search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி அருகே  மின்னொளி கைப்பந்து போட்டி- செட்டியாபத்து அணி முதலிடம்
    X

    கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.


    உடன்குடி அருகே மின்னொளி கைப்பந்து போட்டி- செட்டியாபத்து அணி முதலிடம்

    • உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஊராட்சி மற்றும் செட்டியாபத்து காமராஜர் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி 3 நாட்கள் நடத்தியது.
    • முதலிடம் பிடித்த செட்டியாபத்து அணிக்கு ரொக்க பரிசு ரூ.10 ஆயிரத்து 75 யை உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருங்கை மகாராஜா வழங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஊராட்சி மற்றும் செட்டியாபத்து காமராஜர் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து 75-வது சுதந்திர தின விழாவையொட்டி மாவட்ட அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி 3 நாட்கள் நடத்தியது. போட்டியை உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    உடன்குடி யூனியன் துணைச் சேர்மன் மீராசிராசுதீன், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், துணைத் தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜம்புராஜ் வரவேற்றார். மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டது.

    இறுதி போட்டியில் செட்டியாபத்து காமராஜர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், சுவிசேஷபுரம் அணியும் மோதியது.இதில் செட்டியாபத்து அணி வெற்றிபெற்றது. முதலிடம் பிடித்த செட்டியாபத்து அணிக்கு ரொக்க பரிசு ரூ.10 ஆயிரத்து 75 யை உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருங்கை மகாராஜா வழங்கினார்.

    வெற்றி கோப்பையை குலசேகரன்பட்டினம் ஊராட்சிதுணைத்தலைவர் கணேசன் வழங்கினார்.2-வது இடம் பிடித்த சுவிசேஷபுரம் அணிக்கு ரொக்க பரிசு ரூ. 7 ஆயிரத்து 75 யை செட்டியாபத்து ஊராட்சி மன்றதலைவர் பாலமுருகன் வழங்கினார்.

    வெற்றி கோப்பையை கடாச்சபுரம் ஸ்டன்லி ஞானப்பிரகாசம் வழங்கினார். 3-வது பரிசு பெற்ற கூடுதாழை அணிக்குரொக்கபரிசு ரூ.5 ஆயிரத்து 75 யை செட்டியாபத்து ஊராட்சிதுணைத் தலைவர் செல்வகுமார் வழங்கினார்.

    வெற்றி கோப்பையை முருகன் வழங்கினார். 4-ம் இடம் பிடித்த கொங்கராயின் குறிச்சி அணிக்கு ரொக்க பரிசு ரூ.3 ஆயிரத்து 75 யை செட்டியாபத்து ராம்குமார் வழங்கினார். வெற்றி கோப்பையை கிறிஸ்தியாநகரம் ராஜேஷ் வழங்கினார். ஆட்ட நாயகன் பரிசுகளை செட்டியா பத்து ஊராட்சி எழுத்தர் கணேசன் வழங்கினர்.


    Next Story
    ×