 ஆயிரத்து 75 யை உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருங்கை மகாராஜா வழங்கினார்.
வெற்றி கோப்பையை குலசேகரன்பட்டினம் ஊராட்சிதுணைத்தலைவர் கணேசன் வழங்கினார்.2-வது இடம் பிடித்த சுவிசேஷபுரம் அணிக்கு ரொக்க பரிசு ரூ. 7 ஆயிரத்து 75 யை செட்டியாபத்து ஊராட்சி மன்றதலைவர் பாலமுருகன் வழங்கினார்.
வெற்றி கோப்பையை கடாச்சபுரம் ஸ்டன்லி ஞானப்பிரகாசம் வழங்கினார். 3-வது பரிசு பெற்ற கூடுதாழை அணிக்குரொக்கபரிசு ரூ.5 ஆயிரத்து 75 யை செட்டியாபத்து ஊராட்சிதுணைத் தலைவர் செல்வகுமார் வழங்கினார்.
வெற்றி கோப்பையை முருகன் வழங்கினார். 4-ம் இடம் பிடித்த கொங்கராயின் குறிச்சி அணிக்கு ரொக்க பரிசு ரூ.3 ஆயிரத்து 75 யை செட்டியாபத்து ராம்குமார் வழங்கினார். வெற்றி கோப்பையை கிறிஸ்தியாநகரம் ராஜேஷ் வழங்கினார். ஆட்ட நாயகன் பரிசுகளை செட்டியா பத்து ஊராட்சி எழுத்தர் கணேசன் வழங்கினர்.
- ஆலங்குளம் அருகில் உள்ள இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் மாநில அளவிலான 2 நாள் கோ-கோ விளையாட்டு போட்டி நடந்தது.
- போட்டியில் ஓசூர், ஈரோடு, கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, கோயம் புத்தூர், மற்றும் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து 65-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகில் உள்ள இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் சொக்கலிங்கம், ஞானப்பூ நினைவு சுழற்கோப்பைக்கான 2-ம் ஆண்டு மாநில அளவிலான 2 நாள்கோ-கோ விளையாட்டு போட்டி அப்பள்ளியின் மைதான த்தில் நடந்தது.
இந்தப் போட்டியில் ஓசூர், ஈரோடு, கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, கோயம் புத்தூர், மற்றும் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து 65-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.வெற்றி பெற்ற அணியின ருக்கு பரிசளிக்கும் விழா நடந்தது.
இந்த விழாவுக்கு பள்ளியின் தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.பள்ளியின் தாளாளர் புனிதா செல்வி முன்னிலை வகித்தார்.முதல்வர் பிரவீன்குமார் வரவேற்றார்.
தமிழ் ஆசிரியர் ஜான்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக நெல்லை வனத்துறை சரக அலுவலர் சரவணகுமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினரை பாராட்டி சான்றிதழ்,பரிசு மற்றும் சுழற்கோப்பையினை வழங்கினார்.
விளையாட்டு போட்டியினை உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துக்குமார், திலீப்குமார்,சுதா,நிர்வாக அலுவலர் சிவக்குமார், அலுவலக பணியாளர்கள் லட்சுமி,சாந்தி,நர்மதா, செவி லியர் மெர்சி ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர். விழா முடிவில் தமிழ் ஆசிரியை ரேவதி நன்றி கூறினார்.
- மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற்றது.
- வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.
சேலம்:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற்றது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சேலம் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் பெண்கள் பிரிவில் சேலம் மாவட்ட அணி 2-வது இடமும், ஆண்கள் பிரிவில் சேலம் மாவட்ட அணி 3-வது இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.
இதற்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி வெற்றி பெற்ற சேலம் மாவட்ட அணியில் இடம்பிடித்த வீரர், வீராங்கனைகளை பாராட்டி பரிசு வழங்கினார்.
இதில் கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர் ராஜாராம், இணை செயலாளர்கள் சீனிவாசன், வடிவேல், வேங்கையன், நிர்வாகி நந்தன், தொழில் அதிபர் விஜயராஜ், பயிற்சியாளர் அருள் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.






